Wednesday 14 January 2015

படி விழா 2015 : நாள்: 01.02.2015 ஞாயிறு

படி விழா பல பகுதி ஆலயங்களில் சிறப்பாக நடை பெற்று வருவதை நாம் நன்கு அறிவோம்.ஆனால் அதன் பின்னணியையைப்பற்றி ஒரு சிலரே அறிவர்.மற்றும் சுவாரஸ்யமானதும் கூட.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள் தான்..அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா திருத்தணியில்  இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 34ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.படி விழாவில் கலந்துகொள்வது நம் கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...




நம் குருஜி மும்பை படிவிழாவில் 2009ம்  ஆண்டு அன்பர்களை வழி நடத்திச்சென்றதை இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காணலாம்.































No comments:

Post a Comment