Tuesday, 31 January 2017

தை பூசம் இசை வழிபாடு
                                                                                                                                                 தை பூசம் இசை வழிபாடு                                                                                                         தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.


 இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். 


சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.

தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

உண்மை தேவியின் சாபத்தை அடைந்த முருகன் சாபம் தீர கடும் தவம் புரிந்தார் அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார்.

யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார்

விரிவான தகவல்களை  அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையைகீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்
 
http://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=c53cbeca5d


இந்த சந்தர்ப்பத்தில் கோயம்புத்தூர்  அருளாளர் வி.எஸ் கிருஷ்ணன்  அனுப்பியுள்ள மற்றொரு கட்டுரையையும் அனுபவிப்போம் 

http://www.thiruppugazh.org/?p=1932  இந்த ஆண்டு குரு புஷ்ய மாக அமைந்தது மிகச் சிறப்பு.

வழக்கம் போல் நம் தைப்பூச இசை  வழிபாடு வைபவம்  9.2.2917  வியாழக்கிழமை அன்று கரோடியா நகர் பஜன் சமாஜ் வளாகத்தில் மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளதுஅன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை முதலே  கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.


அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது,

                                                                                                            

                                                                                                    


                                                                                         முருகா சரணம்

Saturday, 28 January 2017

மும்பை படிவிழா நிறைவு


                                                        மும்பை   படிவிழா  நிறைவு


படி விழா வைபவம் கணபதி ஹோமம் ,படிபூஜைகளுடன் தொடங்கி குரு பாலு சார், மாமி, மணி சார் வழி நடத்தலில் அன்பர்கள் பக்தி பூர்வமாக 108 படிகளையும் 108திருப்புகழ் பாடல்கள்,அனுபூதியுடன் கடந்து பெருமான் சந்நிதானத்தை அடைந்து வேல்,மயில் விருத்தம் ,வகுப்புகளை  இசைத்து பரவச நிலையை எட்டினார்கள்

வைபவத்துக்கு மும்பை அன்பர்களோடு புனே அன்பர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.பெங்களூரு அன்பர் ஸ்ரீனிவாசனும்  கலந்து கொண்டார்.

முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பான முறையில் அமைந்தது.அலங்காரத்துடன் பெருமான் எழுந்தருளி அன்பர்களுக்கு காட்சி அளித்தது  அன்பர்களை பரவசப்படுத்தியது.அருள் வேண்டல்,குரு வந்தனத்துடன் வைபவம் இனிதே நிறைவு பெற்றது.

பெருமான் சன்னதியில் சமர்ப்பித்த வேல் மயில் விருத்தம் வகுப்புகளின் இசைத் தொகுப்பு  கீழே .

                                                                                                        பகுதி ...1

                                                                                                           
video
                                                                                                                   
             
                                                                                      பகுதி    2


video
               

                                                                                   பகுதி   3 


video
                                                                                                                     

                                                                                    அருள் வேண்டல் 

video
                                                                                                                                                                                சில     புகைப் படத் தொகுப்பு 

                                                                     ஆலய பிரவேசம்
                                                                                                           


                                                                                  படிபூஜை


                                                                               படி ஏற்றம்                                                                                       
                                                                                                                                      மூலவர் தரிசனம்                                                                           
                                                                                                    


            


                                                                        ஆலய பிரசாதம்
                                                                                                      

ஆடியோ/புகைப் பட உதவி அருளாளர் மும்பை கே.ஆர்.பாலசுப்ரமணியம் 

முருகா சரணம்


Friday, 27 January 2017

தை அமாவாசை                                                                          தை அமாவாசை 

                                          அபிராமி அந்தாதி,அபிராமி பதிகம் பாராயணம்                                                                                                              


இன்று தை அமாவாசையை யொட்டி நாடெங்கிலும்திருப்புகழ் அன்பர்களின் அபிராமி அந்தாதி,பதிகம் பாராயண  வைபவம் நடைபெறுகின்றன.இந்த சந்தர்ப்பத்தில் அந்த தெய்வீகப் பாடல்களை நமக்கு அருளச் செய்த அன்னை உபாசகர் அபிராம பட்டரை சற்று நினைவு கூர்ந்து அவர் தாள்களை வணங்குவோம்.

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஸ்ரீவித்யா நெறி நின்று, யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்ட ஒரு அந்தணர். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.

                                                                அபிராமி காட்சி

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

                                                                  பௌர்ணமி திதி

அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

        “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
        வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
        பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
        குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
 
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. 

இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.

நம் குருஜி அபிராமி அந்தாதி,அபிராமி பதிகம் பாடல்களுக்கு இசை அமைத்து ,அன்பர்களுக்கு கற்பிக்கும் முறையில் வழங்கியுள்ளார்.
அவை திருப்புகழ் நவமணி (DVD ..1B ) யில் இடம் பெற்றுள்ளன. அதன் மூலம் உலகில் உள்ள அன்பர்கள் இன்று இசைத்து வருகிறார்கள்.

பாடல்களை வீடியோ வடிவில் அளிக்கிறோம்.


                                                                 அந்தாதி பகுதி ..1

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=HN3D5f94InU


                                                                                                            அந்தாதி பகுதி ....2

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=Ip7q-4sivS4                                                                                                                   

                                                                                பதிகம் 

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=TXEcTCmdMp0                                                                                                                   
                                                                                           முருகா சரணம்                                                                                                             

Monday, 23 January 2017

மும்பை படிவிழா                                                      மும்பை  படிவிழா 

                                                                   திருசெம்பூர் திரு முருகன் திருக்கோயில
                                                                                                           


வழக்கம்போல் 37ம்ஆண்டு  படிவிழா செம்பூர் முருகன் ஆலயத்தில்   26.1.2017 காலை 7.30 மணிஅளவில் தொடங்கி  108  திருப்புகழ்பாக்களுடன்படிவிழா வைபவம் நடைபெறஉள்ளது.

அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.

மும்பை,,புனே வாழ் அன்பர்களும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு முருகப் பெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்.
                                                                                                            


படி விழாவில் இடம் பெரும் பாடல்களின் தொகுப்பு

                                                                                   முருகா சரணம்

Sunday, 22 January 2017

குரு மஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் (476--503)


              குரு மஹிமை இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் (476--503)                                                                                                            
குருஜி அமைத்துள்ள 475 பாடல்கள் வரை   CD /DVD வடிவில் இடம் பெற்றுள்ளன.  திருப்புகழ் நவமணி  DVD  1 லும் இடம் பெற்றுள்ளன.பின் சேர்க்கப் பட்டுள்ள பாடல்களுக்கு குருஜியின் குரலில் மின் அணு சாதனங்களில் பதிவு செய்யப்படவில்லை என்று அறிகிறோம்.

அவைகளை  குருஜியின் வகுப்புகளில் கற்று அனுபவித்தவர்கள் பாக்கிய சாலிகள்.அவைகளின் பதிவுகள் அன்பர்களிடம் இருந்தால் எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இருப்பினும்,அப்பாடல்கள் கீழ்க்கண்ட வகையில் அன்பர்களுக்கு கற்கப்பெருமளவில் உதவி புரிந்துள்ளன.முருகப் பெருமானின் அருளால் மிக குறுகிய கால அளவில் அன்பர்கள் அவைகளை கற்று வழிபாடுகளில் இசைத்து வருகிறார்கள்.

1.  17.10.2010  விஜய தசமி அன்று குருஜி இப்பாடல்களை மட்டும் கொண்ட இசை வழிபாட்டில்  அன்பர்களை பாடவைத்தார் என்றே சொல்ல வேண்டும்.அதன் பதிவு  Thiruppugazhanbargal's chennai Blog ல் இடம் பெற்றுள்ளது.
2. ஜூலை 2013ல் நடை பெற்ற ஆன்மீக விழாவில் அன்பர்களால் இசைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு CD  வடிவில் வெளியிடப் பட்டது.

3.அன்பர்கள் குறுகிய காலத்தில்  கற்று ஒவ்வொரு வழிபாட்டிலும்சில பாடல்களை இசைத்து  வருகிறார்கள்.அவை அருளாளர் மாலதி ஜெயராமன் U Tube வடிவங்களில் வெளியிட்டு வரும் வழிபாடுகளின் பதிவுகளில் இடம் பெற்றுள்ளன.

சேகரித்துள்ள இப்பாடல்களை உலகில் உள்ள எல்லா அன்பர்களும் கற்று,இசைத்து அனுபவித்து வழிபாடுகளில் இசைக்க வேண்டும் என்ற  உந்துதல்  காரணமாக ஒவ்வொன்றாக  வெளியிட  .விருப்பம் கொண்டுள்ளோம்.

இப்பாடல்களை  சேகரித்து  வைத்துள்ளஅன்பர்கள் அவைகளின் ஆடியோ வீடியோ க்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மிக்கது தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

    Email ID...............                  arunagiriyar@gmail.com

முதலில் புதிய வரிசை எண் 476 வழிபாடு புத்தக எண்  18

                                "இருக்கும் காரண " என்று தொடங்கும் திருச்செந்தூர் பாடல் 

                                                                                    சுத்த தன்யாசி ராகம்

                                                                                  பாடலின் பொருளுக்கு

               http://thiruppugazhamirutham.blogspot.in/2012/08/18.html
 

                                        "சுத்த தன்யாசி" ராகத்தில் குருஜியின் ஒரு விருத்தம் 
                                                                                                                                                                                                                            https://youtu.be/5ijF_pi2o4c

                                                                          17.10.2010  விஜய தசமி வழிபாடு                                                                                                                                               

video
                                                                                                         
                                                                                    வழிபாட்டில் அன்பர்கள்


video
                                                                                                             

முருகா சரணம்
                                                                                                                  

Saturday, 7 January 2017

குருமஹிமை. இசை.ராகங்கள்
                                   குருமஹிமை. இசை.ராகங்கள்
குருஜி இசை அமைத்துள்ள பாடல்கள் CD வடிவில் கற்பிக்கும் முறையில் அமைந்துள்ளன.

அதோடு வழிபாட்டில் இடம் பெற்றுள்ள பாடல்களும்  நவ மணியில் இடம் பெற்றுள்ளன.வழிபாடுகளில் குருஜியியுடன் இணைந்து அன்பர்கள் இசைக்கும் பாடல்கள்அனுபவத்தைபிறருக்குஇசைவிக்கமுடியாது.மற்றும் பல அன்பர்கள் ,குறிப்பாக விருத்தம் பாடும் அன்பர்கள்"வழிபாடுகளில் அமர்ந்தவுடன் பெருமான்தான் ஆட்டுவிக்கிறான்.பாடுகிறோம்.அதையே இல்லத்தில்  அமர்ந்து தனியாக  பாடினால்  அப்படி வருவதில்லை "என்கிறார்கள்.காரணம் சத்சங்கம்.முருகன் சன்னிதானம்
.கூட்டு வழிபாடு.தான்.
இதை மனதில் கொண்டு ,வழிபாட்டில் இடம் பெற்றுள்ள பாடல்களை குறிப்பாக குருஜியின் விருத்தங்களோடு கூடிய பாடல்களை யாவர்க்கும் அளிக்க வேண்டும் என்ற பேராசை எழுந்தது.எப்படி அளிப்பது  என்ற சிந்தனையில் வழிபாடு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த போ து பட்டியல் தென் பட்டது .அகரவரிசை ,திருத்தலங்களின் வரிசை,ராக வரிசை பட்டியல்கள் முன் நின்றன.
 வழிபாடுகளில் இடம் பெரும் பாடல்களின்  பட்டியலை அன்பர்களுக்கு அளிப்பது என்ற முறை சமீபத்தில் வந்ததுதான்.குருஜியின் வழிபாடுகளில் இது கடை பிடிக்கப்படுவது இல்லை என்று அறிகிறோம்.அந்நிலையில் அன்பர்கள் விருத்தத்தின்  ராகம் கொண்டே அதன் பாடலோடு  தயார் நிலையில் இருப்பார்கள்.இதை மனதில் கொண்டும்,மற்றும் ஒரு ராகத்தில் பல பாடல்களின் வெவ்வேறு எடுப்பு,கோணம் விஸ்தாரம்,ஆழ்ந்த சஞ்சாரம் ,பாவம்,நிரவல் போன்றவைகளை அன்பர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற அவாவினால்,எழுந்ததுதான் ராகம் வரிசையில் இதுவரை அளித்துவந்த பாடல்கள்.
செப்டம்பர் 2015ல் தொடங்கிய இந்த முயற்சி ஜனவரி 2017ல் சுருட்டிராகத்துடன்நிறைவுற்றது.அதில்111ராகங்கள்,ராகமாலிகை,அடங்கியுள்ளன.வெளியிட்டுள்ள 665 வீடியோக்களில் விருத்தங்கள்,503 பாடல்கள்,வேல் மயில் விருத்தங்கள்,வகுப்புகள்,நிரவல்கள்,அருள் வேண்டல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன.முதன்மையாக குருஜியின் வழிபாட்டு பாடல்களை யும் ,தொடர்ந்து மற்ற அருளாளர்கள் கலந்து கொண்ட வழிபாட்டு பாடல்களையும் அளித்துள்ளோம்.
இதற்கு ,நவமணி DVDக்கள் ,அருளாளர்கள் அய்யப்பன்,மாலதி ஜெயராமன்,கே.எஸ்.ராமமூர்த்தி,ஜி .வி.நீலகண்டன்,மும்பை கே.ஆர்.பாலசுப்ரமணியம் அளித்துள்ள வீடியோக்கள் ஆடியோக்கள் பெரிதும் உதவின.அவர்களுக்கு மிக்க நன்றிக்  கடன் பட்டுள்ளோம்.
இப்போது நாங்கள் வெளியிட்டுள்ள எல்லா ராகங்களின் பட்டியலையும்.அதன் தனித்தனி குறியீடுகளையும்கீழேகொடுத்துள்ளோம்.அன்பர்கள் எந்த ராகத்தை வேண்டுமானாலும் வீடியோவுடன் அனுபவிக்கலாம்.
இந்த முயற்சி அன்பர்களுக்கு ஓரளவு பயன் தரும் என்று நம்புகிறோம்.. அன்பர்கள் பெருமளவில் எங்கள் வெளியீட்டை தொடந்து பார்த்துவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.தங்களின் மேலான கருத்துக்களை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
குரு மஹிமை இசை மற்றொரு கோணத்தில் தொடரும்.

முருகா சரணம்


22.9.2015 முன்னுரை ..சந்திரா கௌன்ஸ்  ராகம்   

http://thiruppugazhanbargalGurumumbai.blogspot.in/2015/09/blog-post_22.html

24.9.2015   முன்னுரை பந்துவரளி ராகம் 


9.10...2015  நாட்டை குறிஞ்சி,தர்பாரிகானடா,சிந்துபைரவி,சாவேரி ( வீடியோ )


9.10.2015  பந்துவராளி,பூர்விகல்யாணி 


12.10.2015   ஸ்ரீரஞ்சனி ,ஆபோகி 


15.10.2015  ஷண்முகப்ரியா 

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/10/blog-post_15.html

17.10.2015  சிமேந்திர மத்யமம் ராகம்


20.10.2015   யதுகுல காம்போதி  மலயமருதம்  ஹமிர்கல்யாணி  கல்யாணி

22.10.2015 .. தர்பார் ,ஹுசைனி. தேவகாந்தாரி


24.10.2015  குறிஞ்சி, சௌராஷ்ட்ரம், தேவமனோஹரி


26.10.2015   சுநாத வினோதினி ,ஹம்ஸநாதம், , சிவரஞ்சனி


27.10.2015  ஹரிகாம்போதி ,நவரச கன்னடா ,நளின காந்தி 


29.10.2015   லலிதா ,தர்மாவதி கவுரி மனோகரி,சரஸ்வதி

30.10.2015   விஜயநாகிரி  பௌளி   மணிரங்கு  தேனுக ராகங்கள்
31.10.2015   த்விஜாவந்தி,பஹூதாரி  ஆந்தோளிகா, மலஹரி ராகங்கள்


2.11.2015  காவடிச்சிந்து ,குமுதக்ரியா ,நடபைரவி ,ஜனரஞ்சனி ராகங்கள் 3.11,2015  ரீதிகௌளை , வராளி ராகங்கள் 


6.11.2015  சாருகேசி  ஆஹிரி ராகங்கள் http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_81.html

14.11.2015   சங்கரானந்தப்ரியா

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_28.html

16.11.201    யமுனா கல்யாணி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_16.html

17.11.2015  மத்தியமாவதி   1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_17.html

19.11.201  
மத்தியமாவதி   2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_19.html

20.11.2015  பிலஹரி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_20.html

23.11.2011  அம்ருதவர்ஷணி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_23.html

27.11.2015  தேஷ்

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_27.html

30.11.20 15
   செஞ்சுருட்டி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/11/blog-post_30.html
1.12.2015  


 ரேவதி,ஹம்ச வினோதினி
 http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_1.html

5.12.2015   நாட்டை குறிஞ்சி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_5.html

7.12.2015 சுத்த தன்யாசி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_9.html

11.12.2015 தன்யாசி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post.html

15.12.2015   கௌளை
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_15.html

17.12.2015  கேதார கௌளை 

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_17.html

19.12.2015  மாயாமாளவ கௌளை ராகம் 

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_19.html

21.12.2015  ஸாமா
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_21.html

27.12.2015  வலஜி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_27.html

30.12.2015   ரஞ்சனி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2015/12/blog-post_30.html

`2.1.2016  சுப வந்துவராளி 

2.3.2016  சிந்து பைரவி  1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/03/blog-post.html

7.3.2016  சிந்து பைரவி  2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/03/blog-post_44.html

9.3.2016  சிந்து பைரவி  3

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/03/blog-post_9.html

13.3.2016  சிந்து பைரவி 4

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/03/blog-post_9.html

16.3.2016  சிந்து பைரவி  5

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/03/blog-post_16.html
10.4.2016  காம்போதி
27.4.2016  பிருந்தாவன சாரங்கா

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/04/blog-post_27.html
2.5.2016  தர்பாரி கானடா

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/05/blog-post.html
10.5.2016  அசாவேரி ...சுத்த சாவேரி 

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/05/blog-post_39.html
13.5.2016  நீலாம்பரி..பூபாளம்

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/05/blog-post_13.html
24.5.2016  நாதநாமக்ரியா

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/05/blog-post_24.html
27.5.2016  புன்னாக வராளி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/05/blog-post_27.html
29.6.2016   பாகேஸ்ரீ ..1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/06/1_29.html
2.7.2016    பாகேஸ்ரீ ..2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/07/2.html
5.7.2016    கரஹரப்ரியா ..1
25.7.2016  ஆனந்த பைரவி ...1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/07/1_25.html

29.7.2016  ஆனந்த பைரவி ...2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/07/2_29.html

2.6.2016     ஆனந்த பைரவி ...3

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/08/3.html
20.8.2016  கீரவாணி   1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/08/1.html

23.8.2016  கீரவாணி   2
2.9.2016  ...பெஹாக் ...1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/1.html

7.9.2016....பெஹாக்...2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/2_91.html
`11.9.2016..ஆரபி  1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/1_11.html
14.9.2016...ஆரபி ..2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/2_14.html
17.9.2016....முகாரி

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/blog-post_17.html
20.9.2016...மனோலயம் ...1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/1_20.html

24.9.2016   .மனோலயம் ...2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/2.html
27.9.2016    குந்தலைவராளி ..1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/09/1_27.html

1.10.2016    குந்தலைவராளி ...2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/10/2.html
3.10.2016    கானடா ..1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/10/1.html
7.10.2016....கானடா ...2
28.10.2016   ஹிந்தோளம் ....1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/10/1_28.html

1.11.2016..... ஹிந்தோளம்....2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/2.html

4.11.2016..... ஹிந்தோளம்....3

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/3.html

8.11.2016...... ஹிந்தோளம்....4

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/4_43.html

11.11.2016     ஹிந்தோளம்....5

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/5.html

14.11.2016     ஹிந்தோளம்....6

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/6.html
17.11.2016....ஹம்சாநந்தி ...1

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/1.html

19.11.2016.....ஹம்சாநந்தி ...2

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/2_19.html

24.11.2016......ஹம்சாநந்தி ...3

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/3_24.html

27.11.2016.ஹம்சாநந்தி ...4

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/11/4.html
1.12.2016...ஹம்சாநந்தி ...5

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/12/5.html
9.12.016......கல்யாணவசந்தம்

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2016/12/blog-post_9.html
3.1.2017....சுருட்டி
http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2017_01_01_archive.html