Friday 27 February 2015


                                               வேடிச்சி  காவலன் திரு வகுப்பு 

..". வரிந்து கட்டப்பட்ட வில் உடைய வேடுவர்கள் பூஜை போட்டு வழிபடும் தினை புனத்து பரணி மீதில் மயில் போன்ற கவர்ச்சியுடன் அழகுடன் அமர்ந்திருக்கும் (மான் தரு கான மயில்) ஒப்பற்ற வள்ளி நாச்சியாருக்கு பொழுது போக்குபவனாய் காவல் காத்த அந்த ஷண்முக தெய்வம்தான்."

என்று முடிக்கும் அருணகிரியார், பெருமானின் அவதாரம்முதல் 

... கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் ஒரு உருவமாக இருந்த காங்கேயனுக்கு பால் ஊட்ட நினைத்த போது அந்த மாதர்கள் ஒவ்வொருவருக்கும்  ஓரோர் புத்திரன் ஆனவன்

... மிகவும் இனிமை மிக்க எழுக்கூற்றிருக்கை, ஏகபாதம், மாலைமாற்று முதலிய சித்ர கவிகளை ஞானசம்பந்த அவதாரத்தில் பாடி அருளிய கவிராஜன் , தன்னுடைய பாட்டுக்கள் மூலம் எலும்பை பெண்ணாக்கியது, பாம்பு கடியால் மாண்டவனை மீட்டது, ஆண் பனையை பழம் ஈனச் செய்தது, மதுரையில் அனல் புனல் வாதம் செய்தது முதலிய அமானுஷ செயல்களை செய்ததை சித்ர கவி நிருபன் 

தமிழுக்கு தந்தையாகிய அகத்திய மாமுனியே வணங்கும் முத்தமிழ் விநோதனாகிய சகலகலா வல்லவன்

 நாராயணனுக்கும் நான்மறை பிரமனுக்கும் முதல்வரும் அவர்களால் அறிய முடியாதவராய் விளங்கிய சிவபெருமானுக்கு உயர்ந்த உணர அரிதான வேத முடிவை உணர்த்திய குருமூர்த்தி

 உள்ளத்தில் எமனுடைய சிரத்தை அறுக்கவல்ல பாக்ய வஸ்துவான நிஷ்சல இன்பம் நல்கும் மவுனம் எனும் வாளை கொடுத்து அருளிய மன்னன்"

என்று பலவாறு பெருமானை போற்றுகிறார்..

திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் உரையின் குறியீடு
http://www.kaumaram.com/vaguppu/vgp12.html

இறை பணியாக வெளியிட்டுள்ள 
 கௌமாரம்  இணைய தளத்துக்கு நன்றிகள்  பல  

குருஜியின் குரலில் பாடல் 



முருகா சரணம் 

No comments:

Post a Comment