Friday 4 January 2019

சுப்பிரமணிய புஜங்கம் 24


                                                                       சுப்பிரமணிய புஜங்கம்  24


  
अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥ २४ ॥
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே |
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் ||


உரை ஆசிரியரின் விளக்கம் 
ஆதி சங்கர பகவத்பாதாள் மஹான், ஞானி. அவருக்கு ஒரு துக்கமும் கிடையாது. இருந்தாலும், நாம இருக்கற நிலைமையை உணர்ந்து, எப்படி பகவான் கிட்ட என்ன வேண்டணும் அப்படீன்னு சொல்லி கொடுக்கறதுக்காக இப்படி ஒரு ஸ்லோகம் சொல்றார்.
 ‘அஹம் ../நான் 
 ‘ஸர்வதா’ – எப்பொழுதும்,
 ‘துக்கபாராவஸந்ன:’ – துக்க பாரத்தை சுமந்துண்டு, அந்த பளு தாங்க முடியாம, பரிதவிச்சிண்டு இருக்கேன், அவஸ்த்தை பட்டுண்டு இருக்கேன்
. ‘பவான்’ – தாங்கள் 
‘தீனபந்து’ – தீனன்னா ஏழை, அனாதை, யாரும் இல்லாதவன் ன்னு அர்த்தம். அந்த மாதிரி இருக்கறவாளுக்கு பந்து நீ தான்
த்வதன்யம் நயாசே’ – உன்னைத் தவிர இன்னொருவர்  கிட்ட போய் நான் கேட்க மாட்டேன். (இது ஒரு முக்கியமான message, பகவான் கிட்டத்  தான் நாம கஷ்டத்தை சொல்லி அழணும்,)
 ‘த்வம்’ – நீ 
க்லுப்த பாதம்’ எனக்கு கஷ்டத்தை கொடுக்க கூடிய,
பவத்பக்தி ரோதம்’ – உன்னுடைய பக்தியை பண்ண முடியாம என்ன ஸ்ரமபடுத்தும், தின்னா உடம்புக்கு வர்ற வ்யாதி, ஆதின்னா மனசுக்கு வரக்கூடிய இந்த கவலைகள், அந்த துக்க பாரம்-ன்னு சொல்றாரே, அதெல்லாம் சேர்த்து ஒரே வார்த்தைல ஆதி-ன்னு சொல்லுவா

(நங்கநல்லூர்-ல எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி  ‘ஆதிவ்யாதி ஹர ஆஞ்சநேய ஸ்வாமி’ என்று திரு நாமம் கொண்டுள்ளார்.)
ஆதி’ – வ்யா‘த்ருதம்’ – சீக்ரமாக
‘நாஷய’ அப்படீன்னு சொல்லும்போது, இந்த இடத்துல ‘ஹே உமாஸுதா’ ன்னு சொல்றார் , உமையின் மைந்தனே, பார்வதி போல அந்த கருணை உள்ளம், ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கும் இருக்கறதுனால, நீ எந்தன் துக்க பாரத்தை போக்கு, அப்படீன்னு சொல்றார்.
இந்த இடத்துல தேதியூர் சாஸ்திரிகள் ஒரு ஸ்லோகம் சொல்றார்.
चिता चिन्ता तयोर्मध्ये चिन्ता एव गरीयसि |
चिता दहति निर्जीवं चिन्ता जीवन्तमप्यहो ||
சிதா சிந்தா தயோர்மத்யே சிந்தா ஏவ கரீயஸி |
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்தம் அப்யஹோ ||
‘சிதாவுக்கும் சிந்தாவுக்கும் தராசுல வெச்சு பார்த்தா, சிந்தா தான் ரொம்ப வந்து பலசாலியா தெரியறது. சிதை – கடைசில, இடுகாட்ல எரிப்பாளே அதுக்கு சிதைன்னு பேரு. அந்த சிதை உயிர் போன பின்ன தான் எரிக்கறது, இந்த சிந்தைங்கற கவலை, உயிரோடு இருக்கும் போதே மனிதனை எரிக்கறதே!’ ன்னு சொல்றார். அப்படி அந்த சிந்தைக்கு இடம் கொடுக்க கூடாது.
நாம துக்கப் படறோம்ன்னு நமக்கு தெரியறது, அந்த துக்கத்துக்கு காரணம் என்ன? நாம ரொம்ப பந்தத்துல மாட்டிண்டு, அதனால தான் சந்துஷ்டி இல்லாம இருக்கோம், அப்ப்டீங்கறத எப்பயோ ஒரு சமயத்துல உணர்றோம், உணர்ந்தா கூட இதெல்லாம் எப்படி விட முடியும், இனிமே எப்படி விட முடியும், அப்படியெல்லாம் நினைச்சிண்டு, ஆசார்யாள் இங்கே சொல்ற இந்த பிராத்தனையே நாம பண்ண மாட்டேங்கறோம்.
 இந்த ஸ்லோகத்துல ‘நான் உன்னையே வேண்டறேன், என்னை இந்த துக்கத்துலேர்ந்து மீட்டு விடு’ அப்படீன்னு பகவான் கிட்ட போய் ப்ரார்த்தனை பண்றது கூட பண்ண மாட்டேங்கறோம், ஏதோ இந்த துக்கத்துக்கு நடுவில சொட்டு சுகம் இருந்தா, அதே போறும்-னு த்ருப்தி ஆயிடறோம். அப்படி ஆகாமல், இந்த கொஞ்சம் கொஞ்சம் பண்ற பகவத் பஜனத்துல கிடைக்கக்கூடிய அந்த ருசியை புரிஞ்சிண்டு, இது அம்ருதம், இந்த அம்ருதமான வாழ்வு தான் வேணும் அப்படீன்னு வேண்டணும்.
நான் இருக்கற நிலைமை எனக்கு துக்கத்தை கொடுக்கறது, இதுலேர்ந்து நான் மீளனும், அப்படீன்னு நினைச்சா தான் மீள முடியும். வ்யாதி என்னன்னு diagnose பண்ணின பிறகு தான் மருந்து கொடுக்க முடியும். அந்த மாதிரி நம்முடைய கஷ்டத்துக்கு காரணமான பந்தங்கள்-எல்லாம் விடணும் அப்படீன்னு நாம வேண்டணும். ‘இதெல்லாம் ok. இது இப்படித்தான் இருக்கும்’ அப்படீன்னு நினைக்கக் கூடாது. எதோ ஒரு வேலையில பளு ஜாஸ்த்தியா இருக்கு, ஒரு இடத்துல இருக்கறது கஷ்டமா இருக்கு, இல்லை ஒரு relationship சரியா இல்லன்னா, நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும். ‘இந்த மாதிரி பந்தத்துல என்னை வைக்காதே, நான் மோக்ஷம் அடைஞ்சு சந்தோஷமா இருக்கணும், உன்னுடைய பக்தியை பண்ணனும்’ அப்படீன்னு நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும்.
அப்படி பயப்பட வேண்டாம். உன்னுடைய எல்லா நலன்களையும் பகவான் பார்த்துப்பார் ன்னு அருணகிரிநாதர் சொல்றார்.
 ‘மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ ன்னு பாடறார். உனக்கு பணம் வேணுமா. கிடைக்கும், இந்திர பதவி வேணுமா. கிடைக்கும், நீ நல்ல தமிழ் பாடல்கள் பாடணும்னு ஆசைப்படறியா, உனக்கு கிடைக்கும், எமனை விரட்டி விடணும்னு ஆசை படறியா, உன்னால முடியும் அப்படி சொல்லிட்டு,
இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தையினையினி விடும்பெருத்த பாருளீர்’ –
 நீங்க ஏதோ ஒரு வித்தை வெச்சிண்டு இருக்கேள். இதனால, நான் நாலு காசு சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கபோறேன் ன்னு நினைக்கறேளே, அதை விட்டுடுங்கோ ‘மயிலையும் அவன்திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ பகவானோட பஜனத்தை பண்ணுங்கோ, அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி, ஆச்சார்யாள் சொல்லி கொடுக்கறார் நமக்கு.
அருணகிரி நமக்காக இந்த மாதிரி நிறைய வேண்டிண்டு இருக்கார். 
ஒரு பழனி பாட்டுல…
“வசன மிகவேற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சர மதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே”
“ஏதோ பேச்சுகள் எல்லாம் பேசிப் பேசி உன்னை மறந்து, அதனால மனது துயர் ஆற்றில் உழன்றுண்டு இருக்கு. அதை விட்டுட்டு, ‘இசை பயில் சடாக்ஷரம் அதாலே’ உன்னுடைய சடாக்ஷரத்த இசையோடு கூடி இடையறாம ஜபிச்சு, அதனால ‘இகபர செளபாக்யம் அருள்வாயே’.. எனக்கு இகபர செளபாக்யத்தைக் கொடு… பழநிமலை வீற்று அருளும் வேலா.. அப்படின்னு பாடுறார்.
இதே மாதிரி எனக்கு கவலையினால என் மனமும், உடலும் தளர்ந்து மெலிந்து போகிறதுக்கு முன்னாடி உன்னுடைய தரிசனம் கிடைக்கணும்.
பகர்தற்கரிதான செந்தமிழ் இசையிற் சில பாடலன்பொடு
பயிலப் பல காவியங்களை ……யுணராதே
பவளத்தினை வீழியின் கனியதனைப் பொருவாய் மடந்தையர்
பசலைத் தனமே பெறும்படி …… விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசையிப்படியே திரிந்துழல்
சருகொத்துளமே அயர்ந்துடல் …… மெலியாமுன்
தகதித் திமிதா கிணங்கிண எனவுற்றெழு தோகையம்பரி
தனில் அற்புதமாக வந்தருள் …… புரிவாயே


சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   

                    நீயே அடைக்கலம்

   அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
      அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
         மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
            மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே.
       ...... 24

   ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு செந்தூரிலமர்ந்திருக்கும், தேவர்களுக்கெல்லாம் மணியாய் விளங்குபவனே! அடியேனோ எப்பொழுதும் துன்பப்படுபவன். நீயோ ஏழைபங்கன். உன்னைத் தவிர எனக்குத் துணையாக வேறு யாரையும் அறியேன். சிறியேனாகிய என்னை அணுகும் துன்பங்கள் யாவும் பொடிப் பொடியாக அருளுவாயாக.


சுப்பிரமணிய புஜங்கம் இசை வடிவில் 

சிறார்களின் குரலில் 


                                        முருகா சரணம் 





No comments:

Post a Comment