Sunday 26 November 2017

சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம்


                                                         சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம் 

                                         முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய  வர்ணனை 
                                                                                                     


புளிந்தேச கன்யா கநாபோக துங்க

ஸ்தனாலிங்கநாஸக்த காச்மீர ராகம் |

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ||

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

 முருகப் பெருமானுடைய மார்பு செக்கச் செவேல்னு இருக்காம். பரந்து விரிந்த அந்த மார்புகள், சிகப்பா இருக்கு. அதுக்கு ஆசார்யாள் ரெண்டு காரணங்கள் சொல்றார். 

‘ஹே தாரகாரே’’ தாரகாசுரனுக்கு சத்ருவான ஸுப்ரமண்யப் பெருமானே!

 ‘புளிந்தேச கன்யா கநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீர ராகம்’ 

புளிந்தன் என்ற வேடனுடைய பெண்ணான வள்ளியம்மையினுடைய கடினமான பெரிய ஸ்தனங்களை ஆலிங்கனம் செய்து கொள்ளும் பொழுது, அந்த ஸ்தனத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ள குங்குமம் உன்னுடைய மார்பிலும் வந்துட்டதனால சிகப்பா இருக்கு, அப்படின்னு ஒரு காரணம்.

இன்னொரு காரணம், ‘ஸர்வதா ஸ்வபக்தாவனே’, 

எப்பொழுதும் உன்னுடைய பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று உன் மனசுக்குள்ள எப்பவும் 

‘ஸானுராகம்’, 

அந்த அனுராகம், அந்த ஆசை இருந்துண்டே இருக்கிறதனால, ‘ராகம்’ ங்கிற ஸமஸ்கிருத வார்த்தைக்கு சிகப்புனு ஒரு அர்த்தம். உள்ளிருக்கக் கூடிய அந்த கருணை வெளில சிகப்பா தெரியறது.

 ‘தவ உர:’, உன்னுடைய மார்பு செக்கச் செவேல்னு ஆயிடுத்து. கருணையினால சிவந்திடுத்து உன்னுடைய மார்பு. 

அதை ‘அஹம் நமஸ்யாமி’, நான் நமஸ்கரிக்கிறேன்.

ஹ்ருதயம் எங்கு உள்ளது?
நெஞ்சம் எங்கு உள்ளது?
மார்பு எங்கு உள்ளது?  இதயம் எங்கு உள்ளது?
உள்ளம் எங்கு உள்ளது? அனைத்துமே ஒன்றா? 
இரத்தத்தை சுதப்படுத்தி உடல் முழுவதும் அனுப்பும் ரத்தத்தாலும் சதையாலும் ஆன உறுப்புதான் இதயமா?   இதயக்குகை என்கிறார்களே அது எங்கு உள்ளது..

சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில் "மே ஹ்ருதி " என்னுடைய ஹருதயத்தில் என்கிறார்.

கவிதை வடிவில் பார்ப்போம் 

 திருமார்பின் சிறப்பு

வேடவேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.


(பலன்        ஆபத்து விலகும்)
  

குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்.
       

 (குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ? அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.)


துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்க
ள் 
.
அநுராகம் .....காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. 

சேத்தல் - சிவத்தல்.

 (நன்றி....   கௌமாரம் இணைய தளம்)

அருணகிரிநாதர்  அனுபவித்து நமக்கு அளித்தது 

 நெஞ்சக் கன கல்லு என கந்தரநுபூதியை ஆரம்பிக்கிறார்.

இதயம் தனிலிருந்து க்ருபையாகி என்கிறார்.

உள்ளக்கண் நோக்க அருள்வாயே என்கிறார்...

நான் என்று மார் தட்டும் பெருமாளே..

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குற மடந்தை செங்கை வந்தழகுடன் கலந்த மணி மார்பா என்கிறார்...

 செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி …… புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம

இந்த்ர   கோபமு மரகத வடிவமு மிந்த்ர
 சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே
என்கிறார். 

முருகா சரணம் 




No comments:

Post a Comment