Thursday 6 December 2012

ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்- ஸாந்தா & ஸுந்தரராஜன்


தாங்கள் கார்திகை மூலம் அன்று நடந்த இசை வழிபாடின் போது வள்ளிமலை ஸ்வாமிகள் பற்றிய அளித்த குறிப்பை படித்தோம். பரவசமடைந்தோம். அதைப்பற்றி மனதில் ஒடின சிந்தனைகளின்  எழுத்து வடிவாக்கம் இதோ

 ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் பழநியாண்டவன் சந்தியில் திருப்புகழைக் கேட்டு பராசக்தியின் அருளால் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் மூலமாகத் திருப்புகழையே மகாமந்திரமாக ஏற்று, தவநில மேற்கொண்டு அரிய சக்திகளை பெற்று அருணகிரியாரின் திருப்புகழைப் பரப்பி தெய்வ நம்பிக்கையும் முருக பத்தியும் தழைக்கச் செய்யும் அருட்பணியை மேற்கொண்டிருந்தார்.

-       சுவாமிகளின் புகழ் பற்றி ஒரே வரியில் பரணிதரன் எழுதியது

திருப்புகழ் ஸ்வாமி என்னும்பெயர் உடையாய்!
சேஷாத் திரிப்பெயர் மாமுநி உனக்குத்
‘திருப்புக ழேமஹா மந்திரம்’ என்று
செப்புப தேசத்தால் தீஷைசெய் தருளக்
குருப்புகழ் பெற்றந்த வேங்கட ரமணர்
கோவணங் கோல்கொண்ட கோலங்கண் டுருகும்
தருப்புக ழார்வள்ளி மாமலை ஸச்சி
தாநந்த! நீபள்ளி எழுந்தரு ளாயே!

-       ஸ்வாமிகள் மீது திருப்ப்பள்ளி எழுச்சி – அருட்கவி ஸாதுராம் ஸ்வாமிகள்

சச்சிதானந்த ஸ்வாமிகளுடைய வாழ்கை வரலாறு பற்றிய செய்திகள் திரு ஆர். கல்யாண சுந்தரம், ஸ்வாமி அன்வானந்தா அவர்கள் எழுதியிருக்கும் நுல்களிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. அந்த புத்தகங்கள் தற்சமயம் பதிப்பில் இல்லை. அன்பர்களிடையே யாரிடமாவது இருந்தால் அவர்கள் அதை இணையத்தில் இடலாம். பெங்களூர் அன்பர்கள் அருணகிரிநாதரின் 600 ஆன்டு விழாவின் போது வெளியிட்ட மலரில் ஸ்வாமி அன்வானந்தா எழுதிய ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் வெளி வந்திருக்கிறது.

 ஸ்வாமிகளுடன் நேரில் கிடைத்த அனுபவங்களை ஸ்ரீ பி ஸ் கிருஷ்ண ஐயர் எழுதின கட்டுரை  “My experience with Vallimalai Satchidananda Swamigal" தமிழ் ஆக்கம் செய்யப் பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கொடுக்கப்பட்ட  சில விபரங்கள்:

பழனியில் இருந்த ஸ்வாமிகளை முருகப் பெருமானே திருவண்ணா மலைக்குப் போகச் சொன்னாராம். அருணகிரிநாதர் அவதரித்த அந்த இடத்தில் ஸ்வாமிகளுக்கு ரமண முனிவருடன் தொடர்பு ஏற்படும் எனவும், அப்பொழுது தானும் அங்கு வந்து அவருக்கு தரிசனம் தருவதாகவும் கூறி இருந்தாராம். ரமண முனிவரின் உருவில் தண்டாயுதப்பாணி பெருமான் அவதரித்து இருந்ததை ஸ்வாமிகள் கண்டார். அந்த இடத்தில் ஸ்வாமிகள் திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் ( translation error) கற்று அறிந்தார். கடவுளின் அருளினால் அதை முழுமையாகக் கற்றுத் உருக்கமாகப் பாடக் கூடிய அளவில் தேர்ச்சி பெற்றார்.  ஆனால் ரமண மகரிஷியின் கட்டளையால் அவருக்கு சேஷாத்ரி ஸ்வாமிகளை குருவாக ஏற்க வேண்டியதாயிற்று. அவர்தான் திருப்புகழ் என்பது மகா மந்திரம் எனவும், அதைப் பாடினால் வேண்டிய அனைத்துமே வாழ்வில் கிடைக்கும் எனவும் ஸ்வாமிகளிடம் கூறியவர். ஆதி சங்கரர் இயற்றிய 'சிவமானசீகபூஜா' என்பதில் இருந்த நான்காம் ஸ்லோகத்துடன் 'ஆகைக்கோர் பக்தன்' என்ற திருப்புகழ் மந்திரப் பாடல் எந்த அளவு ஒத்து இருந்தது எனப் பாடிக் காட்டினாராம். அதன் பின்னர் சேஷாத்திரி மகான் ஸ்வாமிகளை கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள முருகன்-வள்ளி இருவரும் வசிக்கும் இடமான வள்ளி மலைக்குச் செல்லுமாறு ஆணை இட்டார்.

மேலும்

“அர்த்தநாரி என்ற இயற்பெயர் கொண்ட திருப்புகழ் சுவாமிகள் முருகன் அருள் நிரம்பப் பெற்றவர். அவர் தன வட நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திருவண்ணா மலை வந்து ரமண மகரிஷிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை நோக்கிய ரமணர் `மலையிலிருந்து கீழே இறங்கி போங்கள்` என உத்தர விட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்று கலங்கிய திருப்புகழ் சுவாமிகள் குருவின் கட்டளைக்குப் பணிந்து மலையை விட்டு கீழே இறங்கினார். மலை அடிவாரத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் எதிர் கொண்டார். திருப்புகழ் சுவாமியை கண்டதும் ‘சின்ன ஸ்வாமி கீழே அனுப்பினாரோ’ என்று கேட்டு விட்டு சிவ மானஸ பூசை ஸ்லோகத்தின் 5 வது ஸ்லோகத்தை கூறி அதன்  விளக்கமாக  சேஷாத்ரி சுவாமிகள் தொடர்ந்து சொன்னது:

"நீ இனி பாஹ்ய பூஜை (வெளிப்படையாகச் செய்யும் பூஜை) செய்தால் மட்டும் போதாது. உன் எண்ணங்களும் காரியங்களும் உனக்காக என்று கருதுவதை விட்டு, அனைத்தும் தெய்வத்தின் பொருட்டு என்ற மனோ நிலையை  ஸ்திரமாகக் கொள்வாயாயின், 'நான் - பிறர்' என்ற பேதங்களெல்லாம் அற்ற உயர்ந்த பதவியை அடைவாய். இதே கருத்துக்கு சமமான கருத்துள்ள திருப்புகழ் பாட்டு ஏதும்  இருக்கிறதா” என்று கேட்டார்.  அதற்கு ஸ்வாமிகள் “ஆசைக்கூர்’ பாடலை பாடி காண்பிக்கவும் சேஷாத்ரி சுவாமிகள் மிகவும் சந்தோஷப்பட்டு "திருப்புகழே  மகா மந்திரம்; அதுவே உனக்குப் போதுமானது; வேறு நூல்கள் எதுவும் நீ படிக்க வேண்டாம். வள்ளி மலைக்குச் சென்று அங்கு தவம் செய்து கொண்டிரு. பின்னர் நான் அங்கு வந்து சேர்கிறேன்", என்றார்.  

இது சேஷாத்திரி ஸ்வாமிகளின் வரலாற்றில் இடம் பெற்ற தகவல்

அந்த சிவ மானஸ ஸ்தோத்திரத்தை முழுவதும் பார்கலாமா?

ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய

மாயையான   உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல்
வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும்
நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து,
ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

ரத்னை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்

கருணைக்கடலே! தயாநிதே பசுபதே! பசுபதே
நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும்,
ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும்
என் மனத்தாலே ஸங்கல்பித்து ஹ்ருத்கல்பிதம் அளிக்கிறேன்.
ஏற்றுக் கொள்வீர் க்ருஹ்யதாம்.

ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம்,  பல காய்கறிகள், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனதால் ஸமர்பிக்கப்படுகிறது, அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள் ப்ரபுவே! (ப்ரபோ ஸ்வீகுரு).

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதாசை தத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும்,
வீணை, பேரி, மிருதங்கம், எக்காளம் முதலிய வாத்ய கோஷங்களுடனும்,
பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும்
மனதால்  மயா ஸ்ங்கல்பேன அளிக்கிப்படிகிறது ஸ்மர்ப்பிதம்.
என் பூஜைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ரபோ! (க்ருஹாணாப்ரபோ).

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ த்வாராதநம்

தாங்களே நான், என் புத்தியே பார்வதி , பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. என்உறக்கமே சமாதி நிலை. என் கால்களின் நடையெல்லாம் அனைத்துமே உன்னைப் பிரதட்சணம்  செய்வதாகும்.
பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்திரமாகும்.
நான் எந்தெந்த காரியங்கள் செய்கிறேனோ,(யத் யத் கர்ம கரோமி)
அவை னைத்துமே (தத்தகிலம்)
ஓ சம்புவே, உனக்கு நான் செய்யும் ஆராதனையாகும்' (சம்போ த்வாராதநம்.)
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்-ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்-வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ

மங்கள ஸ்வரூபராண கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், கரசரணக்ருதம் வாக்காலும், வாக்காயஜம் உடலாலும், கர்மஜம் வா காதுகளாலும், கண்களாலும், ச்-ரவண நயனஜம் மனத்தாலும், மானஸம் விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக (க்ஷமஸ்வ)
.

இப்பொழுது ஸ்வாமிகள் பாடின திருப்புகழ் பாட்டை பார்போமா?

உன் மீது நான் கொண்ட ஆசையினால் என்னுடைய மனம் என்ற தாமரை மலரை எடுக்கிறேன்.  அன்பு என்ற நாரினால் ஒரு மாலை தொடுக்கிறேன் என் நாக்கு என்ற இடத்தில். அதில் ஞானம் என்ற வாசனையைப் பூசுகிறேன். அந்த மாலை பளீரென விளங்க வேண்டும். அறிவு, அதுவும் குற்றமில்லா அறிவு, என்ற வண்டு அங்கு சுற்றட்டும். 51 அக்ஷரங்களான அந்த மாலையை உன்னுடைய பவளம் போல் விளங்கும் உன் பாதங்களில் அளிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டுமா?

திரும்பவும் ஆத்மா த்வம் கிரிஜா ஸ்லோக பொருளை படிக்கவும். ஒன்றாக இல்லை?

உங்கள் 

ஸாந்தா 
ஸுந்தரராஜன்

No comments:

Post a Comment