Sunday 22 September 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 28


                                                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  28                                                                                                  
                                                                                                           
                                                                                                     
                                                                                                             
                                                     
कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

नरो वाथ नारि गृहे ये मदीयाः ।

यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं

स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८॥

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||  


 ஹே குமாரா:’ – குமரக் கடவுளே 

க்ருஹே:– என்னுடைய வீட்டில் உள்ள 

களத்ரம் – என்னுடைய மனைவி, 

ஸுதா–     என் பிள்ளைகள் 

பந்துவர்க:– அப்பா, அம்மா, அண்ணா தம்பி, இன்னும் பந்து வர்கத்துல                                 இருக்கறவா, 

பசுர்வா: – வீட்டுல இருக்கற மிருகங்கள், 

நரோவாத நாரீ வா – மத்த மனிதர்கள், பெண்கள் 

யே மதீயா– என்னைச் சேர்ந்தவான்னு நான் நினைக்கக்  கூடிய யாரா இருந்தாலும், அவா என்னுடைய நண்பர்களாக இருந்தாலும் சரி, என்னுடைய தொழில்ல கூட வேலை செய்யறவாளா இருந்தாலும் சரி, எனக்கு சம்பத்தப்பட்ட எல்லாரும், 

தே ஸர்வே – அவா எல்லாரும் முருகா

பவந்தம்– உன்னை, 

யஜந்த – பூஜை பண்றவாளாகவும் 

நமந்த – உன்னை  நமஸ்காரம் பண்றவாளாகவும் 

ஸ்துவந்த – உன்னை ஸ்தோத்ரம் பண்றவாளாகவும் 

ஸ்மரந்த– உன்னையே ஸ்மரிக்கறவர்களாகவும் 

ஸந்து’ – இருக்கட்டும்

இதுல இந்த பசுர்வான்னு சொன்னதை ‘எனக்கு தெரிஞ்ச பசுக்கள் கூட உன்கிட்ட பக்தியா இருக்கணும்’ என்கிற போது, குருவாயூர் கேசவன்-னு ஒரு யானை ஞாபகம் வரது. அந்த யானை குருவாயூரப்பனுக்கு அறுவது வருஷம் service பண்ணித்து. அப்புறம் ஒரு குருவாயூர் ஏகாதசி அன்னிக்கு, அன்னிக்கு நாளெல்லாம் ஒண்ணும் சாப்பிடாம இருந்து, அந்த ஸ்வாமி சன்னதியைப் பார்த்துண்டு, தன் தும்பிக்கையை மேல தூக்கி, ஒரு  வாட்டி பிளறிட்டு உயிரை விட்டது. அந்த யானை மேலே ஸ்வாமியை வச்சுண்டு யாராவது  வந்தா ஸ்ரீவேலிம் போது ஏறாலமே தவிர வேற யாரும் ஏற முடியாது. அது ஏற விடாது. அப்பப்போ அதை  கட்டி வெச்சுருக்கற இடத்துலேயிருந்து கிளம்பி, நேரா ஸ்வாமி சன்னதிக்கு வந்து கோயிலை ப்ரதக்ஷிணம் பண்ணிட்டு போகும். இப்படி ஒரு அற்புதமான யானை. அதுக்கு கஜராஜன்-னு தேவஸ்வத்துலேர்ந்து title கொடுத்திருந்தா. பூர்வ ஜென்மத்துல பக்தி பண்ணின வாசனைனால, எவ்வளவு மிருகங்கள் கூட பகவானோட பக்தி பண்றது.


இப்ப  கூட பார்க்கறோம். ராமாயணம் நடக்கறதுன்னா தீடிர்னு எங்கயிருந்தோ ஒரு வானரம் வந்து  அந்த ராமாயணத்தைக் கேட்டுட்டு பழத்தை எடுத்துண்டு போறதுன்னு எல்லாம் சொல்றா. 


பசுக்கள் பால் கொடுக்கறது ஸ்வாமி புஜைக்குன்னா நிறைய யதேஷ்டமா பால் கொடுக்கறது. நம் வீட்டில்  நாம பார்த்திருப்போம். அப்படி என்னுடைய வீட்டுல இருக்கற  பசுக்கள் கூட  உன்கிட்ட பக்தியா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார்.

 அதுக்கும் மேலே இந்த மாதிரி உலக விஷயங்கள்ல ரொம்ப பாசம் வெச்சு அல்லல் படாமல் இருக்கணும் னும் வேண்டிக்கணும். 


கந்தர் அனுபூதி யும் இதையே வலியுறுத்துகிறது.
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,


தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. 



மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்றயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே. 


(முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ ‘மாடை’ னா தங்கம், பணம். ‘மடந்தையர்’ னா பெண்கள். இதுலேயே என் மனசு தயங்கி தயங்கி அங்கேயே நிக்கறது. அதை உதறவே மாட்டேங்கறதே. ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே!’  ‘ஆறுமுகம் ஆறுமுகம்’ ன்னு சொல்றேன். இதெல்லாம் இன்னமும் ஒழிய மாட்டேங்கறேதே )

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே. 


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல, புரந்தர பூபதியே. 


 நம்மைச் சேர்ந்தவா நமக்கு அனுகூலமா இருக்கணும்.  நமக்கு  நல்ல நண்பர்கள் , நல்ல பந்துக்கள், நாம வளர்க்கற மிருகங்கள் , நமக்கு வர்ற அதிகாரிகள், நமக்கு வர்ற வேலைக்காரர்கள்  எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

No comments:

Post a Comment