Monday, 29 May 2017

புதிய வரிசை எண் 486 வழிபாடு புத்தக எண் 67


                                                                 குரு மஹிமை ......இசை 
C

                                                            புதிய வரிசை எண்   486 வழிபாடு புத்தக எண்  67

                                                           "கருப்புவிலில் " என்று தொடங்கும் பாடல் 

                                                                                   சிந்துபைரவி  ராகம் 

                                                                                    பழனி திருத்தலம்  

                                                                                                            

                                                                                பாடலின் பொருளுக்கு 

                                                      http://thiruppugazhamirutham.blogspot.in/2012/09/67  


                                                                       17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                                                                                    அன்பர்கள் 

                                                                           

                                                                             குரு சமர்ப்பண  விழா 

                                                                                            22-4-2017


                                                                                                                                                                 
                                                           முருகா சரணம்                                                                                           

Thursday, 25 May 2017அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்   2

                                                       பாடல்

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே"

அன்பரின் விளக்கவுரை 

துணை என்பதற்குத் தொடர்ந்து வருவது, காப்பது, இடர் துடைப்பதுஎன்று பொருள் உண்டு. "உற்ற துணைவன்" என்று சொல்லுகிறோம்அல்லவா? அது போல. அத்தகைய துணையாய் விளங்குபவள்அபிராமி. அந்தத் துணையாய் விளங்குபவளே நான் தொழும்தெய்வமும், எனைப் பெற்ற தாயுமாகவும் இருக்கிறாள் என்றுஆரம்பிக்கிறார் பட்டர்.
எனக்குத் துணையாகவும், நான் தொழுகின்ற தெய்வமாகவும், பெற்றதாயைப் போலவும் இருக்கும் இந்த அபிராமியே வேதங்களின்சாரமாகவும் இருப்பவள்.
வேதத்தின் வேராகவும் கிளைகளாகவும், விரிந்து இருப்பவளும்அவளே.
கைகளில் குளிர்ந்த மலர்ப்பூங்கணையும், கரும்பால் ஆன வில்லையும்கொண்டவள் அவள். மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டுவிளங்கும் அந்த திரிபுர சுந்தரியே எனக்குத் துணையென அறிந்துகொண்டேன் என்று சொல்லுகிறார் பட்டர்.
தாயைப் போல அன்பு காட்டுபவர் உண்டா? லலிதா சஹஸ்ரநாமமும்‘ஸ்ரீ மாதா” என்றுதானே ஆரம்பிக்கிறது! அண்டசராசரத்து உயிர்கள்எல்லாம் உருவாவது அந்தத் தாயிடத்தில்தானே!
அன்பேவடிவினளாக, தாயாக இருக்கிறாள். துணையாய் வருகிறாள். அவள்கோர ஆயுதம் எதுவும் தரித்து இருக்கவில்லை. வாளும் வேலும்தரித்து இருக்கவில்லை. கைகளில் என்ன வைத்திருக்கிறாள்?கரும்பினால் ஆன வில்லைக் கொண்டிருக்கிறாள். மலர் அம்புகள்தரித்திருக்கிறாள். மெல்லிய பாசமும் அங்குசமும்கொண்டிருக்கிறாள்.
சாதாரணமாக, கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் கொண்டுஇருப்பது மன்மதன் மட்டும் தான். சகல உயிர்களுக்கும் காமத்தைஊட்டும் அந்தக் காமன் ஒரு முறை தேவ கார்யமாக,தேவசேனாதிபதியை - முருகனை - குமரனை தோற்றுவிக்கும்பொருட்டு அந்த பரம சிவன் மீதே மலர்க் கணை எய்தான்.முக்கண்ணன் கோபத்தால் சாம்பலும் ஆனான். தனது கணவனைஇழந்த ரதி, தேவியிடம் வந்து முறை இட்டாள். தேவியும் மிகக் கருணைகொண்டு, மன்மதனை உயிர்ப்பித்து அருளினாள். அந்த அருளின்அடையாளமாக, மன்மதனின் ஆயுதங்களையும் ஏற்று அருளினாள்.
மன்மதன் கைகளில் இருக்கும்போது காம இச்சையைத் தூண்டும்கரும்பு வில்லும் மலர் அம்புகளும், தேவியின் கைகளில் இருக்கும்போது அமைதியாய் அடங்கி நமக்கு நல்வழி காட்டுகின்றன.
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் கருத்துக்களே இவை!! லலிதாசஹஸ்ரநாமம், மிக அழகாகச் சொல்லுகிறது :
“ராகஸ்வரூப பாஷாட்யா” - ராகம் என்றல் “பற்று” , அம்பாள் மீது பற்று வரவேண்டும், அந்த்ஃஅ லோக மாதாவையே பற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் அவள் கயிற்றைவைத்துள்ளாள். அதை அவள் நம் மீது கட்டினால், நமக்கு அம்பாளைதவிர வேறொன்றும் தெரியாமல் போய்விடும்!!
“க்ரோதாங்காராங்குஷோஜ்வலா” – “குரோதம்” என்றல் “கோபம்”என்று பொருள். , அதனை மற்றுவதற்காகவே அவள் அங்குசம்தரித்திருக்கிறாள்
“மனோரூபேக்ஷு கோதண்டா” “மனம்” என்னும் கரும்பு வில்லைக்கையில் வைத்திருக்கிறாள்.
“பஞ்ச தன்மாத்ர சாயகா” - “சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம், கந்தம்ஆகிய 5 உணர்வுகளாகிய மலரம்புகளைத் தரித்டிருக்கிறாள் என்றுவருகிறது.
அது போல, இங்கு, அபிராமித் தாயும், நம் வினைகளைக் களையவேஅங்குச பாசம் தரித்து விளங்குகிறாள்.
நம் பாச வினைகளை எல்லாம் அறுத்து, நம் மதமாச்சரியங்களையெல்லாம் அழித்து நம்மையெல்லாம் நல்வழிப்படுத்தத்தான்.
மென் பாசமும்” என்னும் வார்த்தைகள் அழகானவை. தாய்,குழந்தைகளான நம்மைக் கட்ட, பாசம் வைத்திருக்கிறாள். ஆனாலும்.வலிக்கக்கூடாதே என்பதற்காக, அது, ‘மென் பாசமாம’. “மெல்லியபாசம்” மட்டுமே எங்கிறார் பட்டர்!
சுருதி" என்று குறிப்பிடப்படுபவை, வேதங்கள். அந்த வேதங்களின்வேராக, கிளைகளாக, சாரமாக, அந்த வேத மாதாவாகவே இருப்பவள்இந்த அபிராமி.
திரிபுரசுந்தரி ஆவதுன்னு சொல்றார் இல்லையா. இங்கதான் பட்டர் அன்னைக்கு திரிபுரசுந்தரி பேர் சூட்டறார். திரிபுரசுந்தரின்னா திரிபுரத்தையும் சம்ஹாரம் பண்ணிணாரே , அந்த திரிபுர சுந்தரனின் பத்தினிங்கறதுனால பட்டர் இப்படி பேர் சூட்டிருக்கார் போலருக்கு.
வேதாகம உபநிஷத்தினவாசியல்லவா அன்னை!!, அவளுக்கு எது உருவம்னு கேக்க தோணரது இல்லையா? பட்டர் அன்னைக்கு ஒரு உருவம் கொடுத்து, அவளுக்கு ஒரு பெயரையும் சூட்டி, நமக்கெல்லாம் அடையாளம் காட்டறார் இந்த பதிகத்துல.
அப்படிப்பட்ட அன்னை பரமேஸ்வரனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்குகின்றாள். ஆதிசங்கர பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரியில் அம்பாளைப் பற்றிக் கூறும் போது.
“சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |
அதஸ் - த்வா- மாராத்யாம் ஹரி - ஹர விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி ||
பரமேஸ்வரன் அம்பாளுடன் பிரியாமல் இணைந்திருப்பதனால் தான் இந்த உலகினை இயக்க சக்தியுடையவர் ஆகின்றார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் அசைவதற்குக் கூடத் திறமையற்றவர் ஆகிவிடுவார். எனவே ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ரர்களால் பூஜிக்கப்பட்ட உன்னை வணங்குவதற்கோ, அல்லது துதிப்பதற்கோ கூட புண்யம் செய்தவனால் மட்டுமே முடியும்! என்று கூறுகின்றார்.
அம்பாளைப் பற்றி நினைப்பதற்கும், அவளைத் துதிப்பதற்கும் அவளுடைய அருள் இருந்தாலன்றி முடியாது.
அம்பாளைப் பற்றி நம்மால் எவ்வாறு அறிய முடியும்? ஆனால் ஜகன்மாதாவான அந்தப் பரமேஸ்வரியே தன்னுடைய கருணை விழிகளால் நம்முடைய அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஞானம் என்ற வெளிச்சத்தினால் தன்னை அறியுமாறு செய்கின்றாள். தாமரையை விடவும்ம் மென்மையான அந்த அம்பாளின் திருவடிகளை இடைவிடாது ஆராதிப்பதே நம்மைத் துன்பமில்லாத சிவானந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கச்செய்யும்னு சொல்லித்தறார் பட்டர் நமக்கு.
அதனால நாம எல்லாரும் அந்த எம்பெருமாட்டியோட பாதார விந்தங்கள்ல சரணாகதி அடைய பிராத்திப்போமா. அவளே நம்மள நல்ல படியா வழி நடத்தி அழைச்சுண்டு போவா.

அபிராமி சரணம் சரணம்.

                                                                       குருஜி கற்பிக்கிறார்          


                                                                                 அன்பர்கள் 


                                                                                                                                                                              முருகா சரணம்                         

Wednesday, 24 May 2017

வைகாசி விசாகம்
                                                  வைகாசி விசாகம்                                                                                                     

வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. 

தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும். ஆறுமுகன் அவதாரம் 

“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்ட ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" 


என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது. 


அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே" என்று அருணகிரியார் பாடுவார். 

வழக்கம்போல் நம்  வைகாசி விசாகம் ஜூன் மாதம்  7ம் நாள் புதன்  கிழமை அன்று காலை 8.00 மணி சுப்ரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் முடிந்தபின், திருப்புகழ் இசை வழிபாடு நடைபெற உள்ளது 

.அன்பர்கள் முன்னதாகவே வந்து அர்ச்சனையில் கலந்துகொள்ள வேண்டுகின்றோம்.


அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

முருகா  சரணம் 
Wednesday, 17 May 2017


அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்   1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத் துணையே"


அன்பரின் விளக்க உரை 
உதிக்கின்ற அந்தக் கதிரோனின் ஒளிக்கீற்றை உச்சித்திலகமாய் அணிந்தவளாய், உணர்ந்து தெளிந்தோர் மதிக்கின்ற மாணிக்கம் போன்று விளங்குபவளாய், மாதுளம் மொட்டு போன்று இருப்பவளாய், தாமரை மலர்களிலே வீற்றிருக்கும் லஷ்மியும் சரஸ்வதியும் துதித்து வணங்கும் மின்னல் கொடி போன்று இருப்பவளாய், மெல்லிய இடை கொண்டவளாய், குங்குமத்தால் ஆனதென்ன போல் சிவந்த மேனி கொண்டவளாய் விளங்கும் அபிராமியே! எனக்கு எப்போதும் துணையாய் நீ இருக்க வேண்டும் என்று ஆரம்பிக்கிறார் அபிராமி பட்டர்.

உதிக்கின்ற அந்தச் செங்கதிர் வெம்மை தருவதில்லை. ஒளி மட்டுமே தருகிறது. ப்ரகாசம் தந்து ஒரு நாளை ஆரம்பித்து வைக்கிறது. வைகறைப் பொழுதிற்கு அறைகூவல் விடுத்து, நம்மை எல்லாம் இருளில் இருந்து மீட்டு எழுப்புகிறது. அபிராமி அம்மை அத்தகைய செங்கதிரைத் திலகமாய் அணிந்து , நம்மை இருள் என்னும் அஞ்ஞானத்லேருந்து காப்பாற்றுகிறாள்.

தாயே! கதிரவன் உன் நெற்றியில் திலகமாகக் காட்சிதருகிறான். உன் பேரெழிலின் முன் அவனது ஒளி மங்கி மழுங்கிவிடுகிறது. உன் நிறம் அருணவர்ணமா? பசுமையா? மாணிக்கமா? மாதுளம்பூ உன் எதிரே நிற்க முடியாமல் உன் நிற அழகில் தோற்றுவிடுகிறதோ? அப்படியானால் ஏன் உன் அடியார்கள், ‘தாடிமீகுஸுமப்ரபா, அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம், என்று பேசுகின்றனர்? கருணை அலைவீசும் கண்கள் என்கிறார்களே. தாயே, உன் நிறம்தான் என்ன? சிவப்பா? பசுமையா? பாலபாஸ்கரன் நுதல்திலகமா? ஆம், திலகம்தான், இதே காட்சியைத்தான் புதுமைக் கவிஞர், “முற்றிய ஆழியிலே அலைவந்து மோதிஎறிகையிலே, கற்றைக்கதிர் எழவே உமை திருக்காட்சி வியப்பேனடி” என்கிறார்.
அது மட்டுமா?

"உச்சித் திலகம்" என்று சொல்லும் பதம் ரொம்பவும் விஸேஷம்.

"ஸீமந்த ஸிந்தூரி" என்று லலித ஸஹஸ்ரநாமம் சொல்வது போல், உச்சியிலேதான் அணிந்து இருக்கிறாள். அலை அலையாய்ப் பரவும் கேசச் சுருள்கள் அந்த சூரியனின் கிரணங்கள் போல் இருக்கின்றன.

முதலில் திருமுக மண்டலத்தையும் திலகத்தையும் கண்ட அவர் தாயின் திவ்ய ஸெளந்தர்யத்தை ஏற இறங்க ஒரு முறை பார்க்கிறார். மரகதாங்கியா? அல்ல, மதிக்கின்ற, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகச் சிவந்த நிறத்தவளாகக் காட்சி தருகிறாள்.

மாணிக்கக் கல் சிகப்பு நிறம். நவரத்னங்கள் இருந்தாலும், "மனிதருள் மாணிக்கம்" என்று யாரையாவது உயர்த்திப் பேசும்போது, மாணிக்கக் கல்லையே உதாரணம் சொல்லுகிறோம்.

இப்படிக் காட்சி தருகிற அன்னையை நோக்கி, “அம்மா, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமல்லவா நீ?” என்கிறார். உணர்வு என்பது எதைக் குறிக்கிறது?

உன்னைப் பிள்ளைத் தமிழாலே வழிபட்ட குமரகுருபார்? அன்பு, பக்தி, வாத்ஸல்யம் இவற்றையே அவர் நுண்ணுணர்வு என்று குறிக்கிறார். அத்தகைய மெய்யடியார்களால் எப்போதும் முப்போதும் மதிக்கப்பெறும் மாணிக்கம் அல்லவா நீ?

மலர்க்கமலை' என்பது யர்? பொதுவாக இது லஷ்மியைக் குறித்தாலும், ஸரஸ்வதியும் கூட தாமரையில் வீற்றிருப்பவள் தான். செந்தாமரை மலரில் இருக்கும் லஷ்மியும், வெண்தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் ஸரஸ்வதியும் என இருவருமே போற்றும் தெய்வமாகத் திகழ்கிறாள் அபிராமி.

குங்கும அர்ச்சனை ஏற்பவள் அல்லவோ அவள்? அப்படி, குங்கும அர்சனையை ஏற்று ஏற்று, குங்குமத்தால் ஆன மேனியாய் ஆகி விட்டாள் அவள். அந்தக் குங்குமம் நிலைக்கவும் மங்கலம் தங்கவும் அவளே அல்லவோ துணை?

சதாரணமாக, ஆண் தெய்வங்களைப் பாடும்போது பாதாதி கேசாந்தமாகவும், பெண் தெய்வங்களைப் பாடும்போது கேசாதி பாதாந்தமகவும் பாடுவது மரபு.

உதாரணத்திற்கு, பிள்ளையாரைப் பாடும் ஔவையார், "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு" என்று பாதத்தில் இருந்து தொடங்குகிறார்.

கந்தர் சஷ்டிக் கவசமும் கூட, "சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை" என்று தொடங்குகிறது.

சிவபுராணமும் "நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வழ்க!" என்றே தொடங்குகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமமோ, அம்பிகையின் வர்ணனையை கேசாதி பாதாந்தமாகத் தொடங்குகிறது. "ஸம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத் கஸா" - "ஸம்பகம், அசோகம், புன்னாகம் போன்ற புஷ்பங்களின் வாசனையை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தில் கொண்ட கூந்தல்" என்று கேசத்தில் இருந்து தொடங்குகிறது.

விஷ்ணுவிற்கு பாதாதி கேசாந்தம் மட்டுமே ஸ்தோத்ரம் செய்த ஆதி சங்கர பகவத் பாதர், சிவ பெருமானுக்கு பாதாதி கேசாந்தமும் கேசாதி பாதாந்தமும் என இரு விதமாகவும் ஸ்தோத்ரம் செய்திருப்பது சிவ பெருமானை சிவனாகவும் பார்வதியாகவும் என இரு விதமாகவும் பார்த்ததினல்தான்.

இந்த மரபை ஒட்டியே அபிராமி பட்டரும், கேசாதி பாதாந்தமாகவே தொடங்குகிறார்.

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம், அபிராமி அந்தாதி முழுக்க முழுக்க லலிதா ஸகஸ்ரநாமத்தை ஒட்டியே செல்கிறது.

லலிதா ஸகஸ்ரநாமம் தொடங்கும் போது, "உத்யத் பானு ஸஹஸ்ரபா" - "ஆயிரம் உதிக்கின்ற சூரியர்கள் போன்று வெம்மையில்லாத ஒளி பொருந்தியவள்" என்று தொடங்குகிறது. அபிராமி அந்ததியும், லலிதா சஹஸ்ரநாமத்தின் அடி ஒற்றி, 'உதிக்கின்ற சூரியன்" என்று ஆரம்பிக்கிறது.

இந்தப் பாடல் முழுக்க, அம்பிகையின் சிவந்த நிறமே பேசப்படுகிறது. உதிக்கின்ற செங்கதிரும், மாணிக்கமும், மாதுளம் மொட்டும், குங்குமம் என்னச் சிவந்த மேனியும் என்று இப்படி அத்தனை வர்ணனையுமே அம்பிகையை சிவந்த திருமேனியளாகவே காட்டுகின்றன.

அம்பிகையை செந்நிறமாகக் குறிப்பிடுவது எதற்காக? த்யானம் செய்பவர்கள் நெற்றிப் பொட்டின் நடுவே அம்பிகையின் திருவுருவத்தை வைத்து ஜபித்து ஜபித்து அந்த த்யான விசேஷத்தால் அங்கே செந்நிற ஒளியைக் காண்பதால்தானோ?

எந்தன் விழுத் துணையே = அவள் எந்தன் விழுத் துணையே.

ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை

சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது, சிக்கலானது, ஆபத்து நிறைந்தது. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை மட்டும் விட்டுடாதேங்கோன்னு சொல்லி தரார் பட்டர் நமக்கு.

நாமளும் பட்டர் சொன்னபடி அபிராமி கைய பிடிச்சுண்டே நடக்கலாமா!!

அவா பிண்ணாடியே நடந்துண்டு ஒவ்வொரு அந்தாதியா கேக்கலாமா!!                                                                         அன்பரின் குரலில்                                                                                          

                                                                              குருஜி கற்பிக்கிறார் 


                                                                                                                        


                                                                    அன்பர்கள் குரலில் பாடல் 
                                                                                         

                                                                முருகா சரணம்   

                                                   அன்னை அபிராமி சரணம்                                                       

Sunday, 14 May 2017

திருப்புகழ் சங்கமம் சென்னையில்
                                                                                                                                                                                                                                                                  திருப்புகழ் சங்கமம் சென்னையில்

                                                                                   (ஏப்ரல் 22&23 நாட்களில்) 

                                                                   குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா 

                                                                                  503 பாடல்கள்  சமர்ப்பணம்மும்பை,புணே அன்பர்களின் சமர்ப்பணம் 


விழாவில் மும்பை,புணே சேர்ந்த 100 அன்பர்கள்  கலந்து கொண்டனர்.மும்பையிலிருந்து குடிபெயந்த அன்பர்களுடன்  சேர்ந்து முதல் நாள் காலை 11 மணி அளவில் திருப்புகழ் பாடல் களை  சமர்ப்பித்தனர்.

பாடல்களின் சில பகுதிகள்                                                                   


                                                                                                     


                                                                                                     
சில புகைப்பட காட்சிகள் 


                                        
                                                                                                           


                                                                                             
முருகா சரணம் 
                                                                                           
                                         


                                                                                                       Thursday, 11 May 2017

அபிராமி அந்தாதி வரிசை


                                                  அபிராமி அந்தாதி வரிசை 

                                                     விளக்கவுரையும் குருஜியின் இசையில் பாடலும் பெருமானின் அருளாலும்,குருஜியின் ஆசியினாலும் 503 திருப்புகழ் பாடல்களை முழுமையாக உன்னத இசையுடன் அனுபவித்தோம்.

செந்திலாண்டவன் அருளாலும்,அன்னை அபிராமியின் பரிபூர்ண கடாக்ஷத்துடனும் குருஜி நமக்கு அளித்துள்ள மற்றொரு அருள் பிரசாதம் அபிராமி அந்தாதியும்,பதிகமும்.ஆடி மாதம்,தைமாதம்முழுவதும்உலகில் உள்ள அன்பர்கள் அந்த தெய்வீக பாடல்களை  இல்லங்களிலும்,கூட்டாகவும் இசைத்து அன்னை அபிராமி தரிசனம் கண்டு பரவசமடைகிறார்கள்.

பரம பொக்கிஷமான குருஜியின் அந்தாதி,பதிகம் இசை வடிவில் 6 ஒலி நாடாக்கள் பெட்டகமாக 2000 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அடுத்து சென்னை அன்பர்கள் தங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

அதன் குறியீடு மற்றும்  "திருப்புகழ் நவமணிகள் "  (6 டிவிடி  க்கள் ) முதல் டிவிடி யிலும் இடம் பெற்றுள்ளது.

முதலில் அபிராமி அந்தாதி பாடல்களை வரிசையாக குருஜி கற்பிக்கும் முறையிலும், அடுத்து அன்பர்களபின்பற்றும் முறையிலும் அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம்.


நம் அன்பர்களில் பல துறைகளில் வல்லவர்களாக உள்ளனர்.சொற்பொழிவாளர்கள்,இசைசொற்பொழிவாளர்கள்,விரிவுரையாளர்கள்,உரையாசிரியர்கள்,ஓவியர்கள்,சிற்பிகள் போன்ற அருளாளர்கள் குடத்திலிட்ட விளக்கு போல் தங்கள் சேவையை நம் இயக்கத்தின் பொருட்டுஅர்ப்பணித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் அருளாளர் நீலா குமார் அவர்கள்.ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபட்டுள்ள அவர் திருப்புகழ் சம்பந்தமான பல அரிய கட்டுரைகள் வழங்கி வருகிறார்கள்.சமீப காலமாக தன்  முக நூலில் அபிராமி அந்தாதி பாடல்களுக்கு ,லலிதா சஹஸ்ரநாமத்தை ஓப்ப்பிட்டும்,தொடர்புடைய பல புராண சம்பவங்களை சுட்டிக் காட்டியும் மிக அற்புதமாக விளக்க உரை எழுதி வருகிறார்கள்.


அபிராமி அந்தாதிக்கு பல அறிஞர்கள் உரை எழுதி உள்ளனர்.நம் வலைத்தளத்தின் குறிக்கோள் நம் அன்பர்களுக்கு இடையில் மெளனமாக  சேவை  செய்துவரும் அத்தகைய அருளாளர்களை முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கௌரவப் படுத்தும் நோக்கில்  அவர்களின் படைப்புகளை தக்கதருணத்தில்  வெளியிட்டு வருவதுதான்..அந்த வகையில் அந்தாதிக்கு அருளாளர் நீலா குமார்  எழுதிவரும் அரிய விளக்க உரைகளை அளிக்க விரும்புகிறோம்.

குருஜி அருளுரையுடன் தொடங்குவோம்.                                                                            

முதலில் அபிராம பட்டரின் மகத்தான வரலாறை சுருக்கமாக பார்ப்போம்.

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஸ்ரீவித்யா நெறி நின்று, யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்ட ஒரு அந்தணர். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

பௌர்ணமி திதி

அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்."உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
        “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
        வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
        பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
        குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.


அந்தாதியின் காப்பு (நூல்)


தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே”

அருளாளர் நீலா குமாரின் விளக்கவுரை 

"தாரமர்' என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு. கொத்துக் கொத்தாக இயற்கையிலேயே மாலை போல பூக்கும் தன்மை உடையதால், கொன்றை மலரை 'தாரமர் கொன்றை' என்பார்கள். 'கார்' என்றால் வண்டு. 'வண்டு வந்த அமரும் கொன்றை மலர்' என்றும் ஒரு பொருள் உண்டு. அதற்கு எதிர்மறையாக செண்பக மலரில் வண்டு வந்து அமராது. இந்த இரண்டையும் அணியக் கூடிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானின் இடது பாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற உமையவள், பூர், புவ, ஸ்வஹ, மக, ஜன, தப சத்ய என்னும் ஏழு உலகங்களைக் கொண்டவள். 

கொன்றை மலருக்கும், செண்பகப்பூவுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒருமுறை பிருகு மாமுனிவர் சிவனை மட்டும் வண்டு ரூபம் கொண்டு வலம் வந்தார். அம்பிகையை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் அம்பிகை சிவனிடம் கோபம் கொண்டு கடம்ப வனம் சென்று சயனத்தில் ஆழ்ந்து விட்டாள். சிவனும் அங்கு எழுந்தருளி அம்பிகையை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் ஒரே முடிவாக அம்பிகை, 'எப்போது நான் வேறு, தாங்கள் வேறு என பக்தர்கள் கருதுகிறார்களோ, அப்போது எனக்கு தங்களுடன் வாழும் தகுதி இல்லை. இனி தான் கயிலை வரப்போவதில்லை...” என்று கூறிவிட்டாள். அம்பிகையை சமாதானப்படுத்த வழியில்லை என்றானவுடன், இறைவன் ஓர் உபாயம் செய்தார். கண் மூடி சயனித்திருந்த அம்பிகையின் திருப்பாதங்களில் தன் சிரசை வைத்து வணங்குவது போல ஒரு பாவனையை சிவபெருமான் செய்ய... பதறி எழுந்தாள் ஜகன்மாதா. உடனே அம்பிகையின் திருப்பாதங்கள் கொன்றை மலராய் மாறி, சிவனின் ஜடாமுடியில் சென்று அமர்ந்து கொண்டது. “சுவாமி! என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் ஜடாமுடி எனது பாதத்தில்பட்ட பாவம் நீங்க இனி என் உருவிலுள்ள கொன்றை மலர், தங்கள் சிரசில் நீங்காது இடம் பெறட்டும். மலர்கொத்து சிரசில் இருப்பது தோஷமாகாதல்லவா...?' என்ற அன்னை சிருங்காரக் குரலில் மேலும் சொல்வாள். “என் கரங்கள் மட்டும் என்ன பாவம் செய்தன? அவை செண்பக மாலையாகத் தங்கள் கழுத்தினை அலங்கரிக்கட்டும்”. இப்படி சொல்லிக் கொண்டே அம்பிகை சிவனின் கழுத்தில் தன் கரங்களைக் கோர்த்துக்கொள்ள அவை அழகிய செண்பக மாலையாக மாறின. தேவி மகிழ்வுடன் சிவனை நோக்க, இறைவன் கூறுவார்: “தேவி! நான் வேறு, நீ வேறு என்ற நிலை என்றும் இனி இராது சிவம் இல்லையேல், சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை. எனவே இன்று முதல் என் உடலின் இடப்பாகத்தை உனக்களித்தோம். இனி உமையொரு பாகத்தவனாக, உமா மகேஸ்வரனாகவே நாம் திகழ்வோம்,” என்றார். உடனே சிவசக்தி ஐக்கியம் கொண்டனர். பின் அர்த்தநாரியாக (அர்த்தம்பாதி, நாரிபெண்) இறைவன் அருட்காட்சி தந்தார். 

இச்செய்தியை அறிந்த பிருகு முனிவர் மீண்டும் வண்டு உருவம் தாங்கி அங்கே வந்தார். சிவபெருமான் ஜடாமுடியில் அம்பிகை சூட்டிய கொன்றை மலர்க்கொத்தின் மீது அமர்ந்து வணங்கி பிறகு எழுந்து பறந்தார். உடனே சற்றே கோபமான குரலில், “பிருகு முனிவரே!” என்றழைத்த அம்பிகையின் அழைப்புக்குக் கட்டுப்பட்ட பிருகு திரும்பியும் பறந்து வந்து, “அகர உகர மகார ரூபமான உலகையாளும் உமையம்மையே! என்ன விஷயம் கூறுங்கள்!” என்றார். “முன்பு நீ பெருமானை மட்டும் வணங்கிச் சென்றாயல்லவா.. எனவே இறைவனிடம் வாதாடி அவர் உடலில் இடப்பாகத்தை நான் பெற்றிருக்கிறேன். இப்போதோ நீ அவர் சிரசில் சூடியுள்ள கொன்றை மலரை மட்டும் வணங்கி, செண்பக மாலையை ஏறெடுத்தும் பாராது போவது ஏனோ?” என்றாள் அம்பிகை. 

வண்டு உருவம் தாங்கியிருந்த பிருகுவும் சுயவடிவம் பெற்று, “அன்னையே கொன்றை மலராய் மாறி ஐயன் தலையில் அமர்ந்திருப்பது தங்கள் திருப்பாதங்கள். செண்பக மாலையாய் அவர்தம் கழுத்தில் தவழ்வது தங்கள் திருக்கரங்கள். நானோ மோட்ச கதி வேண்டி தவம்புரியும் கோர தவத்தோன். எனவே தான் சதாசர்வ காலமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் என ஓய்வேயின்றி ஐந்து வினைகளும் புரியும் தங்கள் கரங்களாகிய செண்பக மாலையை நாடாமல், சரணடைந்தவர்க்கு சடுதியில் முக்தி தரும் தங்கள் பாதார விந்தங்களாகிய கொன்றை மலர்க்கொத்தில் அமர்ந்து வணங்கிச் செல்கிறேன்...” என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த அம்மையப்பர் ஏக உருவில் பிருகு முனிவருக்கு உடனே மகிழ்ந்து அருளாசி தந்து மறைந்தனர்

. அத்தகைய பெருமை வாய்ந்த கொன்றை மலரையும், செண்பக மாலையும் சாத்தும் தில்லை நடராஜரின் பாகத்தவளாகிய உமையவளின் மைந்தனே மகாகணபதி. 'ஸ்ரீகாமேஸ்வர முகாலோக கல்பிதஸ்ரீ கணேஸ்வர நம:' என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போற்றும். ஸ்ரீ காமேஸ்வரரின் முக தரிசனத்தாலேயே அம்பிகை கணேஸ்வரரைப் பெற்றாள். எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை

ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு. இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில்பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமிஅந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை விட்டுவிட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்? இப்படி வேண்டுமானால் இருக்கலாம்.

திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்குதிருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக்குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ளவாரணப் பிள்ளையார் அவர்.

தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர். 

அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்று கூட அதனைக் காக்கும் பொறுப்பை கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்

எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே தொடங்கி வைக்கிறார் அபிராமிபட்டர். அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில் அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்திலேயே காட்டுவார் அபிராமி பட்டர். அந்தக் காட்சி காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது. உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும் என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார். விநாயகப் பெருமானின் திருமேனி மேகநிறம். “”நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும் கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி.அந்த விநாயகர் திருவருளால் முகிலில் இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார் பட்டர்

. ஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. “சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே”. அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும்இந்தப் பாடல் அமைஞ்சிருக்கு. ஆரம்பமே எவ்ளோ அழகாயிருக்கு இல்லையா!! "


                                                             பாடலை குருஜி கற்பிக்கிறார்.                                                                                                               
                                                                        அன்பர்கள் 

                                                                                 

அபிராமி அந்தாதி தொடரும் 

முருகா சரணம்                           

Monday, 8 May 2017

திருப்புகழ் சங்கமம் சென்னையில்


                                                                                                 


                                                                                                 
                                                                                                                                                                                                                                                                                                                                                                     திருப்புகழ் சங்கமம் சென்னையில்

                                                                                   (ஏப்ரல் 22&23 நாட்களில்) 

                                                                          குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா 

                                                                             503 பாடல்கள்  சமர்ப்பணம்
                                                                                                         

இரண்டாம் நாள் 


புத்துணுர்ச்சியுடனும் துடிப்புடனும் அன்பர்கள் பாடல்களை இரண்டு மணி நேரம் முன்னதாகவே நிறைவு செய்தனர்.


நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது போல் அமைந்தது இளம் சிறார்களின் சமர்ப்பணம். தங்களுக்காக நிர்ணயம் செய்துள்ள பாடல்களை பாவத்துடனும்,தாளக்கட்டுடனும் அர்பணித்தது அன்பர்களை பரமானந்தத்தில் ஆழ்த்தியது. அவர்கள் கூட பாடாமல் தாளம் மட்டும் போட்டு அவர்களை உற்சாகப் படுத்தினர்.வழிபாடுகளில் கை தட்டுதல் கூடாது என்ற நம் மரபையும் மீறி கை தட்டி மகிழ்ந்தனர்.அதை நான் பெருமானின் அருள் பிரசாதமாகவே கருதுகிறேன்.

பாடல்களை மீண்டும் கேட்போமே


                                                                           

           


புதிதாக சேர்க்கப் பட்டுள்ள பாடலை எப்படி பாடுகிறார்கள்

                                                                                                                                                                   
சிறார்களின் கோலாட்ட நடனத்துடன் வைபவம் கோலாகலமாக நிறைவுற்றது.                                                           

                                                                                   

கந்தர் அனுபூதி,வேல்மயில் விருத்தம்,வகுப்பு பூஜா விதிகளுடன் ,அருள் வேண்டலுடன் சாந்தி ஸ்லோகத்துடன் வைபவ நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.பிரியா விடை காரணமாக அன்பர்களின் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தாலும் பெருமானின் அருளை பெற்றோம் என்ற மன நிறைவுடன் விடை பெற்றார்கள்.

அரிய பணியில் ஈடுபட்ட தொண்டர்களை நினைவு கூர்வது நம் கடமையாகும்.

                                                                                                   
                                     

                                                                                                   
                                                                                                       
 திருப்புகழ்பாக்கள்ஹேமமாலினிமண்டபத்தின்தூண்களிலும்,கூரையிலும் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.அங்கு வரும்காலங்களில் நடைபெறவுள்ள மங்கல நிகழ்ச்சிகளுக்கு திருப்புகழ் பாடல்கள் ஆசி வழங்கும்.


நம் மத்திய செயற்குழுவிடமிருந்து வந்துள்ள செய்தி

 The office bearers of the Chennai Region have done the stupendous task of organising the event admirably .. and this would not have been possible with out the support of each of the regions/centres and all the anbargals who participated.... It has been Guruji's vision to sustain the movement he started by bringing children into its fold and this Vizha, in addition to everything else, fulfilled this vision. There were many without whose service and support the event would not have been as successful as it was ..... for the first time we were able to reach Anbargals through the world ... and we need support from each of them .

I would invite your comments and feedback to enable us to improve further ...    

நம் அனைவரின் சார்பில் பெங்களூரு அன்பர்கள் நன்றி நவில்கிறார்கள்.


Dear Sir,

We are extemely happy to convey our sincere appreciation and kudos to the Chennai Anbargal for having conducted the Guru Samarpana Thiruppugazh Isaivizha in a grand manner, engraving in the mind of every anbar the nuances of the function. The entire programme is still lingering in our minds with Thiruppugazh vibration all through.  Even after the function, while in the room as well during travel, we kept on feeling that we were still in the hall hearing Thiruppugazh songs.

Our particular thanks to  the volunteers for their untiring service, especially when the surging crowd was unexpected on the first day. 

I am sure with Guruji's blessings all the events conducted, post 2013, drew  anbargal koottam  from various regions/centres indicating that the Mission will reach greater heights in the future years.

Once again thanking you,

K.N.Krishnamoorthy & 
R.Nagesh & other Karnataka Anbargal    

இந்த வைபவம் நம் இயக்கத்துக்கு  ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.வழக்கமாக இதுபோல் விழாக்கள் முடிந்தவுடன் திரும்புவார்கள்.அடுத்து வரும் நிகழ்ச்சிக்காக காத்திருப்பார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சி அன்பர்கள் மனத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை  தோற்றுவித்துள்ளது.நம் இயக்கத்தை உலகளாவிய அளவில் பரப்ப வேண்டும்.குருஜியின் மகத்துவத்தை எல்லோரும் உணர வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும்.என்று பலவாறான எண்ணங்களை தோற்றுவித்துள்ளது. அதை நடை முறைப் படுத்த வேண்டியது ஒவ்வொரு அன்பரின் கடமையாகும்.

  குருஜியின் திருப்புகழ் இசை நமக்கு கிடைத்துள்ள அருள் பிரசாதம்.பேணிக்காக்க வேண்டியது நம் கடமை.இப்போது மின்னணு சாதனங்களில் பல உருவங்களில் உருவாகியுள்ளன.பாடல்களின் பொருளும் கிடைக்கின்றன.இந்த வைபவத்தின் வீடியோ வர உள்ளன.எளிய முறையில் குறிப்பாக இளைய தலைமுறையினர் வெகு விரைவில் கற்று தேற முடியும்..

நாம்  சபதமேற்று செயலில் இயங்குவோம்.தினம் ஒரு திருப்புகழ் கற்போம்.அருகில் நடக்கும் வகுப்புக்கு தவறாது செல்வோம்.நம் வாரிசுகளை வகுப்புக்களுக்கும்  ,வழிபாடுகளுக்கும் அழை த்துச்செல்வோம்.திருப்புகழ் பாடல்களுடன்  walking செல்வோம்.பஸ் ,ரயில் ,விமான பயணத்தின் போது பாடல்களை கேட்போம்.அவரவர் யுக்திக்கு தகுந்தாற்போல் திருப்புகழை எளிதில்,விரைவாக கற்போம்.

அடுத்த ஆண்டு நம் இயக்கத்தின் மணி விழா ஆண்டு.மிகச்சசிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அன்பர்களின் குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளன.

சிறிது ஓய்வுக்குப்பின் மத்திய செயல் குழு  முழு வேகத்துடன்  செயல் படும்  என்பதில் சந்தேகமே இல்லை.   

மும்பை வெங்கட்ராமன்  

அருளாளர் மாலதி ஜெயராமன் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் பகுதி வீடியோ  

Click 


https://youtu.be/orb0ZLq8Dzw