Sunday 29 December 2013



கந்தர் அலங்காரம் ஒலி /ஒளி வடிவில்  

வழிபாடுகளில் பாடல்களுக்கு முன் கந்தர் அலங்காரம் விருத்தமாக பாடுவதை அனுபவித்து வருகிறோம்.அன்பர்கள் பல ராகங்களில் விருத்தம் பாடி நம்மை மெய்மறக்க செய்து.முருகன் சந்நிதானத்துக்கே அழைத்து செல்கிறார்கள்.குருஜி விருத்தத்தில் மூழ்கினால் எழும்பிவர நீண்ட நேரம் ஆகும்.இதெல்லாம் வழிபாட்டின் போதுதான்.மற்றபடி அலங்காரத்தை நாம் படிப்பதும் இல்லை.பாடுவதும் இல்லை.(கட்டுரையாளர்களும்,ஆராய்ச்சியாளர்களும் விதி விலக்கு )

அபிராமி அந்தாதியை எடுத்துக்கொள்ளுங்கள்.முதலில் விருத்தமாகததான் பாடப்பெற்று வந்தது.குருஜி மெட்டமைத்து ,ராக பாவத்துடன் கற்பிக்க ஆரம்பித்தவுடன் புதுப்பொலிவு பெற்று அன்பர்களின் சொத்தானது.ஆயிரக்கணக்கான முறை அன்பர்கள் கேட்டு கேட்டு பாடி பாடி மனனம் செய்துள்ளார்கள்.காரணம் பதம் பிரித்து பொருள் உணர்ந்து பாடுவதுதான்.பல ராகங்கள் மெருகேற்றி ஓர் உன்னத நிலையில் வைத்துள்ளதை நாம் நன்கு அறிவோமகந்தர் அனுபூதியும் அவ்வாறே.

குருஜி கந்தர் அலங்காரத்தை நமக்காக விட்டு வைத்திருப்பதாகவே உணருகிறோம்.விட்டதைப் பிடித்துள்ளார்கள் நம் டெல்லி அன்பர்கள்.ஆம் .அலங்காரத்துக்கு குருஜியின் ஆசியுடன் பதம் பிரித்து,பொருள் எளிதாக விளங்கும்படி  பல ராகங்களில் இசை அமைத்து பாடி  U  Tube ல் வெளியிட்டிருக்கிறார்கள்.இதன் நோக்கம் மாணவர்கள் கற்று நம் நிகழ்சிகளில் பாட வேண்டும் என்ற உயரிய எண்ணமும் எதிர்பார்ப்பும் தான்.2012 ம்ஆண்டு விஜய தசமி அன்று சமர்பிக்கப்பட்டது.பாடியுள்ள அன்பர்களின் பெயரை வெளியிடாதது அவர்களின் தன்னடக்கத்தையும்.பெருந்தன்மையையும் காட்டுகிறது.தங்களின் முயற்சி  சிறிதேனும் அன்பர்களுக்கு பயன் பட்டால் தாங்கள் மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதாக கூறியுள்ளார்கள். 


அபிராமி அந்தாதிபோல் கந்தர் அலங்காரமும் நம் நிகழ்சிகளில் ஒரு தனி நிகழ்ச்சியாக விரைவில் இடம் பெற பெருமானின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறோம்.

அன்பர்கள்  .தங்களின் மேலான கருத்துக்க்களை  எழுதி படைப்பாளிகளை ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம்.

Kindly Click the LINK



KINDLY

No comments:

Post a Comment