Friday 11 May 2018

ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதினேழாவது ஸ்லோகம்,


                                                                                   ஸுப்ரமண்ய புஜங்கம் .....17
                                                                                             


स्फुरद्रत्नकेयूरहाराभिराम-
श्चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।
कटौ पीतवासाः करे चारुशक्तिः
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः ॥ १७॥
ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:
ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக: |
கடெள பீதவாஸா கரே சாருசக்தி:
புரஸ்தான் மமா ஸ்தாம் புராரேஸ் தனூஜ: ||

முருகப் பெருமானை ஆசார்யாள் இந்த ஸ்லோகத்துலேயும் , அதற்கடுத்த ஸ்லோகத்துலேயும்மூணாவதுஸ்லோகத்துலேயும் பரமேஸ்வரனுடனும், பார்வதியோடும் ஸ்மரிக்கறார். இதுல ‘புராரேஸ் தனூஜ’-ன்னு சொல்றார். கையில பராசக்தி கொடுத்த வேலோட எனக்கு தர்சனம் கொடுன்னு சொல்றார்
ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:
ஹாரம்னா அவருடைய கழுத்துல போட்டுண்டிருக்கிற மாலை,  ரத்னத்துனால பண்ணின மாலைகளும் கேயூரங்களும் ப்ரகாசிக்கறது. அந்த மாலைகள் எல்லாம் போட்டுண்டு, அவருடைய தோள்களும், மார்புகளும் ரொம்ப அழகா இருக்கு. ஆபரண விசேஷங்கள்லாம் சொல்றார்

ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக: |

கண்டபாகம் ன்னா கன்னம் ன்னு அர்த்தம். காதுல போட்டுண்டிருக்க கூடிய அசையும் குண்டலிங்களின் ஒளி, அவருடைய கன்னத்துல பட்டு reflect ஆறது. கன்னம் ஒரு கண்ணாடி மாதிரி இருக்காம். அதுல பட்டு ப்ரகாசிக்கறது-ன்னு சொல்றார்.

 ‘கடௌ பீதவாஸா’


கடின்னா இடுப்பு. ‘பீதவாஸா’ பீதாம்பரம் பீதம்-ங்கற வார்த்தைக்கு மஞ்சள் வர்ணம்-னு அர்த்தம். மஞ்சள் பட்டு உடுத்திண்டு இருக்கார்.

கரே சாருசக்தி’ கைகளில் அழகான சக்தின்னா வேல் ன்னு அர்த்தம். பராசக்தி கொடுத்த அந்த வேலாயுதம். 


அந்த ஆயுதத்தையும் வச்சுண்டு 


‘புராரேஸ் தனூஜ’ 

பரமேஸ்வரனுடைய புத்ரனான குமாரஸ்வாமி

 ‘மம புரஸ்தாத்’ ஆஸ்தாம்’


என் முன்னால் எழுந்தருளட்டும்.


‘புரஸ்தான்’ என் முன்னால் ‘புராரேஸ்தனூஜ:’ புராரி ன்னா முப்புரங்களை எரித்த சிவபெருமானுடைய ‘ தனூஜ:’ன்னா பிள்ளை, அந்த முருகப் பெருமான் என் முன்னால் எழுந்தருளட்டும். எனவேண்டுகிறார்.


அருணகிரிநாதர் முருகனை நேருக்கு நேர் சந்தித்ததை அநேக பாடல்களில்  விளக்கி கூற முற்படுகிறார்.
காரணம தாக வந்து …… புவிமீதே
காலனணு காதி சைந்து …… கதிகாண
நாரணனும் வேதன் முன்பு …… தெரியாத
ஞானநட மேபு ரிந்து …… வருவாயே

‘இருநில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு …… புரிவாயே

மதிதனை யிலாத எனத் தொடங்கும் திருப்புகழில் 

உனது ரூப தானம் அருள்வாயே என்கிறார்.


சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்து அழிய மெய்ச் சிந்தை வர என்று நின் தரிசனை பெறுவோனோ என்கிறார்

குலவு தோகை மீது ஆறுமுகமும் , வேலும், ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே..

வனமின் குஞ்சரி மாருடன் என்றன் முன் வருவாயே..

சுப்பிரமணிய புஜங்கத்தின் 10 ஸ்லோகங்களை சிறார்களின் இசையில் கேட்டு இன்புறுவோம்.

https://www.youtube.com/watch?v=IWi2AK33l_8&list=RDIWi2AK33l_8&t=57


                                             முருகா சரணம் 

No comments:

Post a Comment