Sunday 6 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 2



                                                              சுப்ரமண்ய புஜங்கம்   2

                                                                                                   

                                                                                           


ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||

அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

‘ந ஜானாமி சப்தம்’ 
எனக்கு ஒரு பதத்தைக் கூட சரியான பொருள் தெரிஞ்சு பேச தெரியாது

 ‘ந ஜானாமி சார்த்தம்’
இது இன்ன அர்த்தம்-ன்னு தெரியாது. 

‘ந ஜானாமி பத்யம்’ 
எனக்கு ஒரு கவிதை எழுதறதுக்கும் தெரியாது.

ந ஜானாமி கத்யம்
எனக்கு உரைநடையான கட்டுரையும் எழுத தெரியாது...

ஆனால் என்னுடைய மனசுல, 

‘மே ஹ்ருதி’
என்னுடைய ஹ்ருதயத்தில், 

‘சிதேகா ஷடாஸ்யா’ 
ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு ‘சித்’, ஒரு ஒளி, 

‘த்யோததே’
பிரகாசிக்கறது. ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற 
ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. 

(அதனால) ‘முகாத்’ 
என்னுடைய முகத்தில்  இருந்து, என்னுடைய வாக்கில் இருந்து

‘கிரஸ்சாபி சித்ரம்’ 
ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம்

‘நிஸ்ஸரந்தே’ 
வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது”, அப்படீன்னு சொல்றார்..

"எனக்கு எழுத்து தெரியாது , வார்த்தைகள் தெரியாது, பொருள் உணர்ந்து எழுத தெரியாது, கவிதை எழுத தெரியாது, கட்டுரை எழுத தெரியாது "


சொல்பவர் யார்...?

ஆதி சங்கரர் 

"ஷண் மதங்களை ஸ்தாபனம் செய்து அது இன்று வரை தொடர்ந்து  நடைபெற செய்தவர்..சௌந்தர்யலஹரி, சிவானந்த லஹரி, கணேசபஞ்ச ரத்னம், ரங்கநாதாஷ்டகம், உபநிஷத்துக்கு பாஷ்யம் எழுதியவர்., ஆத்ம போதம், விவேக சூடாமணி போன்ற வேதாந்த நூல்களை எழுதியவர்..தமது 32 வயதிற்குள்ளாகவேபாரத தேசம் முழுதும் பாத யாத்திரை சென்று அத்வைதத்தை போதித்தவர். " 

நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஆனால்  அவரே 

"என்னுடைய ஹ்ருதயத்தில்,ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு ‘சித்’, ஒரு ஒளி, ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற 
ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. என்னுடைய வாக்கில் இருந்து, முகத்தில் இருந்து, அதனால் என்னுடைய வாக்கில்  ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம்
வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது” என்றும் பகிர்கிறார்.

அது தான் நம் முருகப் பெருமானின் பேரருள். மாபெரும் தத்துவம்.நம்மை ஆட்டுவிப்பது இறைவன் தான் .அவனை சரணடைவதைத் தவிர வேறு மார்கமில்லை.

அருணகிரிநாதர் கூறுகிறார் 

ஏடு எழுதா முழு ஏழையை, மோழையை என்கிறார்
ஏது புத்தி ஐயா என்கிறார்.
படிக்கின்றிலை பழநி திருநாமம் என்கிறார்..

"திடமிலி " என்று தொடங்கும் மற்றொரு பாடலில் 

 "உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான்,நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான்,தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான்,
வியக்கத் தக்க  அரும் செயலைச்செய்யாதவன் யான்,மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன்யான்,நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான்,சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதிஇல்லாதவன் யான்,கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன்யான்,நற்றமிழில்    நல்லதமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன்
இத்கைய குறைபாடுகள் உள்ள அடியேன் உனது இரண்டு திருவடிகளையும் அடைந்துநல் வினை , தீவினை ஆகிய இருவினைகளும்தீர்ந்து. உயர்ந்த முக்தி நிலையைப் பெற்றுஉய்ய வேண்டும்."

என்று வேண்டுகிறார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஓளவையார் ஓர் ஒப்புமை கூறி கல்லாத அளவை அளவிட்டு கூறுகிறார்...

நம் குருஜி  "திருப்புகழ் பாடல்களை இசையுடன் அமைத்துக் கொடுத்தது ,அன்பர்திருக் கூட்டத்தைஅமைத்துக்கொடுத்ததுஎல்லாம்  செந்திலாண்டவன்தான்.தான் இல்லை" என்று கூறுவார்.

வழிபாடுகளில்நாம்  இசைக்கும் போது  அதை முற்றிலும் உணர்ந்து அவர் வழி நடந்து வருகிறோம்.

புஜங்கம்  அனுராதா கிருஷ்ணமூர்த்தியின்  குரலில் 



                               முருகா சரணம் 

No comments:

Post a Comment