Monday, 23 February 2015

சிறுவாபுரியில் திருமணக்கோலம் கொண்டுள்ள பெருமான்                                                   திருசெந்தூர்  வள்ளிகல்யாணம்

                                 சிறுவாபுரியில்  திருமணக்கோலம் கொண்டுள்ள                                                                                                பெருமான் 

பொதுவாக முருகப்பெருமானை வேல்முருகனாகவோ அல்லது வள்ளி தேவ சேனா சமேதமாக  த்தான் தரிசித்திருக்கிறோம் .ஆனால் வள்ளி மணவாட்டி சிறுவாபுரி தலத்தில்முருகப்பெருமானின் கைத்தலம் பற்றும் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருமணத்தின் போது பெண்களுக்கே உரித்தாக இருக்கும் அச்சம்மடம்நாணம்,பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.


                    தலத்தின் சிறப்புகள்

லவகுசா சிறுவர்கள் தன தந்தை இராமருடன் போர் புரிந்த இடம் 


      "சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்
      சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி"

"சிறுவர் போர்புரி" என்ற பெயர் காலப்போக்கில் மருவி சிறுவாபுரி                   என்று நிலைபெற்றுள்ளது

மரகத மயில் கண்கொள்ளகாட்சி.

புது இல்லம் கட்ட தொடங்குபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பின்               செயல் படுவது முக்கியமான நிகழ்ச்சி

இந்த வாரம் ஜெயா டி.வி யில் ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் ஆலய          சிவாச்சாரியார் மிக வருத்தத்துடன் கூறியது. "இங்கு பூட்டுக்களை பூட்டி   சமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் "  என்று

.பெருமான் அருளால் விரைவில்நிலைமை மாறும் என்று நம்புவோம். 

ஆலயம் பற்றிய முழு விபரங்களை முருகன்  பக்தி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் .அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

குறியீடு 

http://murugan.org/temples/siruvapuri.htm

இந்த சிறுவாபுரி தளத்தில் உறையும் நம் பெருமானைப்பற்றி                                      அருணகிரியார் மூன்று திருப்புகழ்களை அருளியுள்ளார்.

முதலில் "மகிழ்ச்சி"திருப்புகழ்    (அண்டர்பதி குடியேற )

பாடலின் பொருளையும் மற்ற அருமையான தகவல்களை "திருப்புகழ் அம்ருதம்" வலைத்தளம் அளித்துள்ளது.அவர்களுக்கு நன்றிகள் பல 
குறியீடு ..http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/230.html 

குருஜியின் குரலில் பாடலைக்கேட்போம்                        அர்ச்சனை திருப்புகழ் (சீதள வாரிஜ)
                      பாடலின் பொருளுக்கு  

http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/231.html    

                     குருஜியின் குரலில் பாடல் 


                 

                              வழி காட்டும் திருப்புகழ்(பிறவியான )

 பாடலின் பொருளுக்கு http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/231_20.html

                                                            குருஜியின் குரலில் பாடல் 
                        

அருளாளர் ஐயப்பன் குருஜியுடன் சென்றதையும்அங்கு  நிகழ்த்திய "இசை வழிபாடு"வைபவங்களை நினைவுகூருகிறார்.                                 
                                             
முருகா சரணம்
அன்பர்களே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது திருச்செந்தூர் வள்ளி கல்யாண வைபோகமே .
இது ஒரு மலரும் நினைவுகளாக அமைந்த ஒரு நிகழ்வு 1985-88 களில் குருஜியுடன் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள சிறுவாபுரிக்கு சென்றோம். அங்கு அப்போது தான் வள்ளி முருகன் ஐம்பொன் கல்யாணச்சிலை செய்து தம்பதியர்கட்கு அபிஷேக ஆராதனைகளை வள்ளி மலை பாலானந்தா சுவாமி செய்து கொண்டிருக்கிறார். மறக்கவே முடியாத சம்பவம் இது.

 ஒரு அருமையான இசைவழிபாடு நடந்தது 

அங்கு அப்போது. அதற்கு பிறகு பல தடவை சென்ற போது அந்த வள்ளி மணவாளப் பெருமாளைக் கண்டு தொழுது திருப்புகழ் பாடி வந்திருக்கிறோம். அந்த வள்ளி முருகன் அன்றே எனது மனதைக் கொள்ளை கொண்டு விட்டான். அவ்வளவு அழகு. வள்ளி நாச்சியார். அப்பப்பா என்ன நளினமான தரிசனம். முருகன் என்ன கம்பீரம்.!!!!! நீங்களே பாருங்களேன் இந்த வீடியோவில். இதை வீடியோ படமாக்கியவர்களை எப்படி பாராட்டுவது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
1997ல் மும்பையில் நடந்த வள்ளி கல்யாணத்தின் போது குருஜி பாடிய வள்ளி கல்யாணப்பாடல் காதுக்கும் மனத்திற்கும் விருந்தாக உள்ளது. 

இந்த வள்ளி மணவாளப் பெருமாளை தரிசிக்காதவர்கள் அவசியம் சிறுவாபுரிக்குச் சென்று அந்த வள்ளியையும் முருகனையும் தரிசித்து வரத்தான் வேண்டும்.
சுனையை கலக்கி விளையாடும் அந்த சொருபக்குறத்தி நமக்காக முருகனிடம் சொல்லுவாள்.
முருகா சரணம்     

பெருமானின் அபிஷேக ஆராதனைகளை குருஜியின் வள்ளி கல்யாண பாடலுடன் தரிசிப்போம் 

http://youtu.be/V-7F3c7xxc4 

அன்பர்கள் திருச்செந்தூர் யாத்திரைக்குமுன்  இத்தலத்தை தரிசிக்க வேண்டுகிறோம் 

No comments:

Post a Comment