Monday 14 January 2019

நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்


                                                                                                                                                                                         முருகா சரணம்     


                                                             
அன்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.குருஜியின் பொற்பாதங்களா பணிந்து கொண்டாடுவோம்.பணியைத் தொடர்வோம்  



                              நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்                                   
                   தில்லி  திரு இராமமூர்த்தியின் அனுபவங்கள்                             
                                               பகுதி ..2


                                                                                             


அன்பர் ராம மூர்த்தியின் நினைவலைகள் ,நினைவலைகள் மட்டுமல்ல.பொக்கிஷம்.DOCUMENTATION.குருஜியின் மகிமை.ஆதார பூர்வமான விஷயங்கள்.பதிவுகள்.

அடுத்து குருஜியின் தாள ஞானம் ,அட்சரபிரயோகங்கள் ,அங்கதா லங்களுக்கு பெயர் சூட்டியது ,அன்பர்களுக்கு எளிய முறையில் கற்பித்தது போன்றவைகளை  மிக அருமையாக நினைவு கூர்கிறார் 

அதற்கு முன் சில வார்த்தைகள்

தாள விளக்கங்களை பற்றி விரிவாக இசை வழிபாடு புத்தகத்தில் காணலாம்.திருப்புகழ் பாக்களில் 1008 சாந்த வகைகள் இருப்பதாக பெரியோர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

503  பாடல்களில் பல பாடல்கள் திஸ்ர ரூபகம்,திஸ்ர த்ருபுடை ,திஸ்ரத்ருவம் , ,சதுஸ்ர த்ருபுடை ,சதுஸ்ர ரூபகம்,சதுஸ்ர ஏகம் ,சதுஸ்ர ஜம்பை,சதுஸ்ர அட,சதுஸ்ர மட் யம் ,ஸத்ஸர துருவம்,கண்ட த்ருவம் ,கண்ட ஜம்பை,மிஸ்ர அட,சங்கீர்ண சாபு காலங்களில் அமைந்துள்ளன

.அதை தவிர திஸ்ர நடை,கண்ட  நடை,மிஸ்ர நடை  போன்ற நடைகளில்

,மற்றும் 1/4இடம்,1/2 இடம் ,3/4 இடம் தள்ளி எடுப்பு.

இவை எல்லாம் தாண்டி பெரும்பாலான பாடல்கள் அங்க .தாளங்களில் .31/2, 41/2  ,51/2  ,6,  61/2,  71/2  ,81/2  ,9  ,91/2,  11  ,111/2,  121/2, 131/2 .14  ,151/2,  16 181/2, 20..............35 அட்சரங்களில் அமைந்துள்ளன.பாடல்களின் பொருளுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன.

'அவா மாரு வினா "  "வதன சரோருக " "புயவகுப்பு " போன்ற பாடல்களில் அமைந்துள்ள அங்க தாளங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. 

கணித மேதை ராமானுஜம் பற்றி சொல்வார்கள்."எண்கள் அவர் முன்னே எப்பொழுதும் நின்றுகொண்டு, அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்கள் இடத்தில் அமருமாம்."அதுபோல்பெருமானின் அருளால்  நம் குருஜியின் தேவைக்கு ஏற்ப எல்லா அட்சரங்களும்  ஓடி வந்து தங்கள் ஸ்தானத்தில் அமர்ந்ததிருக்க வேண்டும்.

இசை மேதை T .R .சுப்ரமண்யம்" ராகங்களை,பாடல்களை கற்றுக்கொள்வது வெகு சுலபம்.ஆனால்,தாள ஞானம் எல்லறோருக்கும் அமையாது.கடவுள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் "என்று அடிக்கடி கூறுவார்.

கச்சேரிகளில் ,ரசிகர்கள் சுலபமான ஆதி தாளத்தை போடுவதையே எவ்வளவு  சிரமப் படுகிறார்கள் என்று நாம் காண்கிறோம்.

ஆனால் இங்கு அதெல்லாம் கிடையாது.அன்பர்கள் வெகு சுலபமாக,வெகு நேர்த்தியாக,நளினமாக,அமைதியாக, யதார்த்தமாக,அழகாக ,லாகவமாக தாளம் போட்டு மெய்ம்மறந்து வழிபாடுகளில் இசைப்பதை காண்பவர்கள் பிரமிக்கிறார்கள் ,வியக்கிறார்கள். சிலர் தாளம் போடாமலே லயத்தில் லயித்து பாடுபவர்களும் உண்டு. பாடலுக்கு ஏற்ற தாளமா? அல்லது தாளத்துக்குகேற்ப பாடல்களா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா ?கொடி அசந்தால் காற்று வந்ததா ?  என்பது போல்  புரியாத புதிர்தான்.

அன்பர்களின் சிலர் தாள நுணுக்கங்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை என்பதுதான் உண்மை.அவைகளை நன்கு உணர்ந்து கற்று வழிபாடுகளில் வெளிப்படுத்தினால் அது தனி அனுபவம் தான்.
                                                                                                     
தாள விளக்கத்திற்கு என்று தனியாக வகுப்புகள் கிடையாது.பின் அன்பர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? எல்லாவற்றிற்கும் ஒரே  பதில்".குருவருளும் ,திருவருளும் தான்."

"குருவருளை" ராமமூர்த்தி விளக்குவதை பார்ப்போம்.


                                                                                                     



   
1970 களில்  புய வகுப்பை சொல்லி கொடுத்துவிட்டு ,முதன் முறையாக சரோஜினி நகர் பிள்ளையார் கோவிலில் பஜனை பாடினார்.பாட ஆரம்பிப்பதற்கு முன்னால் ,ஈஸ்வர அய்யரிடம் ,குருஜி "புய வகுப்புன்னு ஒண்ணு பாடறதாக இருக்கேன்"..என்று மேற்கொண்டு பேசுவதற்கு முன்னால் ஈஸ்வர அய்யர் "பேஷ் பேஷ் பாடு "என்று மிருதங்கத்தை தட்ட தொடங்கி விட்டார்.குருஜி சில வினாடிகள் தயங்கி விட்டு பாட ஆரம்பித்தார்.முதல் stanza முடிவதற்குள் ,ஈஸ்வர அய்யருக்கு எண்ணிக்கை தவறி விட்டது.மிருதங்கத்தை கீழே வைத்து விட்டு ராகவா,ராகவா,இது என்ன தாளம்? அனுமார் வால் மாதிரி போயிண்டே இருக்கே '.........குருஜி பாடுவதை நிறுத்தி விட்டு சங்கீத பாஷயில் இவ்வளவு ஏகம்,திஸ்ரம் ,கண்டம் என்று விளக்கமாக சொன்னார்."பேஷ்,பேஷ் என்று   

                                                                   



                                                                                                                             தொடரும்



உதவி அன்பர் மாலதி ஜெயராமன் 

                                                          முருகா சரணம்                                                                                                                              

No comments:

Post a Comment