Saturday, 11 July 2015
திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                              (476 முதல் 503 வரை

                                கோடைநகர் திருத்தலம்  (வல்லக்கோட்டை)


வல்லக் கோட்டை ஆலயம்சென்னைநகரின்புறப்பகுதியான தாம்பரத்தில் 
இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீபெரம்பத்தூரின் தெற்குப்
பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டுகிலோதொலைவில்
ஸ்ரீபெரம்பத்தூர்- செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது.
1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோயிலின்மூலவர்(முருகன்)திருவுருவம்ஏழுஅடிஉயரம்உள்ளதுஇந்தியாவில் அமைந்துள்ளமுருகன்திருவுருவச்சிலைகளில்இதுவேஉயரமானதாகும். முருகனின் இரு புறங்களில் வள்ளிதெய்வானைஉள்ளனர். .
அருணகிரிநாதரின் ஏழு திருப்புகழ் பாடல்களில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.நம் குருஜி நான்கு பாடல்களை கையாண்டுள்ளார் 

வல்லன் கோட்டை பெயர்க்காரணம்

முன்பு வல்லன் எனும் அசுரனின் கோட்டையாக இருந்த இவ்வூரில் அசுரனின் கொடுமை கண்டு முறையிட்ட தேவர்கள் துயர் கண்டு, அந்த அசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அசுரனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது பெயரிலேயே வல்லக்கோட்டை எனத்திகழமுருகப்பெருமான்அருளியதால்வல்லன்கோட்டைஎன்றழைக்கப்பட்டது[மேலும் இக்கோயிலில் உள்ள புனிதகுளத்தை வஜ்ர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.                                                     வல்லக்கோட்டை ஆலயம் 
பாடல்  வரிசை எண்  15               புத்தக வரிசை எண்  225

ராகம் கரஹரப்ரியா           அங்க தாளம்         5 1/2     2 1/2           1 1/2    1 1/2
                                                                                                தக தகிட    தகிட   தகிட 

                                     பாடல் 


சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
     சாமளவ தாக வந்து ...... புவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

                                 சொல் விளக்கம் 


சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து ...

மிகவும் நீண்டநாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று,

சாம் அளவதாக வந்து புவிமீதே சாதகமுமான பின்பு ... 

சாகும்அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை
அடைந்த பின்னர்,

சீறியழுதேகி டந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி ...

வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி,

பாலனெனவே மொழிந்து ...

பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி,

பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீதணைந்து ... 

சர்க்கரைபோல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய
மார்பகங்களை அணைந்து,


பொருள்தேடிப் பார்மிசையிலேயுழன்று ... 

பொருள் தேடவேண்டிபூமியிலே திரிந்து அலைந்து,
பாழ்நரகெய்தாமல் ... 

பாழான நரகிலே போய்ச்சேராமல்

ஒன்று(ம்) பாதமலர் சேர அன்பு தருவாயே ... 

பொருந்திய உனதுபாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக.

ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர் ... 

விஷத்தை அமிர்தமாகஉண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர்,
திங்கள் ஆடரவு பூணர் தந்த முருகோனே ...

 சந்திரனையும்,படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்தமுருகனே,

ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற ... 

கஜேந்திரன்என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதிமூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த

ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே ... 

ஆதி முதல்வனானநாராயணனின் மருகனே,

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை ... 

அழகியமலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண்வள்ளியின்

கோவையமுது ஊற லுண்ட குமரேசா ... 

கொவ்வைக் கனி போன்றவாயின் அமுத ஊறலை உண்ட குமரனே,

கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த ... 

இரண்டு கூறாகப்பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க,கூர்மையான வேலைச் செலுத்தியவனே,

கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ...

 கோடைநகர்* தலத்தில்வாழவந்த பெருமாளே.

உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல


                                                 குருஜியின் குரலில் ஒரு விருத்தம்                   குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்

முருகா சரணம் 

1 comment:

  1. குருஜியின் குரலில் கலகலப்பான கரகரப்ரியா விருத்தமும் அன்பர்களுடன் இணைந்த பாடலும் காதுகளுக்கு விருந்து!

    ReplyDelete