Friday 31 July 2015


               திருப்புகழ் அன்பர் அருளாளர் எஸ் .ராதாகிருஷ்ணன் மறைவு


அருளாளர் எஸ் .ராதாகிருஷ்ணன் கடந்த 26.7.2015 அன்று பெருமானின் பாதகமலங்களைசென்றடைந்தார்என்பதைமிக்கதுக்கத்துடனும்வேதனையுடனும் அன்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர் திருப்புகழ் அன்பர்களின் மும்பை கிளையின் தொடக்ககாலம் முதல் அதன் வளர்ச்சிக்கு முக்கியபங்குவகித்தவர்.திருப்புகழ்வகுப்புகளுக்குதன்  கடைசிகாலம்வரைதவறாமல்கலந்துகொண்டதுமட்டுமல்லாமல்,ஒவ்வொருபாடலுக்கும்பொருள்,விளக்கவுரை.மற்றசெய்திகளைபொறுமையாகவிளக்கியதுமற்றஅன்பர்களுக்குபெருமகிழ்ச்சியைஅளித்தது.அன்பர்கள் எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தது அன்பர்களிடையே பெருமதிப்பை ஈட்டு தந்தது.அமைப்பின் பொது நிகழ்சிகளிலும் பல தலைப்புகளில் உரை ஆற்றியிருக்கிறார்.கடந்த 2013ல் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் உரையாற்றவிருந்த அவர் உடல் நிலை குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை.

கவிதை புனைவதிலும் வல்லவரான அவர் புனே தேஹு ரோடு வழிபாடு சந்தர்ப்பத்தில் ,ஆலயத்தில்உறையும்பெருமான்மீதுநீண்டகவிதையையும் புனைந்துள்ளார்.

அன்பர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று நம் வழிபாடு முதலிய நிகழ்சிகளில்  கலந்துகொள்ள வாகன வசதிகள் ஏற்பாடு செய்து அன்பர்களின் சுமையை குறைத்தார்.மொத்தத்தில் ஒரு திருப்புகழ் தொண்டர்.

தமிழ்மட்டுமல்லாமல்,வடமொழியிலும்நன்குதேர்ச்சிபெற்றவர்.திருப்புகழ் மட்டுமல்லாமல் ராமாயணம்,மஹாபாரதம்,நாராயணீயம்,ஸ்ரீமத் பாகவதம் நிகழ்சிகளிலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.சிருங்கேரி சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்ட அவர் மடத்தின் வளர்சிக்கும்,மற்ற சேவைகளுக்கும் தன்பணியைகடைசிவரைசெவ்வனேநிறைவேற்றினார்.

மொத்தத்தில் பிறவி எடுத்ததின் பயனை உணர்ந்து ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து பெருமானிடம் சென்றடைந்தார் என்பதே உண்மை.

ஆசு கவி அபிராம பட்டரின் "மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே " வாக்கை நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கு கொள்வோம்.

முருகா சரணம் 

1 comment:

  1. திருப்புகழ் அன்பர் அருளாளர் எஸ் .ராதாகிருஷ்ணன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது! நெருங்கிப் பழகாவிடினும் அனைத்து திருப்புகழ் இசை வழிபாடுகளிலும் அவரைப் பார்க்கும் அவரது பணிகளை நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரின் மறைவைத் தாங்கும் வல்லமையை அவர் குடும்பத்தாருக்கு ஆண்டவன் அருள்வாராக! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆறுமுகப் பெருமானை வேண்டுகிறோம்!

    ReplyDelete