Saturday 16 January 2016

குரு மஹிமை இசை ஜோன்புரி ராகம்



                                                    குரு மஹிமை  இசை ஜோன்புரி ராகம்


                                         "சிவனார் மனம் குளிர " என்று தொடங்கும் பாடல் 


                                                                                  நிரவல்                              
   



                                                  "அவாமருவினா "     என்று தொடங்கும் பாடல்                                                            
                                                                             




                                                   " தோளோடு மூடிய "  என்றுதொடங்கும் பாடல் 

                                                                               

                                           "வங்காளம் பாணஞ்சேல்"  என்று தொடங்கும் பாடல் 




                                                                                                                               

                                                "ஊனத்தசை " என்று தொடங்கும் பாடல் 


                                                                  சீகாழி திருத்தலம் 

ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.


காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர்

இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.

இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.

வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், "பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.

அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.

இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.

முரூகப் பெருமானே திருஞான சம்பந்தராக அவதாரம் செய்து அருளினார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையே அருணகிரியார் ஒருருவாகிய பாடலில் 

"ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
               எழில்தருமழகுடன் கழுமலத்து   உதித்தனை"


என்று  உறுதி செய்கிறார்.

புராண வரலாறு

மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது

இறைவன்

இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என 

மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் 

சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி 

தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு

 ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.


இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க 

மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.

விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக்

 கலக்கியதிருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் 

கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற

 திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.


                                                                                  பாடல் 

                                                                                       

                                              "ஓலமிட்டி "  என்று தொடங்கும் பாடல் 

                                                              நாகப்பட்டினம் திருத்தலம் 
                                                                        இறைவன் 

ÓÕ¸ý - µÕ Ó¸õ + ¬ÚÓ¸õ (2 ºýÉ¢¾¢¸û) 


®ŠÅÃý - ¸¡Â¡§Ã¡¸½ ŠÅ¡Á¢


«õÀ¢¨¸ - ¿£Ä¡Â¾¡ðº¢



                                                                                     
                                             "கைத்தருண ஜோதி "  என்று தொடங்கும் பாடல் 


                                                                                   


                                                                               முருகா சரணம் 




                                                                                 








Thursday 14 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்


                                                              பொங்கல் வாழ்த்துக்கள் 


          

       அன்பர்கள்அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 

                      என்றென்றும் முருகப்பெருமான் அருள் வேண்டுவோம் 

என்றென்றும் முருகப்பெருமான் அருள் வேண்டுவோம் 
                                                               முருகா சரணம் 

குரு மகிமை இசை ராமப்ரியா ராகம்


                                                   குரு மகிமை இசை ராமப்ரியா ராகம் 

                                              "வரதா மணி" என்று தொடங்கும் பாடல் 



"                                           சிரம் அம் கை " என்று தொடங்கும் பாடல்

                                                    வள்ளி மலை திருத்தலம் 

                                        "அமரும் அமரர் " என்று தொடங்கும் பாடல்
                                                            
                                                               திருமையிலை



  "                      பரவைக்கெத்தனை " என்று தொடங்கும்  பொது பாடல்


                                                                                       
"                                      மனை மக்கள் " என்று தொடங்கும்  பொது பாடல்                                                                                                                                                                 
                                                                                   
                                                                    முருகா சரணம் 

Wednesday 13 January 2016

திருப்புகழ் அன்பர்களின் " முக நூல் " தொடக்கம்



                                              திருப்புகழ் அன்பர்களின் " முக நூல் " தொடக்கம் 

                                                              ( முகநூலின் முகப்பு  படம் )






சென்ற மாதம் பெங்களூரில் நடை பெற்ற மூத்த அனுபவம்  வாய்ந்த அன்பர்களின் கருத்தரங்கின்  தாக்கத்தினாலும்,நமது அமைப்பின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பங்களை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தொலை நோக்குடனும்அன்பர்கள்  வேகமாக செயல் பட்டு நம்அமைப்புக்கென ஒரு முக நூலை உருவாகியுள்ளனர்.அது அன்பர்களின் கவனத்தை ஈர்த்து வேகமாக வளர்ந்து வருகிறது.

முக நூல் இயக்குனர் ,முக நூல் தொடங்குவதற்கான குறிக்கோளை மிக அருமையாக கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளார்.

"Thiruppugazh Anbargal launches its Facebook Page for the benefit the Thiruppugazh Anbargal spread all over the world and who follow the teachings of Guruji A.S. Raghavan …. Through this page, we wish to unite all the Anbargal throughout the world and request that they participate by providing information on events, classes and other news in your area for the benefit of all the members of this community


Please Like the page and invite other Anbargal in your contact list to come to the page and like the same.
A video on the History of Thiruppugazh Anbargal … an insight into the begining of the Thiruppugazh movement by Guruji Shri A.S.Raghavan ….



முக நூலின் குறியீடு

https://www.facebook.com/Thiruppugazh-Anbargal-341776189325994/


முருகப் பெருமானின் திருவருளாலும் குருவருளாலும் திருப்புகழ் அன்பர்களின் நீண்ட நாள் அவாவைத்  தணிக்கும் வண்ணம் உருவாகியுள்ள இந்த முகநூல் நம் அமைப்பின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.இந்த முகநூலை மற்ற பொது முகநூல்களைப் போல் கருதாமல் நம் குருஜியின் "குருபீடம் ' 'என்று மனதில் கொண்டு வணங்கி வரவேற்கிறோம்.

கடமை,கண்ணியம் ,கட்டுப்பாடு,குருஜியின் அன்பு அவிரோதம் கொள்கைகளை மனதில் கொண்டு  இந்த புனிதபீடத்தைஅன்பர்கள் தகவல்மையமாகமட்டும்கருத்தில்கொண்டுநம்பெருமான்,அருணகிரியார்,திருப்புகழ்,குருஜி,வழிபாடு,மற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட தகவல் களை மட்டுமே பதிவு செய்ய வேண்டுகிறோம்.

.நம் பெருமான்  நம் அன்பர்களின் மனத்தில் என்றென்றும் உறைகிறான் என்ற தெய்வீக உணர்வுடன் மற்ற அன்பர்களைப்பற்றி பொதுவாகவோ /தனிப்பட்ட முறையிலோ விமர்சனங்களை எழுதுவதை  முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்.

மற்றும்,அமைப்பின் நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்களையும்,விழா அமைப்பாளர்களின் சிறிய குறை ஏதேனும் இருந்தாலும்,அது பற்றி இந்த முக நூலில் எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்.

சுய விமர்சனம்,சுய கட்டுப்பாடு முதலிய அற நெறிகளை கடை பிடித்து,உன்னத நிலையை எட்டியுள்ள அன்பர்கள் இந்த முக நூல் பீடத்தையும் தனித்து நிற்கும்  ஒப்பற்ற உயர் நிலையில் இயங்கும் ஓர் அங்கமாக நிலை நிறுத்த ஒவ்வொரு அன்பரும் உறுதி பூண்டு செயல்பட பிரார்த்திக்கிறோம்.

மற்றும் நம் அமைப்பின் அதிகார பூர்வமான ஒரு WEBSITE நிறுவ வேண்டும் என்ற பல அன்பர்களின் கோரிக்கையை  நம் பொதுக்குழு பரிசீலித்து செயல் படவும் வேண்டுகிறோம்.


முருகா சரணம் 



Monday 11 January 2016

36ம் ஆண்டு மும்பை படி விழா .2016



                                    36ம் ஆண்டு  மும்பை படி விழா .2016



படி விழா பல பகுதி ஆலயங்களில் சிறப்பாக நடை பெற்று வருவதை நாம் நன்கு அறிவோம்.ஆனால் அதன் பின்னணியையைப்பற்றி ஒரு சிலரே அறிவர்.மற்றும் சுவாரஸ்யமானதும் கூட.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்தான்..அதுசுவாரஸ்யமானஒருதொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களைபோற்றியமக்களைக்கண்டுமனம்வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா திருத்தணியில்  இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார் நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 35ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.


இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது..படி விழாவில் கலந்துகொள்வது நம்கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..











இத் தருணத்தில் நம் குருஜி மும்பை படிவிழாவில் 2009ம்  ஆண்டு 

அன்பர்களை வழிநடத்திச்சென்றதை இணைக்கப்பட்டுள்ள

புகைப்படங்களில் காணலாம்.



































                                                                                 


                                                                                       


                                                                                      






                                                       






                                                                            







                                                                 




         







                                                                        






மற்றுமொரு மகிழ்ச்சி கரமான செய்தி. .முதன் முறையாக விராலிமலை முருகன் ஆலயத்தில் திருப்புகழ் அன்பர்கள் படிவிழா இதே தேதியில் (26.1.2016)
நடைபெற உள்ளது.


                                                        விராலிமலை திருத்தலம்

                                                                 கோபுர தரிசனம்






                                                                                  
விராலிமலை திருத்தலம் திருச்சியிலிருந்து 28.கிலோ மீட்டர் 

,புதுக்கோட்டையிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.கோயில் 

படிகளில் நடக்கும் போது  பல மயில்களின் அழகிய நடனத்தை கண்டு களிக்கலாம்.

இத்தலத்தில்  ஜனவரி 26 அன்று அன்பர்களின்  படி விழா நடைபெற 

உள்ளது.அருளாளர் பெங்களூர் நாகேஷ் அவர்களிடமிருந்து வந்துள்ள 

மகிழ்ச்சிகரமான செய்தி  கீழே .

"    I have been requested by Mani Sir, Chennai to


 communicate that  Padi Vizha will be held at

 Virali Malai on 26th January 2016
The function will start at 8 AM and likely to be over by 1

 PM."

அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற 

வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

Sunday 10 January 2016

தை பூசம்


                                      தைபூசம் இசை வழிபாடு 



தைபூசம் பற்றிய விரிவான தகவலை  அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையைகீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்

:ttp://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=              c53cbeca5d

வழக்கம் போல் நம் தைப்பூச இசை  வழிபாடு 24.1.2016   ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது, அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை யில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

                                                                                   

.

சென்னையில் 


தைபூசம் இசை வழிபாடு இதே நாளில் BESANTNAGAR.ரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 3 மணி க்கு தொடங்கி 5.30 வரை நடை பெற உள்ளது..சென்னை அன்பர்களும்,நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

முருகா சரணம்.









Saturday 9 January 2016

குருமஹிமை இசை திலங் ராகம்



                                                      குருமஹிமை  இசை  திலங் ராகம் 

                                                                         விருத்தம் 

                                                                                     
                                   "காலனார் வெங்கொடும்" என்று தொடங்கும் பாடல் 

                                                                                   
                                               "எத்தனை கோடி " என்று தொடங்கும் பாடல் 

                                                  
                               வைதீஸ்வரன் கோயில் திருத்தலம் 


முத்தமிழ் வித்தகர் குருஜி மேற்கொண்ட தல யாத்திரைகளில் இத்தலமும் 

ஒன்று.அவை பற்றி தளம் தோறும் தமிழ்க் கடவுள் என்ற தலைப்பில் 

கல்கியில் தொடராக எழுதி வந்தார்.வைதீஸ்வரன் கோயில் திருத்தலம்

பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை.



வைதீஸ்வரன் கோயில் என்று சொன்ன மாத்திரத்தில் அங்கே உறைகின்ற வைத்தியநாதசுவாமியும் அவனது தேவியான தையல்நாயகியும்தான் ஞாபகம் வருவார்கள். இந்த ‘வைத்யபதி’யும் அவனது ‘ஹ்ருதய விஹாரிணி’யான பாலாம்பிகையும், ஏராளமான தமிழர்களின் குலதெய்வம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொன்னதை மறந்து நாம் இரண்டையுமே போட்டு படாதபாடு படுத்திக் கொள்ளும் நேரத்தில், உடல் ரோகத்தையும் பவரோகத்தையும் (வினைப் பயன்) நீக்கி ஆட்கொள்வோர் இந்த தெய்வ தம்பதி!

அதனால்தான் அப்பர் சுவாமிகள்,
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை... என்று வைதீஸ்வரனைப் பாடுகிறார்.

உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப் பிள்ளையான பால முத்துக்குமாரன்தான்!

தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக் காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன். இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைதீஸ்வரன் கோயில்.


ஜடாயு என்கிற புள், ரிக் வேதம், முருகப் பெருமான் (வேள்), சூரியன் (ஊர்) ஆகிய நால்வரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இதற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். ‘வைதீஸ்வரன் கோயில்’ என்று ஆலயத்தின் பெயரால் ஊர் அழைக்கப்படுகிற தனிச் சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

மிகப்பெரிய கோயில். தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் நாளொரு விழாவும் பொழுதொரு சிறப்பும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ராஜகோபுரங்களைத் தரிசித்து, உயர்ந்த மதில்சுவர்களைத் தாண்டி உள்ளே போனால், சிறிய கோபுரங்களுடன் உள் பிராகாரங்கள்.
ஸ்தல விருக்ஷமாக வேம்பு நிற்கிறது. வேம்படிமால் என்றழைக்கப்படுகிறது. ஆதிவைத்யநாத ஸ்வாமி இதனடியில் ஒரு மிகச் சிறு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுற்றிலும் ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர், அன்னபூரணி தேவி சந்நிதிகள். தெற்குப் பாகத்தில் தையல்நாயகி சன்னிதி எதிரில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது. கிருதயுகத்தில் காமதேனு வைத்தியநாத பெருமாளுக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்ய, பெருகியோடிய அந்தப் பாலே தீர்த்தமாயிற்று என்பது புராணம். கலியுகத்து சித்தர்கள் தேவாமிர்தத்தால் செய்த அபிஷேகம் இங்கு கலந்ததாகவும் நம்பிக்கை. சித்தாமிர்த தீர்த்தம் என்ற பெயர் அதனால்தான் ஏற்பட்டது!

ஈசன் முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்க, அவனை இத்தலத்துக்கு வருவித்த முருகன், ‘குமரகுருபரன்’ என்ற மிக அழகான திருப்பெயருடன் இரண்டாம் பிராகாரத்தில் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை சமேதனாக ஆறுமுகங்களிலும் அழகு துலங்க, பன்னிரு விழிகளிலும் கருணை பெருக காட்சி தருகிறான். இந்த ஆறுமுகப் பெருமானின் உத்ஸவ மூர்த்திக்குத்தான் செல்வ முத்துக்குமாரசாமி என்று பெயர்!

பூமி மெச்சிடும் பெற்றோரின் செல்வத் திருக்குமரன் என்பதால் மட்டுமா அப்பெயர்? உடலாரோக்கியமாகிற செல்வத்தையும் மன ஆரோக்கியமாகிற செல்வத்தையும் அருளவல்ல தெய்வ தம்பதியை வந்தமரச் செய்த செல்வன்.


தமிழால் அவனைத் துதித்து இந்நாட்டின் இலக்கிய ஆன்மிகச் செல்வத்தைப் பெருக்கிய அருணகிரிநாதரையும் குமர குருபரரையும் ஆட்கொண்ட அருட்செல்வன்.

இசையுலகுக்கு, இணையற்ற மாணிக்கமாக ஒரு வாக்கேயக்காரரை வழங்கி ஞானக் கடவுளாக அவர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற செல்வன். அவன் பெயரையே தாங்கிய அந்த வாக்கேயக்காரர், முத்துஸ்வாமி தீக்ஷிதர். வடமொழி கீர்த்தனைகளில் திருத்தலச் சிறப்புகளையும் மூர்த்தி சிறப்பையும் தெய்வீக ஆற்றலுடன் பதிவு செய்து, ‘குருகுஹ’ என்று தமது இஷ்டதெய்வத்தின் நாமத்தையே முத்திரையாக்கிய பக்தர்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெற்றோரான ராமஸ்வாமி தீக்ஷிதர் - சுப்புலட்சுமி அம்மாள் தம்பதி, நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதிருந்தனர். வைதீஸ்வரன்கோயில் பாலமுத்துக்குமார ஸ்வாமி சன்னதியில் மனமுருக வேண்டி, விரதமிருந்து புத்ர பாக்கியம் அடைந்தனர். அந்த முருகன் நினைவாகவே மூத்த மகனுக்கு முத்துஸ்வாமி என்று பெயரும் வைத்தனர். பிற்காலத்தில் இந்த முத்துஸ்வாமி திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்து, முருகனை மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் பாடினார். இதே வைதீஸ்வரன் கோயில் ஈசுவரனான வைத்தியநாதன் பெயரிலும் பாலாம்பிகையின் பெயரிலும் கிருதிகள் அமைத்துள்ளார். அவற்றில் முத்துக்குமாரனையும் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூப முத்துக்குமார ஜனனி’ என்று ‘பஜரே ரேர்சித பாலாம்பிகா...’ கீர்த்தனையில் அந்த முருகனின் ரூப லாவண்யத்தை அழகாக ஞாபகப்படுத்துகிறார்.
குமரகுருபரனும் சரி, முத்துக்குமார சாமியும் சரி, சொல்லொணா அழகுடன் பொலிகிறார்கள்!

குமரகுருபர ஸ்வாமிகள் இந்த பால முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி, கொண்டாடியிருக்கிறார். தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட பிள்ளைத் தமிழைப் போலத்தான் அவனைக் கொண்டாடி அழைக்கிறது:

மதிவதன மாடவிரு காதில்நவ ரத்னமணி 

  மகரகுண் டலமாடநாள் 
  மலர்ப்புண்ட ரீகவிழி யாட அருளாட 
  மனமகிழ்மந்த காசமாடக் 
கதிருதயம் ஆயிரம் கோடியென வேயிலகு 
  காருண்ய மேனியாடக் 
  கனவஜ்ர புயவலயம் ஆடவண் டாடக் 
  கடப்பமலர் மாலையாட 
விதமணி இழைத்தபரி புரமாட சரணார 
  விந்தங்க ளாட நீள்கை 
  வெற்றிவே லாடமயி லாடவென் கண்முன்நீ 
  விளையாட ஓடிவருவாய் 
முதுமறைக ளாகம முழங்கு புள்ளூரனே 
  முக்கட் குருக்கள் குருவே 
  முத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால 
  முத்துக் குமாரகுருவே 

என்று குழந்தை முருகனை விளையாட அழைக்கும் ஆடல் பருவச் செய்யுள் போலவே அமைந்திருக்கிறது.


கதிருதயமாயிரம் கோடி ஒத்த அவன் அழகு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவன் உள்ளத்தின் காருண்யத்திலிருந்து அல்லவா அது பெருகுகிறது! அதனால்தான் அவன் மேனியையே ‘காருண்ய மேனி’ என்று வர்ணித்துப் பாடுகிறார் சுவாமிகள்.


கிருத்திகை, சஷ்டி தினங்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக நாட்கள். அர்த்தஜாம வழிபாடு முதலில் இந்த முருகனுக்குத்தான். அதன் பிறகுதான் வைத்தியநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது! பங்குனி மாத உத்ஸவத்தின்போது ஐந்தாம் நாள், செல்வ முத்துக்குமாரர் அம்மாவையும் அப்பாவையும் சென்று வழிபட்டு, ‘செண்டு’ பெறும் காட்சி மிக அழகான வைபவம்.

‘திருச்சாந்துருண்டை’ என்று இத்தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் 4448 வித நோய்களைக் குணப்படுத்த வல்லது என்பர். இந்தப் பிரசாதம் தயாரிக்கும் பந்ததியே விசேஷமானது. சுக்ல பக்ஷத்தில், நல்ல நாழிகை பார்த்து அங்கசந்தான தீர்த்தம் என்ற இத்தல தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதிலுள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து, இங்கே உள்ள ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும் சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து நீரையும் கலந்து பஞ்சாக்ஷர தியானம் செய்து கொண்டே பிசைய வேண்டும். அதை முத்துக்குமாரசுவாமி சந்நிதியிலுள்ள குழியம்மியிலிட்டு அரைத்து, சிறு கடுகளவு உருண்டைகளாக்கி தையல் நாயகி அம்மன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் இம்மருந்தை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்ண வேண்டும். ஈசனும் அம்மையும் இங்கே மருத்துவர்கள் எனில், மருந்தாளர் முத்துக்குமார சுவாமிதான்! அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே! என்றே பாடுகிறார்:

உரத்துறை போதத் தனியான 
  உனைச் சிறிதோதத் தெரியாது 
மரத்துறை போலுற் றடியேனும் 
  மலத்திருள் மூடிக் கெடலாமோ 
பரத்துறை சீலர் தவர்வாழ்வே 
  பணித்தடி வாழ்வுற் றருள்வோனே 
வரத்துறை நீதர்க் கொருசேயே 
  வயித்திய நாதப் பெருமாளே. 

அருளாளர் பசுபதி அவர்களுக்கு நன்றிகள் பல 

                                                  பாடல்
                                                                         
m
                                                                         
                               "மன கபாட " ன்று தொடங்கும் பொதுப் பாடல் 


                                                  
                                                                         

                                 "ஆராதகாதலாகி "என்று தொடங்கும்                                                                பொதுப்பாடல் 

                                                                           
                               "கீத வினோத "என்று தொடங்கும் பாடல்

                                       திருவருணை திருத்தலம் 

                             ம்
                                                                               
                                       அபிராமி பதிகம் ( விருத்தமாக )


                                                                  

                                       அபிராமி பதிகம் பாடல் 


                                                                     

                                                     அருள் வேண்டல்



                                                                      முருகா சரணம்