Monday 29 June 2015

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 திருப்புகழ்வழிபாடு புத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                    (476 முதல் 503 வரை )
                                                                                                                                                                                                                                                                                                                            
                                              வள்ளிமலை திருத்தலம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   வள்ளிமலைவடஆற்காடுமாவட்டத்தில்ராயவேலூருக்கு12மைல்தென்
கிழக்கில்,திருவல்லத்துக்குவடக்கேஉள்ளது.வள்ளிதேவியர்அவதரித்த  தலம்.மலைகளைக்குடைந்துஉருவாக்கிய பாலசுப்ரமணியஆலயம்
பாலாறு நதிக்கரையில் ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது.ஆலயத்தை அடைய 300 படிகளை மலைப்பாதையில் கடக்க  வேண்டும் . 

                                                                                                                                                                முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் 

திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு

 திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.


                                                     வள்ளிமலை ஸ்வாமிகள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

                                                   
             

          
முருகப்பெருமான்பேரில்அருணகிரிநாதர்பாடியுள்ளதிருப்புகழைத் 

தொகுத்துதமிழ்நாடெங்கும்அதைமீண்டும்

 பரப்பியவர்சச்சிதாநந்த ஸ்வாமிகள்ஆவார்
.திருப்புகழைப்பரப்பியதால்திருப்புகழ் ஸ்வாமிஎன்றும்அழைக்கப்பட்டார்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த

இம்மஹான் தமதுஞானத்திலும் சித்தி அடைந்தார்.

 திருப்புகழைப் பரப்புவதிலும்சித்தி அடைந்தார். 

இவரின்சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில் தான்.
  
அந்த மகானின் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம் 

             http://temple.dinamalar.com/news_detail.php?id=16781#  

                                                  திருப்புகழ்ப் பாடல் 

                வரிசை எண்  8                புத்தகவரிசை  எண் 192

ராகம் ராமப்பிரியா                                            தக தகிட   தகிட தக 



சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்


     சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம்

சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
     தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி

விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
     துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன்

வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
     வினவென்று அன்புதந் ...... தருள்வாயே

அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
     டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன்

அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
     கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா

மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
     திசையொன்ற மந்திசந் ...... துடனாடும்

வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
     வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.

                                        சொல் விளக்கம் 

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம்
என்பு திண் பொருந்திடு மாயம் ...                                                                                 

தலை என்னும் உறுப்பு, அழகியகை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவைநன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல்

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு ... 

சில துயரங்களும்இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர்,

செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி ... 

சிவந்த நெருப்பில்வெந்து உயிர் பிரிதல் உறும்படி,

விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர்
கொண்டு அலைந்து அழியா முன் ... 

சீக்கிரத்தில் நமன் போரிடவந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்குமுன்பு

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி ...

தீவினை யாவும்தொலைந்து நல்ல வினைகளே சேர,

நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே ...

 உனதுதிருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்துஅருள் புரிவாயாக.

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல்
அண்டர்கண்டு அமர் அஞ்ச ... 

(ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேகநிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி,

மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம்
பரந்து இரங்கிட ...

 நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப்பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி)பரந்து ஒலிக்க,

அன்று உடன்று கொன்றிடும் வேலா ... 

அன்று கோபித்து(அவனைக்) கொன்ற வேலனே,

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை
ஒன்ற ... 

தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட,
வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க,

மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற
மங்கை ...

 குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி)
மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின்

பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே. ... 

பாதத் தாமரைவரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.



உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல.



                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


                                     

முருகா சரணம்



                                                         murugukala                                                
murugu kala


makkal





koththaar



Kuruthi tholinaal






Gnaanaavi  372

Gnaa vi 372

Saturday 27 June 2015




          திருப்புகழ்  வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                           (476 முதல் 503 வரை )


                                                 திருக்கோணமலை   திருத்தலம்




திருக்கோணமலை இலங்கையில் வட கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள கடற்கரை தலம் தட்சிண கயிலாயம் என்றும் பெயர் பெற்றுள்ளது  ( மற்றவை  திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி,)தல புராணமும் உள்ளது.
திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியுள்ளார் 


                                                   திருப்புகழ்  பாடல்

                           வரிசை எண்  7        புத்தக வரிசை எண்  170  

ராகம் ஹம்ச வினோதினி அங்கதாளம் (9) தக திமி  தக திமி தகிட  தகிட தகதிமி
                                                                                          2                2          1/2        1/2         2

இப்பாடலுக்கு  பகுதி 5,6,7,8...3,4 வரிசையில் இசை அமைக்கப்பட்டுள்ளது 



1.விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ/
          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி

௨.மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்

3.கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே

4.கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்

5.மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே

6.வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே

7.நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

8.நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

                                      சொல் விளக்கம் 

விலைக்கு மேனியில் அணிக் கோவை மேகலை தரித்த
ஆடையும் மணி பூணும் ஆகவெ ...


தக்க விலை பெறும் பொருட்டு,உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து,ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும்

மினுக்கு மாதர்கள் இடக் காமம் மூழ்கியே மயல் ஊறி ...


மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில்
அழுந்தி,

மிகுத்த காமியன் என பார் உ(ள்)ளோர் எதிர் நகைக்கவே
உடல் எடுத்தே ... 


பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள்
என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து,


வியாகுல வெறுப்பு அதாகியெ உழைத்தே விடாய் படு
கொடியேனை ... 


துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக்கொள்ளும் கொடியவனாகிய என்னை,

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே
தவிக்காமலே ... 


கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை
என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி
தவிக்க வைக்காமல்,


உனை கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும்
ஒரு வாழ்வே ... 


உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும்ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து,

கதிக்கு நாதன் நி (நீ) உனைத் தேடியே புகழ் உரைக்கு
நாயெனை அருள் பார்வையாகவெ ... 


நற்கதியை தருகின்ற நாதன்
நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற
சிறியேனை உன் அருள் பார்வையால்


கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும் ... 


உன்திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு
அருள் புரிய வேண்டும்.


மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என
முகத்து ஆறு தேசிக ... 


எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமிஅம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறுதிரு முகங்களை உடைய குருமூர்த்தியே,
வடிப்ப மாது ஒரு குறப் பாவையாள் மகிழ் தரு வேளே ...


வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே,

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி
இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்
வரு முருகோனே ... 


வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள்,
அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த
பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,


நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை
தலத்து ... 


அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற
சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்

ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வருவோனே ... 


விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி*
என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,


நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்
கொ(ண்)டு பொடி தூளதா எறி ... 


நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும்கடல் வற்றிப் போய் அழிய,திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு(பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,

நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. ...


நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும்
பெருமாளே
.

* கிளிப்பாடு பூதி என்பதுதிருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல.



                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


முருகா சரணம் 

Thursday 25 June 2015



                     திருப்புகழ்  வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பாடல்கள் 


                                                           (476 முதல் 503 வரை )


                                                       கதிர்காமம்  திருத்தலம் 






இத்தலம் இலங்கைத்தீவில் தென் கிழக்கு பாகத்தில் ஊவா மாகாணத்தில்மாணிக்க கங்கை என்னும் நதிக்கரை அமைந்துள்ளது.மூலவர்:ஸ்கந்த முருகன்


கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனானஎல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனானதுட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம்நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சில குறிப்புக்கள்

கோயிலின் மூலவர் ஸ்கந்த முருகன்

ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.


              வரிசை எண்  6   புத்தக வரிசை எண்  154

ராகம்   வசந்தா       கண்ட சாபு      தக தகிட  1  1 1/2

                                பாடல் 

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் 
     சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய 

சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
     டருபரா சத்தியிற் ...... பரமான

துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
     சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு

துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
     சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ

புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
     புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன்

புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
     புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே

கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
     கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக்

கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
     கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.

                                     சொல் விளக்கம் 


சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல் சகல
யோகர்க்கும் எட்ட அரிதாய ...

 சரியை மார்க்கத்தில்*இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும்,நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு
முடியாததும்,

சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள் தரு பரா
சத்தியின் பரமான ... 

வேறுபட்ட சமயங்களினால் நெருங்கமுடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும்மேலானதானதும்,

துரிய மேல் அற்புதப் பரம ஞானத் தனிச் சுடர் வியாபித்த ...

யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத
நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய்,

நல் பதி நீடு துகள் இல் சாயுச்சியக் கதியை ... 

சிறந்த இடமாய்,குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை,

ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ ...

முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான்
பொருந்தி அடைவேனோ?

புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத் புருஷ ...

 மதில்சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே,

வீரத்து விக்ரம சூரன் புரள வேல் தொட்ட கைக் குமர ...

வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய
திருக்கரத்தை உடைய குமரனே,

மேன்மைத் திருப் புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே ...

மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள்செய்தவனே,

கரிய ஊகத் திரள் பலவின் மீதில் சுளைக் கனிகள் பீறிப்
புசித்து அமர் ஆடி ...

 கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின்
மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு,

கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் ... 

வாழை மரங்களிலும்,மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள

கதிர காமக் கிரிப் பெருமாளே. ...

 கதிர்காம மலையில் வீற்றிருக்கும்பெருமாளே.

* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

சிவஞான சித்தியார் சூத்திரம்.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல.


                                   குருஜியின் குரலில்  ஒரு விருத்தம்  





                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


முருகா சரணம் 

Tuesday 23 June 2015








                                        



                                    


                 திருப்புகழ்  வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 


                                                 பாடல்கள் 


                                        (476 முதல் 503 வரை )

                                    திருத்தணி திருத்தலம்





              வரிசை எண்  5     புத்தக வரிசை எண்  129


ராகம்  லதாங்கி .......    தாளம் ....கண்ட சாபு ....தக   தகிட  1  1 1/2

                                            
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
     கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
     கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
     றறவுநெக் கழிகருக் ...... கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
     றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
     பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
     புகலியிற் கவுணியப் ...... புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
     தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
     தணியினிற் சரவணப் ...... பெருமாளே.

                      சொல் விளக்கம்


கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை ...


பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின்
வழியே செல்லுபவர்களை,


கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத்
திருடரை ... 


கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி
விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத
குருடர்களை, திருடர்களை,


சமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல்
அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று ... 


சமயவாதிகளை (நான்)நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி
உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல்
,

அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே
அமிழ்தல் அற்று ...


குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும்
பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி,


எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு
அணுகிடப் பெறுவேனோ ... 


முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும்
நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை
அணுகப் பெறுவேனோ?


பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி
இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட ...


 அறிவுள்ள (கூன்)பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய
அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,


சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்
புலவோனே ...


 சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,
புகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய
திருஞான சம்பந்தரே,


தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்
புதல்வ ... 


அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,
திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,


நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு ...


சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும்
பூவைத் தருகின்ற


செருத்தணியினில்** சரவணப் பெருமாளே. ... 


திருத்தணிகையில்
(வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.




புகலி' சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில்
தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர்
திருத்தணியாக மாறியது



உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல





.

முருகா சரணம்