Monday 6 January 2014

குருவாய் வருவாய்

   குருவாய் வருவாய் அருள்வாய்   குகனே      

கந்தர் அனுபூதியின் கடைசி வரிகள் நம் அன்பர்கள் வாழ்க்கையில் மெய்யாகவே நிகழ்ந்ததை நாம் உணர்ந்துள்ளோம்.பெருமான் குருஜி வடிவில் வந்து நமக்கு அருளினார் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.குரு என்பவர் அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவர்.நம் பிறவியை மேம்படுத்துபவர்.எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து நமக்கு உபதேசிப்பவர்.பாகவதத்தில் 24 குருக்களை பற்றி உரைக்கப்பட்டுள்ளது.குரு தத்துவத்துக்கு சூத்திரமோ,முழுப்பொருளோ யாரும் அறுதியிட்டு கூறமுடியாது.உணரத்தான் முடியும்.

நமக்கு திருப்புகழே குரு.அதை கற்பிப்பவர்களும் ,அதன் பொருள் கூறுபவர்களும்,விளக்கமளிப்பவர் களும் குருமார்கள் தான். அந்த வகையில் இந்த அரிய தத்துவத்துக்கு அண்மையில் விளக்கம் கூறி ஓர் அற்புத உரை நிகழ்த்தியுள்ளார் அருளாளர் வசந்தா  பஞ்சபகேசன்.அம்மையார்.அவர் ஆன்மீக விழாவில் நிகழ்த்திய உரையை அன்பர்கள் இன்னும் அசை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதன் Link  முன்பே கொடுத்துள்ளோம்.

 U  Tube ல் தற்போது வெளிவந்துள்ள சொற்பொழிவுக்கு  Link  கீ ழே கொடுத்துள்ளோம்.  
வழக்கம்போல். சிவனுக்கு உபதேசம்,தட் சிணா மூர்த் தி , திருமூலர்,மாணிக்கவாசகர்,அகத்தியர்,தொல்காப்பியர், ஞானசம்பந்தர் ,ரமணர்  மகான்களின்  மேற்கோள்களை கையாண்டு சுட்டிக்காட்டியசில  திருப்புகழ் பாடல்கள்,
முத்தைத்திரு,அறிவழிய,ஆசார ஈனன் ,நாவேறு பாமணத்த,சிவனார் மனம் குளிர ,சுருதியாய்,அமலவாயு முதலியன.எல்லா தத்துவங்களும் அமைந்த ஒரு பாடல்  "ஆனாத ஞான புத்தி 'என்றும் மனதில் பதிய வைத்துள்ளார்.  

அன்பர்கள் கேட்டு பயனடைய வேண்டுகிறோம்.


"ஆனாத ஞான புத்தி " பாடலை குருஜியின் குரலில்  அனுபவிப்போம்.


பாடலின் பொருள் 




 அருளாளர் பஞ்சாபகேசன் தம்பதியர்களுக்கும்,கௌமாரம்  இணைய தளத்துக்கும் நன்றிகள் பல.


No comments:

Post a Comment