Tuesday 31 January 2017

தை பூசம் இசை வழிபாடு




                                                                                                                                                 தை பூசம் இசை வழிபாடு 



                                                                                                        



தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.


 இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். 


சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.

தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

உண்மை தேவியின் சாபத்தை அடைந்த முருகன் சாபம் தீர கடும் தவம் புரிந்தார் அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார்.

யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார்

விரிவான தகவல்களை  அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையைகீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்
 
http://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=c53cbeca5d


இந்த சந்தர்ப்பத்தில் கோயம்புத்தூர்  அருளாளர் வி.எஸ் கிருஷ்ணன்  அனுப்பியுள்ள மற்றொரு கட்டுரையையும் அனுபவிப்போம் 

http://www.thiruppugazh.org/?p=1932 



 இந்த ஆண்டு குரு புஷ்ய மாக அமைந்தது மிகச் சிறப்பு.

வழக்கம் போல் நம் தைப்பூச இசை  வழிபாடு வைபவம்  9.2.2917  வியாழக்கிழமை அன்று கரோடியா நகர் பஜன் சமாஜ் வளாகத்தில் மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளதுஅன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை முதலே  கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.


அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது,

                                                                                                            

                                                                                                    


                                                                                         முருகா சரணம்

No comments:

Post a Comment