Sunday 22 September 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 28


                                                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  28                                                                                                  
                                                                                                           
                                                                                                     
                                                                                                             
                                                     
कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

नरो वाथ नारि गृहे ये मदीयाः ।

यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं

स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८॥

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||  


 ஹே குமாரா:’ – குமரக் கடவுளே 

க்ருஹே:– என்னுடைய வீட்டில் உள்ள 

களத்ரம் – என்னுடைய மனைவி, 

ஸுதா–     என் பிள்ளைகள் 

பந்துவர்க:– அப்பா, அம்மா, அண்ணா தம்பி, இன்னும் பந்து வர்கத்துல                                 இருக்கறவா, 

பசுர்வா: – வீட்டுல இருக்கற மிருகங்கள், 

நரோவாத நாரீ வா – மத்த மனிதர்கள், பெண்கள் 

யே மதீயா– என்னைச் சேர்ந்தவான்னு நான் நினைக்கக்  கூடிய யாரா இருந்தாலும், அவா என்னுடைய நண்பர்களாக இருந்தாலும் சரி, என்னுடைய தொழில்ல கூட வேலை செய்யறவாளா இருந்தாலும் சரி, எனக்கு சம்பத்தப்பட்ட எல்லாரும், 

தே ஸர்வே – அவா எல்லாரும் முருகா

பவந்தம்– உன்னை, 

யஜந்த – பூஜை பண்றவாளாகவும் 

நமந்த – உன்னை  நமஸ்காரம் பண்றவாளாகவும் 

ஸ்துவந்த – உன்னை ஸ்தோத்ரம் பண்றவாளாகவும் 

ஸ்மரந்த– உன்னையே ஸ்மரிக்கறவர்களாகவும் 

ஸந்து’ – இருக்கட்டும்

இதுல இந்த பசுர்வான்னு சொன்னதை ‘எனக்கு தெரிஞ்ச பசுக்கள் கூட உன்கிட்ட பக்தியா இருக்கணும்’ என்கிற போது, குருவாயூர் கேசவன்-னு ஒரு யானை ஞாபகம் வரது. அந்த யானை குருவாயூரப்பனுக்கு அறுவது வருஷம் service பண்ணித்து. அப்புறம் ஒரு குருவாயூர் ஏகாதசி அன்னிக்கு, அன்னிக்கு நாளெல்லாம் ஒண்ணும் சாப்பிடாம இருந்து, அந்த ஸ்வாமி சன்னதியைப் பார்த்துண்டு, தன் தும்பிக்கையை மேல தூக்கி, ஒரு  வாட்டி பிளறிட்டு உயிரை விட்டது. அந்த யானை மேலே ஸ்வாமியை வச்சுண்டு யாராவது  வந்தா ஸ்ரீவேலிம் போது ஏறாலமே தவிர வேற யாரும் ஏற முடியாது. அது ஏற விடாது. அப்பப்போ அதை  கட்டி வெச்சுருக்கற இடத்துலேயிருந்து கிளம்பி, நேரா ஸ்வாமி சன்னதிக்கு வந்து கோயிலை ப்ரதக்ஷிணம் பண்ணிட்டு போகும். இப்படி ஒரு அற்புதமான யானை. அதுக்கு கஜராஜன்-னு தேவஸ்வத்துலேர்ந்து title கொடுத்திருந்தா. பூர்வ ஜென்மத்துல பக்தி பண்ணின வாசனைனால, எவ்வளவு மிருகங்கள் கூட பகவானோட பக்தி பண்றது.


இப்ப  கூட பார்க்கறோம். ராமாயணம் நடக்கறதுன்னா தீடிர்னு எங்கயிருந்தோ ஒரு வானரம் வந்து  அந்த ராமாயணத்தைக் கேட்டுட்டு பழத்தை எடுத்துண்டு போறதுன்னு எல்லாம் சொல்றா. 


பசுக்கள் பால் கொடுக்கறது ஸ்வாமி புஜைக்குன்னா நிறைய யதேஷ்டமா பால் கொடுக்கறது. நம் வீட்டில்  நாம பார்த்திருப்போம். அப்படி என்னுடைய வீட்டுல இருக்கற  பசுக்கள் கூட  உன்கிட்ட பக்தியா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார்.

 அதுக்கும் மேலே இந்த மாதிரி உலக விஷயங்கள்ல ரொம்ப பாசம் வெச்சு அல்லல் படாமல் இருக்கணும் னும் வேண்டிக்கணும். 


கந்தர் அனுபூதி யும் இதையே வலியுறுத்துகிறது.
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,


தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. 



மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்றயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே. 


(முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ ‘மாடை’ னா தங்கம், பணம். ‘மடந்தையர்’ னா பெண்கள். இதுலேயே என் மனசு தயங்கி தயங்கி அங்கேயே நிக்கறது. அதை உதறவே மாட்டேங்கறதே. ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே!’  ‘ஆறுமுகம் ஆறுமுகம்’ ன்னு சொல்றேன். இதெல்லாம் இன்னமும் ஒழிய மாட்டேங்கறேதே )

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே. 


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல, புரந்தர பூபதியே. 


 நம்மைச் சேர்ந்தவா நமக்கு அனுகூலமா இருக்கணும்.  நமக்கு  நல்ல நண்பர்கள் , நல்ல பந்துக்கள், நாம வளர்க்கற மிருகங்கள் , நமக்கு வர்ற அதிகாரிகள், நமக்கு வர்ற வேலைக்காரர்கள்  எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Friday 13 September 2019

அபிராமி அந்தாதி 41

                                                                          அபிராமி அந்தாதி   41                                                                                                              



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.

அன்னையும் அத்தனும் அபிராமிபட்டரிடம் அன்பு கொள்ளக் காரணமாக இருந்தது எது? அவர் முன் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியம் அவர்களிடம் அன்பு செலுத்த, அந்த அன்பு, இவரை அடியார் நடுவுள் இருத்திற்று. இதனை மனத்துக்குள் சொல்லி மகிழ்கின்றார். புண்ணியம் செய்தனமே மனமே! என்று!!
தமக்குள் சொல்லி அநுபவிக்கும் தெய்வ இன்பம் இது. தெய்வத்தால் ஏற்படும் அநுபவங்களைப் பிறரிடம் சொல்லிக் கொள்வதில்லை. வியந்து தமக்குள் சொல்லிக் கொள்வதே வழக்கம் அந்தப் பண்புள்ள அபிராமிபட்டர், தம் மனத்துள் சொல்லிக் கொண்டார். அவர் மனத்துள் சொன்னது நம் மனத்துக்கும் உரியது. நம் மனமும் அபிராமியிடமும் அத்தனிடமும் அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டதல்லவா! அபிராமிபட்டரின் மனம் நம் மனத்துடன் பேசுகிறது. நாமும் புண்ணியம் செய்தோம். ' நாமும் ' என்று துணிந்து சொல்வோம். ஏனெனில்,அபிராமிபட்டர் " புண்ணியம் செய்தனமே " என்று நம்மையும் சேர்த்துப் பண்மைப்படுத்தியிருக்கிறார்.

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் 

அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. 

நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி


இங்கே வந்து 

இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.


தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி 

அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.

ஸத்சங்கம் ' பற்றி, ' சான்றோர் இனத்திரு' என்பார் ஔவைப்பாட்டி.
" ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் " னு ஆதிசங்கர பகவத் பாதாளும் சொல்லிற்கார்.
தாயுமானவரும், ' ' அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே! என்றார்
அதாவது ' அன்பர்களுடன் கூட அவர்களுக்குப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்து விட்டால் போதும். நான் மோட்சத்தை தேடிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. அதுவே என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுமாம்.
மாணிக்க வாசகரும் ' உடையாள் உன்றன் நடு இருக்கும் ' என்று தொடங்கும்பாடலில் ' அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய்...' என்று பாடுகிறார். 
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே -  அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் நிலையாக  பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.
நாமும் அடியார் கூட்டத்துடன் ஒன்று கலந்து அன்னை அபிராமியையும் அவள் கணவனாரான அமிர்தகடேஸ்வரரையும் "நம் காரணத்தால் நண்ணி " அதாவது நெருங்கி அருளை பெறுவோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம் 

Monday 9 September 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் 27



                                                                           ஸுப்ரமண்ய புஜங்கம்   27

                                                                                                             


मुनीनामुताहो नृणां भक्तिभाजामभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने गुहाद्देवमन्यं न जाने न जाने ॥ २७॥
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜாம்
அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா: |
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே ||
                                                                                          பொருள் 
 ‘ஸர்வத்ர’ தேவா,             – எல்லா உலகங்களிலும் தெய்வங்கள், 
‘முனீனாம், பக்தி பாஜாம் ந்ருணாம் ‘ – முனிவர்களுக்கும், தன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும்
 ‘அபீஷ்ட ப்ரதா: ஸந்தி’ – அவா மனோரதங்களை பூர்த்தி பண்றதுக்கு வரங்களை கொடுக்கிறார்கள்.
 ஆனால்.. ‘அந்த்யஜாநாமபி” – கீழ் ஜாதியில் பிறந்தவரா இருந்தாலும்
 ‘ந்ருணாம்’ – மனிதர்களுக்கும்,
‘ஸ்வார்த்த தானே’ – விரும்பியதை கொடுப்பதில்
‘குஹாத் அன்யம் தேவம்’ – முருகப் பெருமானைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை
‘நஜானே நஜானே’ – நான் காணவில்லை, நான் காணவில்லை 
அன்பரின் விளக்கவுரை 
இப்போ அந்த மனு தர்ம சாஸ்திரத்துல சொல்லியிருக்கிற வர்ணாஸ்ரமத்தின்படி குலங்கள், அதோட குணங்கள் எல்லாம் இருக்கான்னு தெரியலை.

ஆனால் மாந்தர்கள் என்கிற ஆச்சர்யமானா புஸ்தகத்துல  ஒரு படிக்கட்டு போட்டால்   தற்காலத்தில் ஜனங்கள் எப்படியிருக்கிறார்கள் என்று வேறு படுத்தலாம்.
பல விதமான பஞ்சமாபாதங்களை பண்றவர்களை ‘பாபிகள் '
‘பாமரன்’ ன்னு ஒரு category போட்டால்  99.99% of the population வந்துடும். சாதாரண பிழைகளையும் தவறுகளையும் இழைத்துண்டு பணம், பெண் இதுல ஆசைப்பட்டுண்டு, நான் என்னோடதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துண்டு வாழ்க்கையை நடத்திண்டு போகக் கூடிய ஜனங்கள் எல்லாரும் பாமரர்கள் 

அவன் படிச்சவனா இருந்தாலும் சரி, ரொம்ப புத்திமானா இருந்து, ரொம்ப சம்பாதிச்சு சாமர்த்தியசாலியா இருந்து, திறமைகள் இருந்தாலும் சரி, வைதீகாளா இருந்தாலும் சரி, சந்யாசியா இருந்தாலும் சரி, பணத்தாசை இருந்தா பாமரன் தான். 

விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகியெல்லாம் படிச்சு பார்க்கணும். அப்பத்தான் அந்த உயர்ந்த நிலைமைகளோட பெருமை புரியும். அந்த நிலைமைகள் எல்லாம் அடையாத வரைக்கும் அவன் என்ன வேஷம் போட்டாலும் அதெல்லாம் உதர நிமித்தம் தான். அதனால அவனை நீங்க பெரியவனா நினைச்சுடாதீங்கோ. அவாளுடைய நோக்கம் என்ன என்கிறதை புரிஞ்சிக்கோங்கோ. காமினி காஞ்சனத்துல இருந்தா அவா பாமரர்கள் தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்ப வசத்துல எப்பவோ ஒரு தப்பு பண்ணினா பரவாயில்லை. பிராயச்சித்தம் பண்ணிக்கலாம். ஆனா எது right wrong-ன்னு தெரியாம தப்பே பண்ணிண்டு இருந்தா அவா பாமரர்கள் ன்னு சொல்றார்.


நீங்க அவாளோட பழகினா, நம்ம level-ல இருக்கறவாளோட பழகினா நாம அந்த level-ல தான் இருப்போம். மேல போக முடியாது.
‘விவேகி’ங்கறது எது right wrong-ன்னு தெரிஞ்சு, முடிஞ்ச வரைக்கும் நாம ரைட்டா நடந்துக்கணும். அந்த ஒரு right wrong-ஆவாது தெரிஞ்சு, எப்போதும் நேர்மையாக நல்லவனா இருக்கறவன் விவேகி.
தன்னலமில்லாதவர்கள் ‘ஸாதுக்கள். ‘சிறந்த விவேகி’, ‘முற்றின விவேகி’ என்கிறது men of wisdom வைராக்கியம் உள்ளவர்கள்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் மாதிரி பகவானுக்காக எதையும் விடறதுக்கு தயாராக, அவ்வளோ தெய்வத்துக் கிட்ட பாசம் வந்தவாளை ‘தெய்வ சாதுக்கள்.
ஒரு வாட்டி ‘வருண ஜபம்’ பண்ணா மழை கொட்டும் என்கிற அளவிற்கு, தெய்வத்தோட நேரா பேசக் கூடியவாளா இருந்த அந்த காலத்து பிராமணர்கள் ‘தெய்வ விவேகி’ கள் .
அதுக்கும் மேல பகவானோடயே எப்பவும் லயிச்சு இருக்கிறவாளை ‘மஹான்’கள் 
அத்வைத ஞானத்தை அடைவதற்கு ரொம்ப நெருங்கி இருக்கிறவாளை ‘துறவி’ங்கள் .
அத்வைத ஞானத்தில உட்கார்ந்து (நிலை பெற்று) இருக்கிறவாளை ‘ஞானி’ங்கறார். இப்படி ஒரு Gradation போட்டிருக்கார்.
இந்த Gradation தான் இந்த காலத்துல வசதி நமக்கு. ஏன்னா ‘எல்லா குலங்களிலும், எல்லா விதமான ஜனங்களும் பிறக்கறதுக்கு பகவான் வழி வகுத்து விட்டார். இந்த காலத்துல 99% of the people பாமரன், அல்லது பாபியாகத் தான் இருக்கா. அதனால நமக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது, மழை பெய்யறதே பகவானுடைய கருணைன்னு நீங்க புரிஞ்சிக்கணும்ன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றார். 
 ‘ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே’ கீழான மனிதர்களுக்கும் ஆசைப் பட்டதைக் கொடுக்கிறவர். அவாளுக்கு ஷேமத்தைக் கொடுக்கறவர்" அப்படிங்கற போது ,நமக்குத்தான் என உணர முடியும்.
நாம மஹான்களுடைய ஸங்கத்துனால உலக விஷயங்கள்ல இருந்து மனசு திரும்பறதுக்கு பிரார்த்தனை பண்ணனும். ‘நான்…..என்னுது … எனக்கு வேண்டியத சேர்த்து வைக்கிறது..’ இப்படியே ஓயாம திரும்பத் திரும்ப ஜன்மம் எடுத்து, திரும்பத் திரும்ப இதே காரியங்களைப் பண்ணி, வெட்கமே இல்லாம நான் திரிஞ்சிண்டு இருக்கேனே. மஹான்களோட ஸங்கத்துல சேர்ந்து, அவா ‘திருப்புகழை’ ‘பகவானோட பெருமை’யைப் பேசறத காதுல வாங்கிண்டு, அதை அங்க அவாளோட ஸங்கத்துல இருக்கும் போது மட்டும் காதுல வாங்காம, அங்கேயிருந்து வந்த பிறகும், அதைத் தன்னோடு எடுத்துண்டு வந்து அந்த போதத்தைக் (ஞானத்தை) பிரியாமல், அந்த பகவானோட குளிர்ச்சியும், அழகும், நிறைந்த அந்தப் பாதங்களை எப்பவும் தொழுது, நான் நல்ல வழியில, உயர்ந்த நிலைமையை அடைவேனா’ அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஏங்கணும்’ அப்படின்னு இந்த ஸ்லோகத்துக்கு பொருள் கொள்வோம்.
இதே மாதிரி திருப்புகழ் பாடல் ஒண்ணு இருக்கு. 
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையிலாதென் பவமாற
உனைப் பலநாளுந் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்குளி மேவி
உணர்த்திய போதந்தனைப் பிரியாதொண்
பொலச்சரணானுந் தொழுவேனோ
‘உனைப் பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்’ முருகா! எப்பொழுதும் உன்னுடைய பெருமையைப் பேசக்கூடிய, உன்னுடைய புகழைப் பாடக் கூடிய மஹான்களுடைய
‘தங்குளி மேவி’ அவா இருக்கிற இடத்தைத் தேடித் தேடிப் போய், தர்சனம் பண்ணி, ‘உணர்த்திய போதம்’ அவா ‘இதுதான் ஜன்மத்தோட பலன் .இதுக்கு நீ பண்ண வேண்டிய காரியம் இது’ன்னு அவா சொல்லிக் கொடுத்த அந்த ஞானத்தை, அந்த போதத்தை, ‘தனைப் பிரியாது’ அதை அங்கேயிருந்து இறங்கின உடனே மறந்து போயிடக் கூடாது. அதைப் பிரியாமல் ‘ஒண் பொலச்சரண் நானும் தொழுவேனோ’ உன்னுடைய ஒளி பொருந்திய பாதங்களை நானும் தொழுவேனோ அப்படின்னு வேண்டிக்கறார்.
அது மாதிரி ஸாதுக்களை நாம நினைப்போம். ஒரு நாளைக்கு முருகன் நமக்கும் அந்த மாதிரி விவேகத்தையும், தன்னலம் இல்லாத உயர்ந்த பக்தியையும் அருள வேண்டும்ன்னு பிரார்த்திப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா