Tuesday 4 February 2020



                            மும்பையில் தை  பூசம்  வைபவம்

மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.

 இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். 

சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.

தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

உண்மை தேவியின் சாபத்தை அடைந்த முருகன் சாபம் தீர கடும் தவம் புரிந்தார் அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார்.

யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார் 

வழக்கம் போல் நம் தைப்பூச இசை  வழிபாடு வைபவம்  அன்று கரோடிய நகர் பஜன் சமாஜ் வளாகத்தில் பிப்ரவரி 8 ம் நாள் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளதுஅன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை முதலே  கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது


                                                                                 


                                   முருகா சரணம் 

Saturday 18 January 2020


                          மும்பை படி விழா ......2020


                                                                                                         



                                திருசெம்பூர் திருமுருகன் திருக்கோயில்                                                             
திருத்தணியில் 1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.

துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

"துரை" என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்"என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழாக்கள் ஜனவரி மாதத்தில் நாட்டின் பல பாகங்களில் முருகன் திருத்தலங்களில்நடந்து வருகின்றன..
மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமிஅருளாசியுடன்1981ம்ஆண்டுகுருஜிதலைமையில் துவங்கி இப்பொழுது 40ம் படிவிழா 26.01.2020 அன்று மும்பை செம்பூர் செட்டா நகர் திரு முருகன் ஆலயத்தில்  நடை பெறுகிறது.


குருஜியும்,செந்தில்துறவியும்தொடர்ந்துமும்பையில்ஜனவரி 26ம்நாள் அன்பர்களை படி ஏற்றி  சன்னிதானத்தில் திருப்புகழ் பாக்களை சமர்ப்பணம் செய்து அன்பர்களுக்கு அருளாசி வழங்கி வந்தது மும்பை அன்பர்கள் செய்த பாக்கியம். அவர்களின் பொற்பாதங்களை வணங்கி திருப்புகழ் பாடல்களுடன் திருப்பி படிகளில் ஏறி பெருமானின் அருள் பெறுவோம்


                                                                                    அழைப்ப்பிதழ் 

                                                                                         


படி விழாவில் இடம் பெரும் பாடல்களின் தொகுப்பு 

 




முருகா சரணம்                                                        

Friday 6 December 2019

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில் செய்தி மடல் ..1

                                                                                      

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில்  செய்தி மடல் ..1

                                                                                                     

அன்பர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தி மடல் 



"நமது குருஜியின் அருளாசியாலும் செந்திலாண்டவனின் பெருங்கருணையினாலும் அன்று திருச்செந்தூரில் ஆரம்பித்து, வரிசையாக , அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டுகளிலும் திருத்தணியிலும், சுவாமிமலையிலும், திருப்பரங்குன்றத்திலும் வள்ளி கல்யாணத்தை பாரோர் போற்றும் வண்ணம் அவன் சிறப்பாக நடத்திக் கொண்டான். நீங்கள்மனமுவந்துவழங்கியபொருளுதவியால் தான் இவ்வளவும் இனிதே நடந்திருக்கிறது. ந்த வரிசையை நிறைவு செய்யும் வகையில் இந்த வருடம் சோலை மலையில்,  அவன் சித்தப்படி , 29-12-2019 ஞாயிற்றுக் கிழமை வள்ளி  கல்யாணம் நடக்க இருப்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறோம். 

அவன் கல்யாணத்திற்காக அதி நவீன குளிர் சாதன வசதியுடன் கூடிய மிகப்பெரிய  கல்யாண மண்டபத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளான். அனைத்து ஏற்பாடுகளுமே செவ்வனே நடந்து வருகின்றன.  இந்த கல்யாணத்திற்கு வழக்கத்தை விட அதிகமான செலவாகும் . நீங்கள் மனமுவந்து செந்திலாண்டவனை மனதில் தியானித்து அவன் உணர்த்திய வண்ணம் பொருளுதவி செய்ய பிரார்த்திக்கிறேன். 

இத்துடன் வழக்கம் போல் நாம் தயாரித்துள்ள கூகில் சீட் இணைத்துள்ளேன். நீங்கள் விரும்பும் பொருளை கூகில் பக்கத்தில் எழுதி,  பொருளை அன்பர் கோபியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

அன்பர் கோபியின் வங்கி விபரம்

P.C.GOPI
STATE BANK OF INDIA 
KALPAKKAM BRANCH
SB/AC. # 10912124541
IFS # SBIN0002219

GOOGLE SHEET

https://docs.google.com/spreadsheets/d/144mqsYfAZkdRVkN3zbYuk1Z2v0wqy3zTQ6o4rEqzyYc/edit#gid=0

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்"
குருஜி தலைமையில் பழநி  திருத்தலத்தில் விமரிசையாக நடை பெற்ற வள்ளி கல்யாண வைபவத்தை தொடர்ந்து திருச்செந்தூர்,திருத்தணிகை,சுவாமிமலை,திருப்பரங்குன்றம் அறுபடை தலங்களில் அமோகமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு  "நிறைவு செய்யும் வகையில்"என்ற  பழமுதிர்சோலையில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார் 

ஆனால் நாம் "நிறைவாக " என்ற சொல்லுக்கு அறுபடை தலங்களில் நிறைவு என்றே கருதுகிறோம்.மற்றும் "மன நிறைவு" என்றும் பொருள் கொள்ளலாம்.நம் பெருமானின் வைபவங்கள்தொடர்ந்துகொண்டேதான்இருக்கும்.
அவ்வகையில் அடுத்து பஞ்சபூத தலங்களில் தொடரவேண்டும் என்ற விண்ணப்பத்தை பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.

நம் மணி சார் சென்ற ஆண்டு திருப்பரங்குன்றம் வள்ளிகல்யாண வைபத்தில் அழைப்பு விடுத்தார்.சமீபத்தில் நிகழ்ந்த மஹாகந்த சஷ்டி விழாவிலும் மறு  அழைப்பு விடுத்துள்ளார்.செயலில் இறங்க வேண்டியவர்கள் அன்பர்கள்தாம்.

வழக்கம்போல் குடும்ப சகிதமாக.குறிப்பாக தங்கள் அடுத்த வாரிசுகளுடன் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.மற்றும் தங்கள் காணிக்கை ,தங்கள் குடும்பத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் எண்ணிக்கை விபரங்களை முன் கூட்டியே கூகிள் சீட் மூலமாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.இது விழா அமைப்பாளர்களுக்கு நன்கு திட்டமிட்டு செவ்வனே செயல்பட பேருதவியாக இருக்கும்.



                                                                                  அழைப்பிதழ் 
                                                                                                       

பழநி வள்ளி கல்யாண வைபவத்தில் குருஜியின் அருளுரை 


                                                                                                                               

                                                                                                               

வள்ளி கல்யாண பாடல்கள் (LYRICS)

https://drive.google.com/open?id=1sm-d78-OvkbwEbizjyzTUL6uXvlvSDDY

வள்ளி கல்யாண பாடல்கள் காணொளியில் 

 https://www.youtube.com/watch?v=tmYpnWjdFY4



                                                                                         முருகா சரணம்                                                                                                                                                                                                   

Sunday 1 December 2019

அபிராமி அந்தாதி - 44


                                                அபிராமி அந்தாதி - 44


                                                                                       



அபிராமி அந்தாதி - 44
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே:

அன்பரின் விளக்கவுரை 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - 
நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
பரமசிவத்துக்கு வீடு என்பது அவருடைய மனதே. அதில் அம்பாள் வீற்றிருந்து அவரைத் தொழில்படுத்துகிறாள். சங்கரன் என்ற சொல்லுக்கு ஹிதத்தைச் செய்கிறவன்.
மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று அர்த்தம்.
அபிராமியும் தவமிருந்து நல்ல கணவனை வரித்துப் பெருமை கொண்டாள். அவள் " மாதவள் " - இத் தொடரைப் பதிமூன்றாம் பாடலில் பயன்படுத்தியுள்ளார். பார்வதியாய் இருந்தபோதும், காமாட்சியாய் இருந்தபோதும், தாட்சாயிணியாய் வாழ்ந்த போதும் அவள் சிவனை அடையத் தவம் செய்தாள். எனவே சிறப்பாகத் தவளே எனப்பட்டாள். " அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண் பிள்ளை " . ( 1109) " ஆருயிர் ஆயும் அருந்தவப் பெண் பிள்ளை" ( 1110) என்றெல்லாம் திருமூலர் சக்தி செய்த தவங்களாகக் குறிப்பிடுகிறார்.  
சங்கரனாரது மனையானது ' மங்கலம் ' பெற்றிடவும்,மாட்சி உற்றிடவும், அவர் மனையில் பானைபிடித்தவள் பாக்கியசாலியாக இருத்தல் வேண்டும். அதற்குப் பார்வதி அன்னையைத் தவிர வேறு யார்க்கும் உரிமையும்கிடையாது; தகுதியும் கிடையாது. ஏனெனில் பரமேசுவரனைத் திருமணம் செய்து கொள்ளப் பார்வதிதேவி தவம் செய்தாள். ' அவரே கணவராக வேண்டும் ' என்று தனது ஏழாவது வயதில் தவக்கோலம் மேற்கொண்டு, அவரைப் பெறத்தவம் இயற்றித் தவள் என்ற சிறப்பினைப் பெற்றாள்.   
அம்பிகை உயர் தவம் செய்து, " மாதவள் " என்ற மாண்பினைப் பெற்று, சங்கரனாரின் மனைமங்கலமானாள். இந்த மனைமங்கலம் எவ்வாறு மாட்சிபெற்றுச் சிறப்புடன் நடக்கிறது ? அவர் ஈட்டி வந்ததைக் கொண்டு, தனது தவலிமையினால் எல்லோர்க்கும் உணவளிக்கின்ற தகைமை கொண்டவளே காமாட்சி அன்னை. " ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் அன்னை " என்று ஐம்பத்தேழாவது பாடலிலே அம்பிகையின் மனைமங்கல மாட்சியை அபிராமிபட்டர் சொல்லப்போகிறார். வீட்டுக்குள்ளே இருப்பவர்க்கு மட்டும் உணவளிக்கும் எல்லைகட்டிய வாழ்வு மட்டும் ஒரு பெண்ணுக்கு உகந்ததாகாது. அந்த எல்லை தாண்டி அவள் அறங்கள் புரிய வேண்டும். ஒன்றல்ல ; இரண்டல்ல - முப்பத்திரண்டு அறங்களைப் புரியவேண்டும். அவளே மனைமாட்சியினள்.காஞ்சிவாழ் காமாட்சியை முப்பத்திரண்டு அறம்புரியும் அன்னையாகச் சொல்வர். 

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் -
அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
தவம் இயற்றிச் சிவனைத் திருமணம் கொண்டவள், இவருக்கு அன்னையும் ஆகின்றாள். குடும்பத்தில், வாழ்வின் ஒரு கட்டத்தில், மனைவியானவள் மக்களைப் பெற்று அவர்களைப் பராமரிக்கும் அன்னையாவது போல், அவள் கணவனையும் குழந்தையாக எண்ணிச் சீராட்டுகின்ற தன்மையாய், கணவனும் குழந்தையாக மாறி, அவளைத் தாயாக்குகின்றான். மனைக்கிழத்தியும் கணவனைக் குழந்தையாகப் போற்றும் தாயாகின்றாள் - என்பது உலகியல் உண்மை.  
திருமூலர் சித்தரில் தலையானவர். அவர்,
 "சக்தியானவள்.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே. ( திருமந்திரம். 1178)  "


ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - 
ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்
அப்பைய தீஷீதர் தனது ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதியில்
" யத் பூஜநஸ்துதி நமஸ்க்ருதி பி.ப்பவந்தி
ப்ரீதா : பிதாமஹரமேச ஹராஸ்த்ர யோபி :
தேஷாமபி ஸ்வககுணைர் தததீம் வபூம்ஷி
தாமீச்வரஸ்ய தருணீம் சரணம் பரபத்யே - என்கிறார்.
("அம்பிகையை பூஜிப்பதையும், ஸ்தோத்தரிப்பதையும், மீண்டும்,மீண்டும் நமஸ்காரம் செய்வதையும் கண்டு, பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் மிகவும் ப்ரீதி அடைகிறார்கள். பிரும்மாதி தேவர்களுக்கு அம்பிகையே சத்துவம்,தமஸ், ரஜஸ் ஆகிய தனது முக்கோணங்களால் சரீரங்களை அளித்தாள். )
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே -
 இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
நாமும் அந்த ஆதிபராசக்தி தேவியை, சங்கரனாரின் மனை மங்கலமாக திகழும் அபிராமியை, உலகோர் அனைவருக்கும் அமுது செய்விக்கும் அன்னையின் பாதங்களில் சரணாகதி அடைவோமா!!
அபிராமி சரணம்!!
அபிராமி சரணம்!!

Tuesday 19 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 30



                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  30



जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ||

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராத

ம்ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |அஹம் சாதிபாலோ வான் லோதாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச

இந்த ஸ்லோகத்தில் முருகனை தன்னுடைய அப்பா அம்மாவாக நினைச்சு ஆச்சார்யாள் சரணாகதி பன்றார்.
.
‘ஹே தேவசேனாதி நாதா’தேவர்களுடைய சேனைக்கு அதிபதியே.

ஜநித்ரீ’ – அம்மாவோ,

 ‘பிதாச’ – அப்பாவோ,

 ‘ஸ்வபுத்ராபராதம்’ – தன் குழந்தைகள் செய்த அபராதத்தை , 

‘ஸஹேதே ந கிம்’ – பொறுத்துக்கிறது இல்லையா? 

 ‘ததா’ – அப்படியே ,

 ‘அஹம் சாதிபால:’ – நானோ ரொம்ப சின்னக் குழந்தை,

 ‘பவான் லோக தாத:’ – நீங்கள் உலகத்துக்கே அப்பா ,

‘ஹே மஹேச’ – பரமேஸ்வரா,

ஸமஸ்தம் அபராதம் க்ஷமஸ்வா’ – என்னுடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள் 

இந்த பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் ‘அம்மையும் அப்பனுமாக’ இருக்கா. அவா இரண்டு பேருமே ஆச்சார்யாளுக்கு இந்த முருகப் பெருமான் கிட்டேயே தெரியுறதுனால, ‘முருகப் பெருமானே! நீயே என்னுடைய அம்மை அப்பன் ‘ ன்னு சொல்லி, ‘உங்கிட்ட நான் வேண்டிக்கிறேன். என்னுடைய பிழைகளைப் பொறுத்து எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’ அப்படின்னு சொல்றார்.

பகவானை அம்மை அப்பனா பார்த்து அவா பண்ண அநுக்கிரஹத்த நினைக்கிறது நிறைய மகான்கள் பண்ணி இருக்கா.

 திருவாசகத்துல நிறைய அந்த மாதிரி பாடல்கள் வரும்.

"அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?"

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆயதேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!"

இராமலிங்க அடிகளார் இந்த மாதிரி ‘அம்மையே அப்பா’ன்னு பாடியிருக்கார். 

"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்."

(திருவருட்பா: ‘அருட்ஜோதி நிலை’)

“தடித்தஓர் மகனைத் தந்தை 
ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனி ஆற்றேன்.”(திருவருட்பா: ‘பிள்ளைச் சிறு விண்ணப்பம்’)
அருணகிரி நாதரும் கந்தர் அநுபூதியில,

"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே."  என்று போற்றுகிறார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ 

Friday 15 November 2019

அபிராமி அந்தாதி - 43




                                                      அபிராமி அந்தாதி - 43


                                                                      
அன்னையின் அழகினை ரொம்ப அருமையா வர்னனை பண்ணியிருக்கார் பட்டர். 
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே
அருஞ்சொற்பொருள்:
பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு  


பரிபுரச் சீறடி - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே;

நம்மை எல்லாம் பரிபாலனம் செய்யும் திருவடி அம்மையின் திருவடி. அவையும் சின்னஞ்சிறியவை. இதைத்தான், 'பரிபுரச் சீறடி' என்று குறித்தார் பட்டர்.  

உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும் காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்!!
நம் அன்னையின் திருவடிகள் சிறியன: அத் திருவடிகளில் அவள், வேதமாகிய சிலம்புகளை அணிந்துள்ளாள். அவள் மெல்ல நடக்கையில், அவளது திருவடியின் சிலம்புகள் வேத நாதமாய் ஒலிக்கின்றன. பரிபுரச் சீறடி கொண்டவள் அவள்.
பரிபுரம் என்றால் சிலம்பு. முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல், இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது. காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள். லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர். 'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை,
வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனாது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார்.
சிவனிடம், "ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி, ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.
 "பாசாங்குசை (பாசம்  அங்குசம் )
பாசத்தினால் தான் பிள்ளைகளை இணைத்துத் தன்னிடம் ஈர்த்து வைத்திருக்கிறாள். அத்துடன் தன் உள்ளத்து பாசத்தையும் கைவழி காட்டுகின்றாள். அங்குசம் ஆணவத்தை அடக்கும் கருவி. பாசம் கொண்ட தாய். தனது பிள்ளைகளின் ஆணவத்தினையும் அடக்க வல்லவள்; ஆவணத்தினை அடக்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு உடைய ள் அவள்.  
அன்னை அபிராமி பாசம் ( அல்லது ஆசை) என்னும் கயிற்றை தனது இடது பின்கையில் தாங்கியிருப்பது பாசத்தைக் காட்டும் பண்பு உடையவள் அன்னை என்று சொல்லுகிறது.
அங்குசம் என்பது யானையை அடக்க அதன் பாகன் பயன்படுத்தும் தொரட்டி. யானை மிகவும் பலசாலியானது. அதற்கு மதம் பிடித்தால் அடக்கப் பயன்படும் ஆயுதம் தொரட்டி. எல்லாவற்றிற்கும் மூலமாகிய மலம் ஆணவம். அதற்கு யானையை உவமையாகச் சொல்வது வழக்கம். அகங்காரம் என்னும் மதயானையை அடக்க நம்மால் இயலாது. அது அவள் அருளினால் தான் முடியும். இந்த மதயானையை அடக்கும் பாசாங்குசத்தை அவள் ஏந்தியிருப்பது இதற்கு அடையாளம்.
மேலும் காமத்தில் வசப்படுத்தும் மாயா சொரூபியும், அதனின்று நீக்கும் ஞானசொரூபியுமாக விளங்குகிறாள் அன்னை பிராமி. முதல் வேலை மன்மதனுக்கு. இரண்டாவது வேலை ஞானக்கொழுந்தனாகிய கணபதியின் மூலம் நடக்கிறது. இதனாலே தான் கணபதியின் கையில் பாசாங்குசம் காணப்படுகிறது. அகங்காரம் அழிய. அன்னையை பாசாங்குசம் ஏந்தியவளாகத் தியானிக்க வேண்டும்.
அன்னை அபிராமியின் உருவத் தியானத்தினால் ஆணவம், மாயை,கண்மம் என்ற மும்மலமும் அழிந்து, அன்னையின் அன்பு என்னும் அருளினால் இன்பம் உண்டாகும் என்பதை அபிராமிபட்டர் இந்தப் பாடல் மூலம் சொல்கிறார்.
அன்னையைச் சொல்கின்ற போது, அவளது கைகளில் பஞ்சபாணம், பாசாங்குசம் என்றார்.ஏன்? கருப்புச்சிலை என்று அபிராமிபட்டர் சொல்லவில்லை. அந்தச்சிலை என்ற வில் எங்கே போயிற்று ? வில்லைச் சொல்லாமல் விட்டாரே என்று நாம் பேதுறுகிறோம். ' சொன்னேன் ' என்கிறார் அவர். அந்தக் கரும்புவில், எரிபுரை மேனி இறைவரிடம் பொருப்பு வில்லாயிற்று. 
எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். “தரணியில் அரணிய” என்ற பாடலில் “எரிபுரை வடிவினள்” என்று அம்மையை விளிக்கிறார்.
இது விந்தை! இன்னும் ஒரு விந்தையையும் இந் பாடலில் காண்போம். அம்பாளின் மூன்று கைகளைப் பக்தர் விவரித்தார். ஒரு கையில் அங்குசம் ; இன்னொரு கையில் பாசம் ; மூன்றாவது கையில் பஞ்சபாணங்கள் என்றார்.நான்காவது கையினைச் சொல்லாமல் விட்டுவிட்டார். நான்காவது கையினை, அவளது வலப்பாகம் கொண்ட சங்கரனாரின் கையில் உள்ள பொருப்புச் சிலையுடன் சேர்த்தார். அன்னைக்குள்ள மூன்று கைகளைச் சொல்லி, எரிபுரை மேனியரின் நான்கு கைகளில் ஒரு கையை மட்டும் சொன்னதால், இறைவனின் செம்பாகத்தில் நம் அன்னை அரைப்பாகம் அல்ல, முக்கால் பாகம் பெற்றுவிட்டாள் என்று முழங்கத் தோன்றுகின்றது.
இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி _   அஞ்சும்படியாக   

 பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

 பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில். சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது. 

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.  

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.
எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது..
ஆகவே நாமும் அன்னையை அந்த பஞ்சபாணியை, எரிபுரை மேனியரின் இடப்பாகத்தில் இருப்பவளை நம் மனக் கண்களாலும், அகக் கண்களாலும் தரிசனம் செஞ்சுண்டே, தியானிச்சின்டே இருப்போமா!!

                                           அபிராமி சரணம்!!