Tuesday 21 April 2015


                         காற்றினிலே வரும் திருசெந்தூர் வள்ளிகல்யாணம்.

வரும் 23-24 ம்தேதிகளில் திருச்செந்தூரில் நிகழ உள்ள வள்ளி கல்யாண வைபவத்தில்  கலந்து கொள்ளும் அன்பர்கள்  மகா பாக்யசாலிகள்.பல தவிர்க்க முடியாத காரணங்களாலும் உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணங்களாலும் கலந்து கொள்ள இயலாதவர்கள் மனக்குறையுடன் நேற்று வரை இருந்தார்கள் என்பதும் உண்மை.பெருமானின் அருளைப்பாருங்கள். SWASTHIKTV.COM  நிறுவனத்தினர் நிகழ்ச்சிகள் முழுவதையும் ஒளி பரப்ப இசைந்துள்ளார்கள்.இது அருள் பிரசாதம்.

வள்ளி கல்யாண அமைப்பாளர்கள் அனுப்பியுள்ள மகிழ்ச்சி கரமான செய்தியை கீழே வெளியிடுகிறோம்.அன்பர்கள் "பெருமான் நம் இல்லங்களுக்கு வந்து அருள்பாலிக்கிறான் "என்று பரவசமடைவது இயற்கை.அதை விட "நம் பெருமானின் சந்நிதானத்தில் நாம் மற்ற அன்பர்களோடு கலந்து கொள்கிறோம் என்ற உணர்வுடன் வைபவத்தை அனுபவிக்க வேண்டும்" என்பதே நம் பிரார்த்தனை.



"....வள்ளி கல்யாண மஹோற்சவத்தினை உலகில் முதன்மை ஸ்தானத்தினை  வகிக்கும் ஸ்வஸ்திக் டிவி நிறுவனத்தினர் 23 - 24 தேதிகளில் நேரடியாக முழுவதுமாக ஒளி பரப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள் (  SWASTHIKTV.COM - World's No.1 Devotional Web TV LIVE Telecasting our Valli Thirukalyanam on 23rd & 24th April '2015 . Watch it on WWW.SWASTHIKTV.COM ) வள்ளி கல்யாணத்தை அனைத்து அன்பர்களும் அவர்கள் வீட்டு கம்ப்யூட்டர்களில் மேற் காட்டிய ஐடியில் தொடர்பு கொண்டு அவசியம் பாருங்கள்"
முருகா சரணம் 

Wednesday 1 April 2015




                        பங்குனி உத்திரம் 2015. திருப்புகழ்  இசை வழிபாடு

             
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு மிக்க
விரதமாகும். இவ்விரதமானது பங்குனி மாதத்தில் வரும் உத்தர
நட்சத்திரத்தில்கடைப்பிடிக்கப்டுகின்றது.(தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்).எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.*
*இத்தினத்தில் முருகன் கோயில்களில் அநேகமாக வருடாந்த திருவிழாக்கள்
(மஹாற்சவம்) நடைபெறும்.*

பங்குனி ‪உத்திர‬ நன்னாளின் சிறப்புக்கள்.

1. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நன்னாள்
2 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.*
3. பங்குனி உத்தரத்தில் தான் தர்ம சாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தார்.*
4. சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார்.(ரதியின் பிரார்த்தனைக்குஇணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான்).*
5. பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பாவை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.*
*பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். (இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.)*
6. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்
7.மதுரையில்மீனாட்சிசுந்தரேஸ்வரர்திருமணம்நடந்ததும்,ராமர்,லட்சுமணன்சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்ததும், திருப்பரங்குன்றத்தில் முருகன்தெய்வானைதிருமணம்நடந்ததும்.ஆண்டாள்ரங்கமன்னார்திருமணம் நடந்ததும் சிறப்பு மிக்க பங்குனி உத்தர நன்னாளில்தான்.*
8. பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததும் பங்குனி உத்தரம் அன்றுதான்.*

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நம் இசை வழிபாடு செம்பூர் "சங்கராலையம்" ஆலயத்தில் 3.4.2015 அன்று மாலை 4.45 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் திருஅருளைப்பெற அழைக்கின்றோம்.

அழைப்பிதழ்
இணைக்கப்பட்டுள்ளது.