Monday, 20 June 2016

கண்ணீர் அஞ்சலி                                                                           கண்ணீர் அஞ்சலி

                                                                                                 நம் இதய தெய்வம் குருஜியின் தமையனாரும்,
திருப்புகழ் அன்பர்களின் மும்பை பகுதியின் நிறுவனருமான 
அமரர்  சுப்ரமணிய ஐயரின் துணைவியும்,மும்பை ராஜி மாமி,கமலுமாமி ,மணி சார் முதலியவர்களின் தாயாருமான ராம லக்ஷ்மி அம்மையார் நேற்று இரவு நம் முருகப்பெருமானின் பாத கமலங்களை சென்றடை ந்தார் என்பதை மிக்க துக்கத்துடன் அறிவிக்க வேண்டிய கடமையில் உள்ளோம்.அன்னார் 92 வயது வரை பெரு  வாழ்வு வாழ்ந்தார் 

அமரர் சுப்ரமணிய ஐயரின்  பெரு  முயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் உருவானதுதான்  நம் அமைப்பு என்பது நாம் அறிந்ததே . அவருக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்து செயலாற்றிய அம்மையாரின் தெய்வீக பணி அளவிட முடியாதது.

இவற்றையெல்லாம் விட நாம்  மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளை முழுமையாக அர்ப்பணித்ததுதான்.

 ராம லக்ஷ்மி அம்மையார் சமீப  காலம் வரை தன் தள்ளாத  வயதிலும் தவறாமல்  எல்லா  வழிபாடுகளிலும் கலந்துகொண்டது  அன்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி  அளித்து வந்தது. வழிபாடுகளுக்கு வரும் அன்பர்கள் அம்மையாரை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்ற பின்னரே அமருவார்கள். 

மாதுங்காவில்அவர் இல்லம்முருகப் பெருமானின்சன்னதியாகவே  உணரப்படுகிறது.அதுவே நம் மும்பை அமைப்பின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.

மாதுங்காவுக்கு வரும் அன்பர்கள் முதலில்அங்கு சென்று முருகனையும் அம்மையாரையும் வணங்கி விட்டுத்தான் மற்ற அலுவல்களில் கவனம் செலுத்துவார்கள்.

முருகப்பெருமானின் சன்னதியாக திகழும் அவரது இல்லத்தில் இன்றளவும் திருப்புகழ் வகுப்பு தொடந்து நடை பெற்று வருகிறது.

திருப்புகழ் அன்பர்கள் இயக்கத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நம் பெருமானின் பாத கமலங்களை சென்றடை ந்துள்ள அம்மையாருக்கு திருப்புகழ் அன்பர்கள் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயல்படுவதும்,தம் குடும்ப பரிவாரங்களை அதற்காக ஈடுபடுத்தி உன்னத நிலையை அடைவதுதான் அம்மையாருக்கு செலுத்தம் பொருத்தமான அஞ்சலியாகும் .

அவர் குடும்பத்தினரின் துயரத்தில்  நாமும் பங்கு கொள்வோம் 

அன்னாரின் நினைவாக ஒரு பழைய புகைப்படம் 

                                                                                                                 

                                                                                                        முருகா சரணம் 
                                                                                           

4 comments:

 1. From Dhaarini ganesh Pune
  Great she has passed away on aani moolam I can't forget her memory last time when I met her at Baby mamis sadhabhishekam after a long time may be 15 YRS She called and recognised and asked me
  YOU ARE THYAGARAJAN MAMAS DAUGHTER
  I was shocked to find her memory.May the soul attain peace

  From Aiyappan Chennai

  அன்பர்களே.
  இன்று நமது பரம குரு நாதர் அருணகிரியாரின் ஜெயந்தி. திருப்புகழ் அன்பர்களுக்கு உகந்த நாள். காலையில் மும்பை அன்பர் திரு கே ஆர்.பி அவர்களிடமிருந்து இன்று காலையில் ஓர் சேதி. மாட்டுங்கா மாமி நேற்று செந்திலாண்டவனின் திருவடிகளில் சேர்ந்து விட்டார்கள் என்று ( இவர்கள் நமது குருஜியின் பெரிய அண்ணாவின் துணைவியாராவார். ராஜி மாமியின் அம்மா ). மனம் மிகவும் வருந்தியது. அவர்கள் அத்தனை அன்புள்ளம் கொண்டவர்கள். தாய்மை பண்பு மிக்கவர்கள். அவர்களை அடியேனுக்கு 1978ல் இருந்து தெரியும். அன்னாரின் ஆத்மா இனி பிறவா வரம் பெற்று செந்திலாதிபதியின் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்து லயித்திருக்க திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

  From Ramnath Chennai

  Sorry to hear the news .. Our heartfelt condolences

  ReplyDelete
 2. Extremely sad news. A Great Loving Soul has left us. She has reached the Lotus feet of Muruga Perumal.She has left all her Blessings to all the Thiruppugazh Anbargals..

  ReplyDelete
 3. ஆறுமுகப் பெருமான், தனக்கு மிகவும் பிடித்த அன்பரை, 92 ஆண்டுகள் தன் பணியில் அயராது உழைத்த ராம லக்ஷ்மி அம்மையார் அவர்களை , ஆனி மூலத்தன்று தன்னருகில் வைத்துக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டான்! என்னே அவர்கள் பெற்ற பேறு! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அந்த அறுமுகவனையே இறைஞ்சுவோம்! ஓம் முருகா சரணம்!

  ReplyDelete
 4. From Nagesh Sir Banglore

  Our heartfelt condolences to the bereived family. She was ailing for quite some time.

  ReplyDelete