Thursday 15 June 2017

அபிராமி அந்தாதி வரிசை ....பாடல் 5


                                                           அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்  5

                                                                                  

                                                                                                                                                                                      
                           

                                                                                                                                                           
                                                         பிராமி அந்தாதி - 5

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோண்மணி,வார்சடையோன்,
அருந்திய நஞ்சு, அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்,
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

அன்பரின் விளக்கவுரை 

எம் அன்னை, அனைத்து உயிர்களிடத்தும், முப்புரையால்,நிரம்பி இருக்கிறாள். செப்பாலான உரை அணிந்த அடர்ந்ததனங்களின் பாரத்தினால், வருந்தும் வஞ்சிக் கொடி போன்றஇடையை உடைய மனொன்மணியே ! நீண்ட சடையை உடையசிவபெருமானும் அன்றொருனாள் அருந்திய விஷத்தையும்அமுதமாக ஆக்கிய அம்பிகையே. தாமரை மலரின் மேல்வீற்றிருக்கும் சுந்தரியே. அந்தத் தாமரை மலரினும் மெல்லியநின் பாதங்களை என் தலை மேல் கொண்டேன் என்றுசொல்கிறார் பட்டர்.
முப்புரை என்றால் என்ன ? மூன்று தொழில்கள். படைத்தல்,காத்தல், அழித்தல். முத்தொழில் புரியும் தேவர்கள் எனபடைத்தலுக்கு பிரமனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும்,அழித்தலுக்கு சிவ பெருமானையும் குறிப்பிடுவது வழக்கம்.ஆனால், இங்கோ, முத்தொழிலும் புரிபவளாக அபிராமியையேகாட்டுகிறார் பட்டர் ! பொருந்திய முப்புரை என்று இரண்டேவார்த்தைகளில் அன்னை முத்தொழிலும் புரிவதைச் சொல்லிவிடுகிறார்.
“திரிபுரை” என்ற, அம்பாளின் நாமத்தை இங்கே “முப்புரை” என்று குறிப்பதாகவும் கொள்ளலாம்.
‘புரை’ என்பது ‘மூத்தவள்’ என்னும் பொருளிலும் வரும். அதனால், இங்கே “முத்தேவருக்கும் மூத்தவளான அம்பிகை” என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.
அப்படிப்பட்ட திரிபுரையான அம்பிகை, இங்கே ஒரு ‘செப்பிடு வித்தை’ செய்கிறாள்! என்ன வித்தை அது? ஞானமலைகளாய் இருக்கிற நகில்கள் இரண்டையும் மூடி மறைக்கும் வித்தையாம் அது! செப்பிடு வித்தை காட்டுபவர்கள் செப்பாலான பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து வித்தை காட்டுவார்கள். அதே போன்று, அன்னையும், தன் இரு நகில்களையும் மூடி வைத்திருக்கிறாளாம்! ‘செப்பு போன்று அழகிய” நகில்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!
"செப்பு உரைசெய்யும்" என்பது மிக அழகான பதப் ப்ரயோகம்!- குமிழ் போன்ற மாணிக்கச் செப்பினை அழகியரின் முலையழகிற்கு உவமையாகச் சொல்வது தமிழ் மொழியின் இலக்கிய வழக்கம்!.
‘செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்’ என்ற ஆண்டாள் பாசுரமும் நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே!!
அந்த நகில்களோ, அந்தக் காமேஸ்வரனுடன் ஒன்றி இருக்கின்றன. அதனால்தான் அவற்றைப் “புணர்முலை” என்று குறிப்பிட்டார்.
அந்த நகில்களின் பாரம் தாங்காமல் அன்னையின் இடுப்பு – மருங்குல் – வருந்துகிறதாம்!
இதே போன்று, அந்தத் தாயின் சௌந்தர்யத்தை வர்ணிக்கும் பாடல் ஒன்று, சௌந்தர்ய லஹரியிலே 80 வது பாட்டுல வருகிறது.
தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீ, நினைத்து ,நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற ஸ்தனங்கள் , அடிக்கடி வியர்த்து , பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன
சுமையினால்உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே என்று உன் இடுப்பை வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றாக சுற்றி
இருப்பது போல்தோன்றுகிறது
இப்படி, சௌந்தர்ய லஹரியின் பாடலையும், அந்த ஆதி சங்கரரின் வாக்கையும்கூட, இங்கே ப்ரதிபலிக்கிறார் அபிராமி பட்டர்!
“இப்படிப்பட்ட மனோன்மணி என்ன செய்தாள் தெரியுமா” என்று அழகான கதை ஒன்றைச் சொல்லுகிறார் அபிராமி பட்டர்!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. அதனைக் கண்டு அஞ்சி அனைவரும் ஓடியபோது, அந்தப் பரமேஸ்வரன், தானே முன்வந்து, அதனை அருந்திவிட்டான்! ஆனாலும், அந்த சிவனின் வயிற்றிக்குள் அண்டங்கள் அனைத்தும் இருக்கின்றன அல்லவா? அதனால், அம்பிகை, ஓடிவந்து சிவனாரின் கழுத்திலே கையை வைத்து, விஷம் அதற்குக் கீழே பரவாமல் தடுத்திவிட்டாள்! அப்படித் தடுத்ததன் மூலம், அண்டங்களைக் காத்தது மட்டுமின்றி, அந்த சிவனின் உயிரையும் காத்துவிட்டாள் என்று கூறுகிறார் பட்டர்!!
அவள், சிவபெருமான் அருந்திய நஞ்சு பரவாமல் மட்டும் செய்துவிடவில்லை; அவன் உயிரைக் காப்பதை மட்டும் செய்துவிடவில்லை – என்ன செய்தாள்? அவன் அருந்திய நஞ்சானது அமுதாக மாறிவிடும்படி செய்துவிட்டாள்! “அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை”!! நஞ்சை அருந்தியவன் இறவாமல் தடுத்தது மட்டுமல்ல; என்றுமே இறவாமல் இருக்கும்படியும் செய்து விட்டாள் அவள்!!
வார்சடையோன் என்று சிவபெருமானைக் குறிக்கிறார். நீண்டசடைமுடி உடையவன் என்று சிவபெருமானை இங்குமட்டுமல்ல - மற்றும் நிறைய பாடல்களிலும் குறிப்பிடுகிறார்.ஜடா முடி தாரியாகவே ஈசன் பற்றிப் பேசுகிறார்.

அப்படிப்பட்ட நீண்ட சடைமுடி கொண்ட ஈசன் அருந்தியநஞ்சினையும் அமுதாக்கி ஈசனையே வாழவைத்த சக்தி எம்அன்னை !

நீலகண்டன் என பெயர் பெற்ற அந்த ஈசன் அந்த ஆலகாலவிஷத்தை உண்டும் கூட ஒன்றும் ஆகாமல் இருந்தது அபிராமிஅன்னை அருள்கூர்ந்து அந்த விஷத்தையே அமுதமாகஆக்கியதால் அல்லவா !
இந்த விஷயத்தை சௌந்தர்ய லஹரி மிக அழகாகச் சொல்லுகிறது :

“அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்களஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்?இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன்சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரியலஹரியில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில்கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலிலக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக்கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதைஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப்போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக்கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடுபோட்டுக் கொள்கிற வழக்கம் வந்தபின்கூட, அதை வைர ஒலைஎன்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமானதாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால்பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும்.இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப்பாதிக்கவில்லை.
இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார்ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளைஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனிதாடங்க மஹிமா என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக்காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக,அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான ஸ்ரீருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாககோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம்இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவாவிச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்யபேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதி விரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படிசெய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்கஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.”
இப்படி ஆலகால விஷமே அன்னை அருளினால் அமுதமாகமாறும் என்றால், எந்த கொடிய வினைப்பயந்தாம் நம்மைஅழித்துவிட முடியும் ?அந்த அம்பிகை அனைத்துவினைகளையும் மாற்றி அருள்பவள் அல்லவா நம்வினைகளையும் கூட அவள் மாற்றி அருள் புரிவாள்.
'அம்புய மேல் திருந்திய சுந்தரி' என்று சொல்லுவதுரசிக்கத்தக்கது. அம்புயம் என்றால் தாமரை மலர். தாமரை மலர்மேல் இருப்பதோ சரஸ்வதியும் லஷ்மியும் தான். அலைமகளும் கலை மகளுமே தாமரை தாமரை மலர்மேல் அமர்ந்து அருள்புரிபவர்கள். மலைமகள் தாமரை மேல் வீற்றிருப்பது போல்நாம் பார்த்தது இல்லை. ஆனல் இங்கோ, அன்னைஅபிராமியை, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் தெய்வமாகசொல்லுகிறார் பட்டர்.
“பத்மாசனா” என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது!
‘அந்தரி’ என்ற பயன்பாடும் அழகான ஒன்று. அந்தரம் என்றால் ஆகாசம் என்று பொருள். ஆகாச ரூபிணியாக இருக்கிறாள் அவள். “தகாராகாச ரூபிணி” என்றும் “பராகாசா” என்றும் லலிதா சஹஸ்ரநாமம் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அம்மாவின் திருவடி என்மேல் படட்டும் என்று கூறுகிறார் பட்டர்.
முப்புரை என்று தொடங்கி முத்தொழில் புரிபவளாய்க் காட்டி,அந்த முத்தேவர்களுக்கும் மூத்த, அந்த முத்தொழில் புரியும்தேவியே முப்பெரும் தேவியருமாய் இருக்கிறாள் என்றுசொல்லாமல் சொல்லுகிறார் பட்டர்.
இப்படி, முத்தொழில் புரி தேவி, முப்பெரும் தேவியருமாய்விளங்கும் அந்த அபிராமி, நஞ்சினையும் அமுதாக்கி அருளியஅந்த அன்னை தனது பத்ம பாதங்களை நம் மீதும் வைத்து, நம்வினைகளையும் களைந்து, நம்மைக் காக்க



                                                                           குருஜி கற்பிக்கிறார் 

                                                                                                         


Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/qXg_i_F2xWI 


                                                                                          அன்பர்கள்


                                                                                                             

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/IFUb4zTb6jk 

                                                   முருகா சரணம் 




No comments:

Post a Comment