Thursday, 25 May 2017அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்   2

                                                       பாடல்

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே"

அன்பரின் விளக்கவுரை 

துணை என்பதற்குத் தொடர்ந்து வருவது, காப்பது, இடர் துடைப்பதுஎன்று பொருள் உண்டு. "உற்ற துணைவன்" என்று சொல்லுகிறோம்அல்லவா? அது போல. அத்தகைய துணையாய் விளங்குபவள்அபிராமி. அந்தத் துணையாய் விளங்குபவளே நான் தொழும்தெய்வமும், எனைப் பெற்ற தாயுமாகவும் இருக்கிறாள் என்றுஆரம்பிக்கிறார் பட்டர்.
எனக்குத் துணையாகவும், நான் தொழுகின்ற தெய்வமாகவும், பெற்றதாயைப் போலவும் இருக்கும் இந்த அபிராமியே வேதங்களின்சாரமாகவும் இருப்பவள்.
வேதத்தின் வேராகவும் கிளைகளாகவும், விரிந்து இருப்பவளும்அவளே.
கைகளில் குளிர்ந்த மலர்ப்பூங்கணையும், கரும்பால் ஆன வில்லையும்கொண்டவள் அவள். மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டுவிளங்கும் அந்த திரிபுர சுந்தரியே எனக்குத் துணையென அறிந்துகொண்டேன் என்று சொல்லுகிறார் பட்டர்.
தாயைப் போல அன்பு காட்டுபவர் உண்டா? லலிதா சஹஸ்ரநாமமும்‘ஸ்ரீ மாதா” என்றுதானே ஆரம்பிக்கிறது! அண்டசராசரத்து உயிர்கள்எல்லாம் உருவாவது அந்தத் தாயிடத்தில்தானே!
அன்பேவடிவினளாக, தாயாக இருக்கிறாள். துணையாய் வருகிறாள். அவள்கோர ஆயுதம் எதுவும் தரித்து இருக்கவில்லை. வாளும் வேலும்தரித்து இருக்கவில்லை. கைகளில் என்ன வைத்திருக்கிறாள்?கரும்பினால் ஆன வில்லைக் கொண்டிருக்கிறாள். மலர் அம்புகள்தரித்திருக்கிறாள். மெல்லிய பாசமும் அங்குசமும்கொண்டிருக்கிறாள்.
சாதாரணமாக, கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் கொண்டுஇருப்பது மன்மதன் மட்டும் தான். சகல உயிர்களுக்கும் காமத்தைஊட்டும் அந்தக் காமன் ஒரு முறை தேவ கார்யமாக,தேவசேனாதிபதியை - முருகனை - குமரனை தோற்றுவிக்கும்பொருட்டு அந்த பரம சிவன் மீதே மலர்க் கணை எய்தான்.முக்கண்ணன் கோபத்தால் சாம்பலும் ஆனான். தனது கணவனைஇழந்த ரதி, தேவியிடம் வந்து முறை இட்டாள். தேவியும் மிகக் கருணைகொண்டு, மன்மதனை உயிர்ப்பித்து அருளினாள். அந்த அருளின்அடையாளமாக, மன்மதனின் ஆயுதங்களையும் ஏற்று அருளினாள்.
மன்மதன் கைகளில் இருக்கும்போது காம இச்சையைத் தூண்டும்கரும்பு வில்லும் மலர் அம்புகளும், தேவியின் கைகளில் இருக்கும்போது அமைதியாய் அடங்கி நமக்கு நல்வழி காட்டுகின்றன.
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் கருத்துக்களே இவை!! லலிதாசஹஸ்ரநாமம், மிக அழகாகச் சொல்லுகிறது :
“ராகஸ்வரூப பாஷாட்யா” - ராகம் என்றல் “பற்று” , அம்பாள் மீது பற்று வரவேண்டும், அந்த்ஃஅ லோக மாதாவையே பற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் அவள் கயிற்றைவைத்துள்ளாள். அதை அவள் நம் மீது கட்டினால், நமக்கு அம்பாளைதவிர வேறொன்றும் தெரியாமல் போய்விடும்!!
“க்ரோதாங்காராங்குஷோஜ்வலா” – “குரோதம்” என்றல் “கோபம்”என்று பொருள். , அதனை மற்றுவதற்காகவே அவள் அங்குசம்தரித்திருக்கிறாள்
“மனோரூபேக்ஷு கோதண்டா” “மனம்” என்னும் கரும்பு வில்லைக்கையில் வைத்திருக்கிறாள்.
“பஞ்ச தன்மாத்ர சாயகா” - “சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம், கந்தம்ஆகிய 5 உணர்வுகளாகிய மலரம்புகளைத் தரித்டிருக்கிறாள் என்றுவருகிறது.
அது போல, இங்கு, அபிராமித் தாயும், நம் வினைகளைக் களையவேஅங்குச பாசம் தரித்து விளங்குகிறாள்.
நம் பாச வினைகளை எல்லாம் அறுத்து, நம் மதமாச்சரியங்களையெல்லாம் அழித்து நம்மையெல்லாம் நல்வழிப்படுத்தத்தான்.
மென் பாசமும்” என்னும் வார்த்தைகள் அழகானவை. தாய்,குழந்தைகளான நம்மைக் கட்ட, பாசம் வைத்திருக்கிறாள். ஆனாலும்.வலிக்கக்கூடாதே என்பதற்காக, அது, ‘மென் பாசமாம’. “மெல்லியபாசம்” மட்டுமே எங்கிறார் பட்டர்!
சுருதி" என்று குறிப்பிடப்படுபவை, வேதங்கள். அந்த வேதங்களின்வேராக, கிளைகளாக, சாரமாக, அந்த வேத மாதாவாகவே இருப்பவள்இந்த அபிராமி.
திரிபுரசுந்தரி ஆவதுன்னு சொல்றார் இல்லையா. இங்கதான் பட்டர் அன்னைக்கு திரிபுரசுந்தரி பேர் சூட்டறார். திரிபுரசுந்தரின்னா திரிபுரத்தையும் சம்ஹாரம் பண்ணிணாரே , அந்த திரிபுர சுந்தரனின் பத்தினிங்கறதுனால பட்டர் இப்படி பேர் சூட்டிருக்கார் போலருக்கு.
வேதாகம உபநிஷத்தினவாசியல்லவா அன்னை!!, அவளுக்கு எது உருவம்னு கேக்க தோணரது இல்லையா? பட்டர் அன்னைக்கு ஒரு உருவம் கொடுத்து, அவளுக்கு ஒரு பெயரையும் சூட்டி, நமக்கெல்லாம் அடையாளம் காட்டறார் இந்த பதிகத்துல.
அப்படிப்பட்ட அன்னை பரமேஸ்வரனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்குகின்றாள். ஆதிசங்கர பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரியில் அம்பாளைப் பற்றிக் கூறும் போது.
“சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |
அதஸ் - த்வா- மாராத்யாம் ஹரி - ஹர விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி ||
பரமேஸ்வரன் அம்பாளுடன் பிரியாமல் இணைந்திருப்பதனால் தான் இந்த உலகினை இயக்க சக்தியுடையவர் ஆகின்றார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் அசைவதற்குக் கூடத் திறமையற்றவர் ஆகிவிடுவார். எனவே ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ரர்களால் பூஜிக்கப்பட்ட உன்னை வணங்குவதற்கோ, அல்லது துதிப்பதற்கோ கூட புண்யம் செய்தவனால் மட்டுமே முடியும்! என்று கூறுகின்றார்.
அம்பாளைப் பற்றி நினைப்பதற்கும், அவளைத் துதிப்பதற்கும் அவளுடைய அருள் இருந்தாலன்றி முடியாது.
அம்பாளைப் பற்றி நம்மால் எவ்வாறு அறிய முடியும்? ஆனால் ஜகன்மாதாவான அந்தப் பரமேஸ்வரியே தன்னுடைய கருணை விழிகளால் நம்முடைய அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஞானம் என்ற வெளிச்சத்தினால் தன்னை அறியுமாறு செய்கின்றாள். தாமரையை விடவும்ம் மென்மையான அந்த அம்பாளின் திருவடிகளை இடைவிடாது ஆராதிப்பதே நம்மைத் துன்பமில்லாத சிவானந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கச்செய்யும்னு சொல்லித்தறார் பட்டர் நமக்கு.
அதனால நாம எல்லாரும் அந்த எம்பெருமாட்டியோட பாதார விந்தங்கள்ல சரணாகதி அடைய பிராத்திப்போமா. அவளே நம்மள நல்ல படியா வழி நடத்தி அழைச்சுண்டு போவா.

அபிராமி சரணம் சரணம்.

                                                                       குருஜி கற்பிக்கிறார்          


                                                                                 அன்பர்கள் 


                                                                                                                                                                              முருகா சரணம்                         

No comments:

Post a Comment