Friday 4 January 2013

தைபூசம் திருப்புகழ் இசை வழிபாடு: 27-01-2013


தைபூசம் வருகிற 27-01-2013 அன்று முருகன் உரையும் தலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.சில சிறப்புகளை மங்கையர் மலரில் படிக்கசந்தர்ப்பம் கிடைத்தது.

 "சிவபெருமான் முதன் முதலாக தில்லையில் (சிதம்பரம்)நடனமாடிய நாள்.அன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும் சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் வீடான மகரத்திலும் விழுகிறது.இது மிகவும் உயர்ந்த நிலையாகும்.சூரியனால் ஆத்மா பலமும்,சந்திரனால் மனோ பலமும் கிடைக்கிறது. வள்ளி திருமணத்தால் ஊடல் கொண்ட தேவயயானையை சமாதானம் செய்து இருவருடன் சேர்ந்து காட்சி அளித்த நாள்.ஸ்ரீ ரங்கநாதர் தன தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை கொடுக்கும் நாள்.உலக நாடுகளில் பூசத்துக்காக விடுமுறை அளிக்கும் ஒரே நாடு  மலேசியா தான் "
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தைபூச விழாவை  நாமும் வழிபா ட்டுடன்  கொண்டாடி முருகன் அருள் பெறுவோம்.அழைப்பிதழ் இணைத்து ள்ளோம்.

2 comments:

  1. S.KRISHNAMOORTHY THANE4 January 2013 at 22:20

    தைப்பூச நன்னாளைப் பற்றிய செய்திகள் சிந்தனைக்கு அருமையான விருந்து . அன்பர்களுடன் கூடி முருகன் திருப்புகழ் பாடும் அரிய வாய்ப்பை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் . பாடல் அட்டவணை முன்கூட்டியே அறிவித்தல் சாலவும் நன்று . ஓம் முருகா சரணம்!

    ReplyDelete
  2. சுவையான செய்தி. நன்றி.

    ReplyDelete