Sunday 27 January 2013

தைப்பூச நன்நாள்


தைப்பூச நாளின் பிண்ணணி என்ன?

இரண்டு புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.  ஒன்று தாரகாரசுரனை வதம் செய்த நாள் தைப்பூச நாள். பிறகு எட்டு மாதங்கள் சென்ற பின்னரே ஐப்பசியில் சூர ஸம்ஹாரம் நடந்தேறியது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

மற்றொன்று சற்று சுவாரசியமானது.  சிவபிரான் பார்வதிதேவிக்கு பிரணவ உபதேசம் செய்த சமயம் அதை மறைந்து இருந்து கேட்டாராம் முருகபிரான். ஒட்டுக் கேட்பது தவறாயிற்றே. ஆக தன் மகனே அந்த தவறைச் செய்திருந்தாலும் அதற்கான தண்டனை பெற்றே தீர வேண்டும் எனக் கருதி அச்சிறுவனை தவ செய்யச் சொன்னராம் தாய் தந்தையர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று நம் குட்டி பையனும் தவம் செய்து அதை நிறைவேற்றிய நாளே தைப்பூச நன்னாள் என்று கூறப்படுகின்றது. முருகனுக்கு உண்டான விசேஷ நாட்களிலெல்லாம் பக்தர்கள் காவடி எடுத்தாலும் தைப்பூசக் காவடி மிகவும் சிறப்பானதாகும்.
அவர்களும் விரதமிருந்தே காவடி எடுக்கிறார்கள்.  “பூசத்துப் பழையதை பூனை கூட தின்னாது” என்று பாட்டி சொல்லக் கேட்டிடுகிறேன்.

நாமும் நம்முடைய பிறவிப்பிணி என்ற சாபத்தை போக்க முருக பெருமானை வேண்டுவோம். 

இன்று பௌர்ணமியாக இருப்பதால் முருகனையும் சந்திரனையும் இணைத்துப் பார்ப்போமா?

கண்களு(ம்முகங்களும் சந்திர நிறங்களும்  
கண் குளிர என் தன் முன் சந்தியாவோ?

என  அருணகிரிநாத பெருமான் வேண்டுவது நினைவில் வருகின்றது. அது என்ன ‘சந்திர நிறங்களும்’. சந்திரனுக்கு பல நிறங்களா?   ஆமாம், பலநிறங்கள் உண்டு. முக்கியமாக ஆறு நிறங்கள் உண்டு. அவையானவை

1. பெளர்ணமி அன்று =  மஞ்சள் (Yellow)
2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு =  வெளிர் நீலம் (Blue moon)
3. மாலையில் =  வெள்ளை (White)
4. காலையில் =  சாம்பல் (Grey)
5. குளிர் காலத்தில் =  காவி (Orange)
6. அபூர்வமாககிரகண காலங்களில் =  சிவப்பு (Red)

நிலவு -  பூமியின் சுழலுக்கேத்தாப் போல தன் நிறத்தை மாற்றி மாற்றி இன்பம் குடுக்கும் -  குளிர்ச்சிஅதே போல் முருகனின் ஆறு முகங்கள் -  அறு வண்ணங்கள், நம்ம மனச்சுழலுக்கு ஏற்றார் போல் மாறி மாறிக் குளிரப் பண்ணும். இதுவே சந்திரநிறங்கள்”!
சந்திர நிறங்களும் கண்குளிர எந்தன்முன் சந்தியாவோஎன  வேண்டுவதின் காரணம் நமக்கு புலனாகிறது.
அந்த அழகான திருச்செந்தூர் திருப்புகழின் பொருளை மீண்டும் ஒரு முறை சுவைப்போம்.
திருச்செந்தூர் மேவிய முருகா,  கமலத்திப் மேல் அமர்ந்திருக்கும் பிரமன் படைத்தஉலகம் ஆடமற்ற உலகங்களும் சுழற்சி செய்ய, நீ போருக்குப் புறப்பட்ட போதுதேவர்களின் மனதில் பொங்கிய மகிழ்ச்சியால் அவர்களும் ஆட, அந்த மகிழ்ச்சியில் நீய்உம் ஆட, உன் ஆட்டத்தைஅதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் திருமாலும் , ஆடல் வல்லானாகிய உன் அப்பனும் பார்த்து மகிழ, என்ன இது? ....செந்தூரில் மட்டுமா? அந்த குஞ்சு பதங்கள் என் மனத்திலுமல்லவா கொஞ்சி நடனம் செய்கின்றன! கந்தவேளேஅப்படி நீ ஆடுகையில் உன் தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சுகிறது ....மணி மகுடம் தெரிகிறதுகையில் வேல் தெரிகிறதுபன்னிரு கண்களும் ஆறிரு தோள்களும் தெரிகின்றனவேமுருகாஎன்னுள் நீ ஆட ஆடுக ஆடுகவே! ஆடி என் பிறவிப் பிணியை போக்கடிப்பாயாக.

சாந்தா
சுந்தரராஜன்


1 comment:

  1. மிக ஸ்வாரசியமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete