Friday 10 November 2017


    பிரம்மஸ்ரீ .அ.சு.சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா

                                                   நிறைவு பகுதி ...1
                                                                                               
                                 




வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


(இவ்வுலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், மேலுலகத்திலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான்.)

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க ,வையகத்தில் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டியதோடு மட்டுமல்லாமல் ,நம் மையும்  அப்படியே  வாழ, வழி காட்டியாக நம்மிடையே வாழ்ந்து  முருகபக்தி யோடு அன்பு அவிரோதம் தொண்டு பாசம் முதலியவற்றை ஊட்டி நம் இதயத்தில் என்றும் தெய்வமாக உறையும் சுப்பிரமணிய அய்யரின் நூற்றாண்டு விழா திட்டமிட்டபடி நவம்பர் 5ம்  நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நமக்கு அய்யரும் ,குருஜியும் இரண்டு பேர் அல்ல.இருவரும் ஒருவர்தான்.அந்த வகையில் இருவரையும் நினைவு கூறும் வகையில் விழா அமைந்தது என்பதில் ஐயமில்லை.


அந்த வைபவத்துக்கு அவரது குடும்பத்தினர் முழுவதும்  சிறியோர் முதல் முதியவர் வரை 
கலந்து கொண்டதில் ஆச்சர்யமில்லை.

மறுபடியு ம்  கீழ்க்கண்ட திருக்குறள் பாடல்கள்  நினைவுக்கு வருகின்றன.
1.தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.
         விளக்கம்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
         2.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,
        ‘இவன் தந்தைஎன் நோற்றான் கொல்’ எனும் சொல்.
விளக்கம் 
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி, ’இந்த மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று உலகம் சொல்லுமாறு செய்வித்தல்.

இந்த இரண்டு குறள்களும் அய்யரின் குடும்பத்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். 

 இந்த வைபவத்துக்கு காத்திருந்த மும்பை மற்றும் 
,புனே அன்பர்கள் காலை 7.30 அளவில் அரங்குக்கு குவியத்தொடங்கினர்.

"வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள்" என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் குறிப்பிட்டுள்ள நோய்கள்,உடல் ,மன வேதனைகள் சன்னிதானத்தில் நுழையு  முன்பே கழன்று கொண்டன.உற்சாகத்துடன் அன்பர்கள் வதனங்களில்  தவழ்ந்த பிரகாசம்  அரங்கத்தின் பிரகாசத்தை மேலும் மெருகூட்டின.


சன்னிதானத்தில் விநாயகர்,முருகப்பெருமான்,அருணகிரியார் .மாதுங்கா தாத்தா,குருஜியின் திரு உருவங்களுடன் அய்யர் குடும்பத்தில்  250 ஆண்டுகளாக பூஜிக்கப் படும்  தம்புராவும் இடம் பெற்றிருந்தது அன்பர்களை பரவசப்படுத்தியது.


விழா அமைப்பாளர் அன்பர் ரமேஷ் கூடியுள்ள அன்பர்களை வரவேற்றார்.ஐயர் அவர்களை சிவபெருமானுக்கு மனதிலேயே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி சிவத்தொண்டு புரிந்து தன வாழ்க்கையையே அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனாரை ஒப்பிட்டு  புகழாரம் சூட்டினார்.


 ஐயரைப்பற்றி நினைவுகளை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள  குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.


முதலாவதாக அய்யரின் மருகனும்,மும்பை வட்டாரத்தின் தலைவரும்,நல்லாசிரியருமான குரு பாலசுப்ரமணியம் சார் நினைவு கூர்ந்தார். அவர் உரையின் சுருக்கம்.


."ஆண்டவன் அமைத்துக் கொடுத்ததுள்ள இந்த நூற்றாண்டு விழா அன்பர்களுடையதுதான்."


பூஜையில் வைக்கப்பட்டுள்ள  தம்புரா 250 ஆண்டுகளாக அய்யரின் குடும்பத்தில் உள்ளது.அந்த தம்புரா ஸ்ருதியில்தான்  அவரின் பாட்டனார் சுப்பிரமணிய ஐயர்  இசையுடன்  ராமாயணம்  போன்ற இதிகாச புராணங்களை சங்கீத  உபன்யாசம் செய்தவர்.பின் அவரது புத்திரர் சுப்பையர் (அய்யரின் தந்தை )தொடர்ந்து திருப்புகழ்,முருக வழிபாட்டு பாடல்களுடன்  இசைத்தொண்டில் ஈடுபட்டார்.

அவருடைய வாரிசுகள்தான் அய்யர்,குருஜி, தங்கை பாகிரதி அம்மாள்.அய்யர் 1940ல் மும்பைக்கு குடியேறினார்.பின் வந்த குருஜிக்கு முறைப்படி சங்கீதம் பயிற்றுவித்து நாளடைவில் தியாகராஜ சபா ஆரம்பித்து அதன் செயலாளராகவும் ஆக்கினார்.


அய்யர் கடைபிடித்த அன்பு,அவிரோதம், தொண்டு முதலிய கொள்கை பிடிப்புகள்   ஈடு இணை யற்றது.முதல் இரண்டும் சுலபம்.ஆனால் தொண்டு செய்வது என்பது மிகவும் கடினமானது."என்றென்றும் தொண்டு செய்ய அருள்வாயே " என்ற அருண கிரியின் வாக்கின்படி,திருப்புகழ் தொண்டு மட்டுமல்லாமல் ,அன்பர்களின் இல்லத்து கல்யாணம் போன்ற மங்கல காரியங்களுக்கும் பொறுப்பேற்று,முன்னின்று தொண்டாற்றியவர்.


அவருக்கு கோபம் என்பதே வராது.எப்பொழுதும் சாந்தம் தான்.ஆண்டவன் துணையுடன் எந்த செயலிலும் முழு மனதுடன் ஈடுபட்ட அந்த மஹான் எனக்கு மாமனார் மட்டும் தான்.அன்பர்களுக்கு .....மாமா...தாத்தா ..எல்லாம்.."


ராஜி மாமி உணர்ச்சி பெருக்கால்  மௌனமாகி ,சகோதரி கமலு மாமியை  உரையாற்ற பணித்தார்.


அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
தந்தையிடம் நேரடியாக பேசும் விதத்தில் அமைந்தது.

தமிழில் சுருக்கமாக

"நான் இங்கு சொல்லப்போவதெல்லாம் எங்கள் மொத்த குடும்பத்தின் நினைவலைகளின்  வெளிப்பாடுதான்.

பாச மிகு தந்தையே ,

தங்களின்  100வது ஆண்டு நினைவு விழா எங்களுக்கும் ,  அன்பு பாசம் பக்திமரியாதை வணக்கங்களை செலுத்த இங்கு குழுமியுள்ள  அன்பர்களுக்கும்  இந்தநாள் சிறப்புமிக்க  பொன்னாள் ஆகும்.

நீங்கள் எங்கள் சிந்தனையிலும்,செயலிலும் என்றும் கூட இருந்து வழி நடத்துகிறீர்கள் .குழந்தைகளான எங்களுக்கும் ,பேரன்,பேத்திகளுக்கும் நல்  ஒழுக்கத்தையும்,உயர்ந்த குணங்களையும்,நற்பண்புகளையும் ஊட்டி எங்களை இன்றளவும் உன்னதமான நிலைக்கு உயர்த்தியுள்ளீர்கள்.நாங்கள் என்றென்றும் நண்றிக்  கடன் பட்டுள்ளோம்.

 இன்று  உயர்ந்த நிலையில் உலவும் தியாகராஜ சபா ,நாதலோலா,குறிப்பாக திருப்புகழ் அன்பர்கள் அமைப்பு  தங்களின் தன்னலமற்ற  சேவையினாலும் கடும் உழைப்பினாலும் தான்   உறு வானவைஎன்பதைஅன்பர்கள்இதயபூர்வமாகஉணர்ந்தவர்கள்   அவர் களின்  அன்பையும் நன்றியையும் காணிக்காயாக சமர்ப்பிக்க இங்கு குழுமியுள்ளார்கள்..

 உயிருக்கு உயிரான  தங்களின்   இளைய சகோதரர்  பற்றி  எங்களிடம் அடிக்கடி விவரித்ததைப்பற்றி நாங்கள் நினைவு கூறுகிறோம்.தங்களைவிட 12 வயது குறைவான அவரை மிகவு ம் நேசித்ததீர்கள்,வளர்ச்சியில் மிக்க கவனம் செலுத்தினீர்கள்.மும்பைக்கு அழைத்து,கர்நாடக சங்கீதம் பயில,வல்லுநர் ஆக்க  உறு  துணையாக இருந்தீர்கள். " திருப்புகழ் அன்பர்கள் " அமைப்பு இன்று இந்த நிலையில் உயந்து நிற்க அந்த கர்நாடக சங்கீதம் தான் உறு  துணையாக இருந்தது .அன்பர்களால்  குருஜியாக வணங்கப்படுகிறார். .முருகப்பெருமானின் பேரருள்  அன்றி வேறு  ஒன்றும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் ,உங்களுக்கு எப்போதும் தங்கள் பணிக்கும் தொண்டுக்கும்உறு  துணையாக இருந்து,பின் எங்களையும் ஊக்குவித்து இயக்கத்தை மேன்  மேலும்  பேணி வளர்த்த மாதுங்கா  மாமி என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட எங்கள் அன்னையை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.

தங்களின் நற்பெயரையும்,கீர்த்தியையும் எங்களுக்கு போதித்த மேற்கூறிய நற்பண்புகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து நம் இயக்கத்தை மேலும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல  அன்பர்களோடு என்றென்றும் பாடுபடுவோம் .

புதல்வர் மணி சாரின் நினைவலைகள்


அந்த காலத்தில் தொலைபேசி வசதியும் மற்ற சௌகரியங்களும் எதுவும் கிடையாது.மாதுங்கா பஜன் சமாஜ் வாசலில் தான் தொண்டர்கள் கூடுவார்கள்.தந்தை வழிபாடு நேரத்துக்கு இரண்டு மணிநேரம் முன்னதாகவே வந்து ஏற்பாடு களை  செய்வார்.வழிபாடு முடியும் வரை டென்ஷன் தான்.அன்பர்களை ஊக்குவித்து தொண்டில் ஈடுபட வைத்தார்.அமைப்பின் வெள்ளிவிழா வுக்காக மிகவும் பாடுபட்டார் சதாபிஷேகத்தை வீட்டிலேயே மிக எளிய முறையில் தான் நடத்தினார்.


இளைய மருகன் ராமஸ்வாமி அய்யர்


"தியாகராஜ சபா தொடங்கி குருஜியை இசையிலும் முருக  பக்தியிலும் தீவிரமாக ஈடுபடுத்தி னார் .குரு பாலு சார் ,ராஜி மாமி தங்கள் இசை திறமையினால் மேலும் மெருகூட்டினார்கள்  . முருகன் நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் முன்னின்று காப்பாற்றுவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செயல்பட்டார்.அதனால் தான் திருப்புகழை இந்த அளவில் பரப்ப முடிந்தது."


அய்யர்அவர்களோடு தொண்டாற்றியமற்றஅன்பர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்  அடங்கிய  குறும் படத்தொகுப்பு திரையிடப்பட்டது.



நிகழ்ச்சிகளின் அடுத்த பகுதி தொடரும் 


சில  புகைப்படங்களின் தொகுப்பு.

                                                                                                                                       




                                                           



















                               


                                                                                    
                                                                                   



                      




                                                முருகாசரணம் 












                                                                                                                                                               

                                                                               

                                                                                                 



































































No comments:

Post a Comment