Friday 17 November 2017

அபிராமி அந்தாதி-24


                                                 அபிராமி அந்தாதி-24
                                                                                                     

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே!
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, 

குழைந்தையை ஒரு தாய், 'என் கண்மணியே' என்று அழைப்பாள். அப்படி அழைத்து பேசுகிறார் பட்டர். 'மணியே' என்று தொடங்குகிறார்.
என் கண் மணி நீ. அந்த மணியின் ஒளியும் நீ என்று சொல்கிறார். அப்படிச் சொன்னவருக்கு, மணி மாலைகள் நினைவுக்கு வந்தன. என் கண் மணி மட்டும் அல்ல, நல்ல மாணிக்கமும் நீ, அந்த மாணிக்க மணிகளால் விளைந்த ஒளியும் நீ, அந்த ஒளிரும் மாலையால் ஆன அழகிய அணி புனைந்தவளும் நீ அல்லவா என்று வியக்கிறார்.
அணியும் அணிக்கு அழகே -

 அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!
அப்படி வியந்தவருக்கு ஒன்று தோன்றியது : இந்த மணி மாலையாலா அபிராமிக்கு அழகு? இல்லை இல்லை. எம் அம்மை அபிராமியால்தான் இந்த மணிமாலைக்கே அழகு என்று முடிவு செய்கிறார். அத்னால்தான் 'அணியும் அணிக்கு அழகே' என்று சொல்லுகிறார்.

அணுகாதவர்க்குப் பிணியே -

நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே என்று ஓர் அபாண்டத்தை அன்னை மீது தாங்கள் சாற்றுவது எப்படிப் பொருந்தும்? என்று சரபோஜி மன்னர் கேக்கறார் பட்டரிடம்.
அந்த அன்னை தன்னை நாடினாலும், நாடாவிட்டாலும் எல்லோருக்கும் அருள் புரிபவள் அல்லவா?” என்று சந்தேகம் கேட்டார்.
பட்டர் சொல்றார்,
சூரியன் அஷ்ட திக்குகளிலும் தன் கதிரொளியை வீசிப் பரப்புகிறான். ஆனால் பூமியோ ஒரு பக்கம் வெளிச்சத்தை வாங்கி மறுபக்கம் இருளாகிப் போகும் படியல்லவா திரும்பிக் கொள்கிறது. சூரியனை நோக்கித் திரும்பும் பகுதி பகலாகவும், சூரியனுக்கு எதிராக விலகிக்கொண்ட பகுதி இருளாகவும் ஆகிவிடுகிறதே? அது சூரியனின் குற்றமா? இல்லையே!அதுபோல் 

நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

 அதுபோலத்தான்,அம்பிகையைச் சரணடையும் ஆன்மாக்கள் பிறப்பு, இறப்பு சுழற்சிகளிலிருந்து விடுபடுவர்

பிணிக்கு மருந்தே 

எவரொருவர் உன்னைச் சரணடைகிறார்களோ அவர்களுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடியவளே!

அன்னையைப் பிரிந்தால் நாம் அடையும் பிணிகளுக்குக் காரணம் நாமா? அல்லது அவளா? அவள் கருணை மிக்கவள். நமக்கு அருள் புரியவேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவள். நாம் அவளைப் புரிந்து கொள்வதில்லை. தாயின் கரங்களிலிருந்து இறங்கிச் சென்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை எப்படி ஒரு தாய், வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பாளோ, அது போல கர்ம வினைகளால் நாம் அவளை விட்டு விலகி வந்து விட்டாலும், அவள் நம்மை மறப்பதில்லை..

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

                                                            பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                          
                                                      U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                              https://youtu.be/pEt3Kp28zOg

                                                                              அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                          
                                                       U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                              https://youtu.be/HeonpoXSNA

                                                                         அபிராமி சரணம் சரணம்!!

                                                                                  முருகா  சரணம் 

No comments:

Post a Comment