Friday 23 January 2015

தை பூசம் : இசை வழிபாடு 03.02.2015

இநத நன்னாளில்  பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.  இந்நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர்

சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.
தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கூற முடியாத  பிரமனை முருகன் சிறையில் அடைத்த நிகழ்வு நாம் அறிந்ததே. தந்தையார் முருகனிடம்உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போது, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்

சூரபதுமனை அழிக்க முருகன் தன் தாயிடமிருந்து வேல் பெற்ற நாளும் தைப் பூச நாளாகும்.
      
அருட்பெரும் ஜோதி வள்ளலார் இராமலிங்க அடிகள் ஜோதியோடு கலந்ததும் இந்த தைபூச தினத்தில் தான்

விரிவான தகவல் அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையை கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம:
     

 வழக்கம் போல் நம் தைப்பூச வழிபாடு 3.2.2015  அன்று மாலை 4.00 மணி அளவில் தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது, அன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.



       முருகா சரணம்! 

No comments:

Post a Comment