Sunday, 27 January 2013

தைப்பூச நன்நாள்


தைப்பூச நாளின் பிண்ணணி என்ன?

இரண்டு புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.  ஒன்று தாரகாரசுரனை வதம் செய்த நாள் தைப்பூச நாள். பிறகு எட்டு மாதங்கள் சென்ற பின்னரே ஐப்பசியில் சூர ஸம்ஹாரம் நடந்தேறியது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

மற்றொன்று சற்று சுவாரசியமானது.  சிவபிரான் பார்வதிதேவிக்கு பிரணவ உபதேசம் செய்த சமயம் அதை மறைந்து இருந்து கேட்டாராம் முருகபிரான். ஒட்டுக் கேட்பது தவறாயிற்றே. ஆக தன் மகனே அந்த தவறைச் செய்திருந்தாலும் அதற்கான தண்டனை பெற்றே தீர வேண்டும் எனக் கருதி அச்சிறுவனை தவ செய்யச் சொன்னராம் தாய் தந்தையர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று நம் குட்டி பையனும் தவம் செய்து அதை நிறைவேற்றிய நாளே தைப்பூச நன்னாள் என்று கூறப்படுகின்றது. முருகனுக்கு உண்டான விசேஷ நாட்களிலெல்லாம் பக்தர்கள் காவடி எடுத்தாலும் தைப்பூசக் காவடி மிகவும் சிறப்பானதாகும்.
அவர்களும் விரதமிருந்தே காவடி எடுக்கிறார்கள்.  “பூசத்துப் பழையதை பூனை கூட தின்னாது” என்று பாட்டி சொல்லக் கேட்டிடுகிறேன்.

நாமும் நம்முடைய பிறவிப்பிணி என்ற சாபத்தை போக்க முருக பெருமானை வேண்டுவோம். 

இன்று பௌர்ணமியாக இருப்பதால் முருகனையும் சந்திரனையும் இணைத்துப் பார்ப்போமா?

கண்களு(ம்முகங்களும் சந்திர நிறங்களும்  
கண் குளிர என் தன் முன் சந்தியாவோ?

என  அருணகிரிநாத பெருமான் வேண்டுவது நினைவில் வருகின்றது. அது என்ன ‘சந்திர நிறங்களும்’. சந்திரனுக்கு பல நிறங்களா?   ஆமாம், பலநிறங்கள் உண்டு. முக்கியமாக ஆறு நிறங்கள் உண்டு. அவையானவை

1. பெளர்ணமி அன்று =  மஞ்சள் (Yellow)
2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு =  வெளிர் நீலம் (Blue moon)
3. மாலையில் =  வெள்ளை (White)
4. காலையில் =  சாம்பல் (Grey)
5. குளிர் காலத்தில் =  காவி (Orange)
6. அபூர்வமாககிரகண காலங்களில் =  சிவப்பு (Red)

நிலவு -  பூமியின் சுழலுக்கேத்தாப் போல தன் நிறத்தை மாற்றி மாற்றி இன்பம் குடுக்கும் -  குளிர்ச்சிஅதே போல் முருகனின் ஆறு முகங்கள் -  அறு வண்ணங்கள், நம்ம மனச்சுழலுக்கு ஏற்றார் போல் மாறி மாறிக் குளிரப் பண்ணும். இதுவே சந்திரநிறங்கள்”!
சந்திர நிறங்களும் கண்குளிர எந்தன்முன் சந்தியாவோஎன  வேண்டுவதின் காரணம் நமக்கு புலனாகிறது.
அந்த அழகான திருச்செந்தூர் திருப்புகழின் பொருளை மீண்டும் ஒரு முறை சுவைப்போம்.
திருச்செந்தூர் மேவிய முருகா,  கமலத்திப் மேல் அமர்ந்திருக்கும் பிரமன் படைத்தஉலகம் ஆடமற்ற உலகங்களும் சுழற்சி செய்ய, நீ போருக்குப் புறப்பட்ட போதுதேவர்களின் மனதில் பொங்கிய மகிழ்ச்சியால் அவர்களும் ஆட, அந்த மகிழ்ச்சியில் நீய்உம் ஆட, உன் ஆட்டத்தைஅதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் திருமாலும் , ஆடல் வல்லானாகிய உன் அப்பனும் பார்த்து மகிழ, என்ன இது? ....செந்தூரில் மட்டுமா? அந்த குஞ்சு பதங்கள் என் மனத்திலுமல்லவா கொஞ்சி நடனம் செய்கின்றன! கந்தவேளேஅப்படி நீ ஆடுகையில் உன் தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சுகிறது ....மணி மகுடம் தெரிகிறதுகையில் வேல் தெரிகிறதுபன்னிரு கண்களும் ஆறிரு தோள்களும் தெரிகின்றனவேமுருகாஎன்னுள் நீ ஆட ஆடுக ஆடுகவே! ஆடி என் பிறவிப் பிணியை போக்கடிப்பாயாக.

சாந்தா
சுந்தரராஜன்


Tuesday, 22 January 2013

SONG LIST FOR THIRTY THIRD PADIVIZHA - 2013


33வது படிவிழா - 2013 

26 ஜனவரி 2013

At Thiruchembur Murugan Templeபடி விழா முதன்  முதலில்1917ம் ஆண்டு  திருத்தணியில் தான் துவங்கப்பட்டது என்று அறிகிறோம். துவக்கியவர் அருள் திரு வள்ளிமலை ஸ்வாமிகள் தான்.டிசம்பர் 31ம் தேதி இரவில் பாடியவண்ணம் படியேறி மறு நாள் புத்தாண்டில் முருகப்பெருமானை தரிசிப்பதே நோக்கம்.இன்று வரை தொடருகிறது.மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமி அருளாசியுடன் 1981ம் ஆண்டு குருஜி தலைமையில் துவங்கி இப்பொழுது 33ம் படிவிழா      26.01.2013அன்று நடை பெறுகிறது.அழைப்பிதழ் முன்பே வெளியிட்டுள்ளோம்.அன்பர்களின் வேண்டுகோளின்படி அன்று இடம் பெறும்   பாடல்களின் தொகுப்பை வெளியிடுகிறோம்.
 அன்பர்கள் நிகழ்ச்சியின் முன்பே வந்து குருவின் ஆசிபெற்று பாடல்களுடன்   திருப்படிகள் ஏறி முருகப்பெருமானின் தரிசனம் பெற அன்புடன் அழைக்கிறோம். 

எண்
பாட்டு
பாட்டு
புதிய  ண்
பழைய எண்
1.      
கைத்தல
1
1
2.      
பக்கரை
2
2
3.      
உம்பர் தரு
3
3
4.      
நினது திரு.
4
4
அகவல்
5.      
நெஞ்சக்
அநுபூதி
6.      
ஆடும் பரி
7.      
உல்லாச
8.      
வானோ
9.      
வளைபட்ட
10.                         
மகமாயை
11.                         
முத்தைத்.
5
5
12.                         
திணியான
அநுபூதி

13.                         
கெடுவாய்
14.                         
அமரும்
15.                         
மட்டூர்
16.                         
கார்மா
17.                         
தடக்கை
10
10
18.                         
இயலிசையில்
17
16
19.                         
படர்புவி
40
33
20.                         
நாலுமைந்து
36
29
21.                         
சேமக் கோமள
28
22
22.                         
தண்டையணி
30
24
23.                         
தந்த பசி
31
25
24.                         
கூகா என
அநுபூதி
25.                         
செம்மான்
26.                         
முருகன் தனி
27.                         
கைவாய்
28.                         
முருகன் குமரன்
29.                         
அபகார
57
47
30.                         
தமரு மமரு
77
65
31.                         
புடவிக்கணி
45
455
32.                         
வரதாமணி
90
77
33.                         
சீயுதிர
72
427
34.                         
அவாமரு
93
78
35.                         
கடிமாமலர்
99
84
36.                         
பேராசை
அநுபூதி
37.                         
யாம் ஓதிய
38.                         
உதியா
39.                         
வடிவும்
40.                         
அரிதாகிய
41.                         
செகமாயை
106
90
42.                         
ஒருருவாகிய
113
96
43.                         
இருமலு
117
97
44.                         
உடையவர்கள்
119
425
45.                         
அரகர
115
99
46.                         
கனைத்ததிர்
128
108
47.                         
எனக்கென
123
104
48.                         
ஈனமிகுத்துள
146
121
49.                         
கவடுகோத்தெழு
356
298
50.                         
கருதா
அநுபூதி
51.                         
காளைக்.
52.                         
அடியைக்.
53.                         
கூர்வேல்
54.                         
மெய்யே
55.                         
பச்சையொண்கிரி
246
206
56.                         
தவளரூப (from para 5)
172
144
57.                         
ஒருவழிபடாது
238
200
58.                         
அன்பாக
177
149
59.                         
மலைக்கு நாயக
170
482
60.                         
பக்தர் கணப்ரிய
180
152
61.                         
குருதி தோலி
359
484
62.                         
குடல் நிணமெ
307
256
63.                         
ஆதாரமிலேன்
அநுபூதி
64.                         
மின்னே
65.                         
ஆனா அமுதே
66.                         
இல்லே
67.                         
செவ்வான்
68.                         
நீதான்
266
223
69.                         
அவசியமுன்
261
218
70.                         
அறமிலா
256
214
71.                         
உரியதவ (from para 5)
239
201
72.                         
தோலெலும்பு
209
176
73.                         
பாழ் வாழ்வு
அநுபூதி
74.                         
கலையே
75.                         
சிந்தாகுல
76.                         
சிங்கார
77.                         
விதிகாணும்
78.                         
சீதமலம்
367
307
79.                         
வண்டுபோல்
275
230
80.                         
தீராப்பிணி
291
243
81.                         
பசையற்ற
311
490
82.                         
இல்லையென
313
456
83.                         
இறவாமல்
204
171
84.                         
நாதா குமரா
அநுபூதி
85.                         
கிரிவாய்
86.                         
ஆதாளியை
87.                         
மா ஏழ்
88.                         
வினை ஓட
89.                         
திருமகள்
155
129
90.                         
கொத்தார்
429
-
91.                         
பரிமள மிக
445
375
92.                         
இமராஜன்
448
376
93.                         
காணாத தூர
460
385
94.                         
சாகா தெனையே
அநுபூதி
95.                         
குறியைக்.
96.                         
தூசா மணியும்
97.                         
சாடும் தனி
98.                         
கரவாகிய
99.                         
சரக்கேறித்த
471
394
100.                    
காவியுடுத்தும்
482
405
101.                    
வாதினை
501
424
102.                    
ஆனாத ஞான
334
278
103.                    
என் தாயும்
அநுபூதி
104.                    
ஆறாறையும்
105.                    
அறிவொன்
106.                    
தன்னந் தனி
107.                    
மதிகெட்டு
108.                    
உருவாய்

"நித்தமு மோது வார்கள் சித்தமெ வீடதாக
    நிர்த்தம தாடு மாறு            முகவோனே
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
   சித்திர ஞான பாத                மருள்வாயே"