Sunday 19 August 2018

அருணகிரிநாதர் விழா நிறைவு

          
                                                                அருணகிரிநாதர் விழா  நிறைவு 
நமது குருஜி அவர்கள் முக்கியமான விழாக்களை சுதந்திர தினம், குடியரசு தினம் காந்தி ஜெயந்தி போன்ற விடுமுறை நாட்களில் வைத்தார்கள். அதன் நோக்கமே எல்லாரும் இவ்வைபவங்களில் தவறாது பாங்கு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். 

அந்த வகையில் .  சென்னையில் மும்பையில் அருணகிரி நாதர் நினைவு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன.வைரத்தை எத்தனை முறை பட்டை தீட்டினாலும் ஒவ்வொரு பட்டையும் பல விதமான ஒளிக்கிரணங்களுடன் மிளிர்கின்றன.அது போல் குருஜி நமக்கு இட்டுச்சென்றுள்ள ஒவ்வொரு திருப்புகழ் பாடல்களையும் இசைக்கும் போது ஒவ்வொரு முறையும்   அன்பர்கள் வித விதமான,புதுப்புது  இறை அனுபவங்களை அனுபவிக்கிறார்கள். அதுவே குருவருள்.திருவருள் 


ஆண்டு தோறும் நிகழும் இந்த அற்புத விழாவில் ,அறுபடை வீடு பஞ்சபூத தலங்கள்,பல விருத்தங்கள் ,பல பொதுப் பாடல்கள்,பல அறிய பாடல்களை உள்ளடக்கிய 101 பாடல்கள் இடம் பெறும் வைபவத்துக்கு அன்பர்கள்துடிப்புடன்  காத்திருக்கிறார்கள். அது ஒரு தவமே என்று கூறினால் மிகையாகாது.

மும்பை திருச்செம்புர் திருமுருகன் திருக்கோயிலுக்கு 

"சித்ரக வித்துவ சத்தமி குத்ததிருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரிசித்தவ நுக்ரக ...... மறவேனே"

"தூசின் பொற்சர மோடுகு லாயுலகேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்"

என்ற அருள் வேண்டலுடன்  மும்பையின்  பல பகுதிகளிலிருந்தும் ,பிரம்ம முகூர்த்தத்தில் புனித பயணம் மேற்கொண்டு வைபவத்துக்கு புணே  அன்பர்களும்,மலேசியாவிலிருந்து சில அன்பர்களும் கலந்து கொண்டு பெருமானின் பேரருள் பெற்றனர்.

வைபவத்தில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் உண்டு.திருப்புகழ் பேச்சாளர்,ஓவியர்,சிற்பி என்று பல முகங்கள் கொண்ட அன்பர் திரு. கோபால கிருஷ்ணன் ஒவ்வொரு ஆண்டும் ,இந்த வைபவத்தில் பல தலங்களில் பல விதமாக அருள் பாலிக்கும் நம் பெருமானை திருச்செம்பூரில் எழுந்தருளச் செய்வார்.

அந்த வகையில்  இந்த ஆண்டு


அருணகிரியார் கந்தர் அலங்காரத்தில் 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
   வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
      காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
         சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.      

என்று போற்றும்  திருச்செங்கோடு பெருமான்அவர் கை வண்ணத்தில்  அர்த்தநாரிஸ்வரராகவும்  செங்கோட்டு வேலவனாகவும் எழுந்தருளினார்.

திருச்செங்கோடு தலத்தைப் பற்றி  சில குறிப்புகள் 

2000 ஆண்டு பழமை வாய்ந்தது. 
மூலவர்   அர்த்தநாரிஸ் வரர்  மலைமீதுள்ள  இத்தலம் மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை  நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் ,நாககிரி, மற்றும் பணிசயிலம், சர்ப்பகிரி  என்ற பெயர்களும் உண்டு. கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன.ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.

விழா வழிபாட்டில் 52 பாடல்கள் வரை அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளித்த பெருமான் பின்னர் செங்கோட்டு வேலவனாக 
எழுந்தருளியகாட்சி அன்பர்களை பரவசப்படுத்தியது.

                                                                                       




மற்றும் 18 அடி நீளத்துக்கு காட்சி யளித்த  நாக பிம்பத்துக்கு அன்பர்கள் 
 தங்களுக்காகவும் ,நேசிக்கும் மற்ற அன்பர்களுக்காகவும் ,உலக
 நன்மைக்காகவும் பிரார்த்தனைகளுடன்  மலர்களை சூட்டி 
பெருமானுக்கு சமர்ப்பித்தது மேலும் மெருகூட்டியது. 

                                                                                             






                                                                                                                 




                                                                                                       



தான் வடித்துள்ள திருச்செங்கோடு பெருமானின் பெருமைகளை 
அன்பர் கோபாலகிருஷ்ணன் விளக்குகிறார்.

குறியீடு 

வண க்கத்துக்குரிய ராஜி மாமி பாடிய பத்தர் கணப்பரிய பாடலின் நிரவல்  அன்பர்களை சர்ப்பகிரீஸ்வரர் சன்னதிக்கே இட்டுச் சென்றது.  

குறியீடு 


குருஜி கையாண்ட ஐந்து  பாடல்களும் இசைக்கப்பட்டன.    

                                                              "அன்பாக வந்து உன் தாள் பணிந்து "


                                                                                                                


                                                                            "காலனிடத்தணுகாதே "




                                                                                                                         

                                                                "கொடிய மறலியும் அவனது கடகமும் "



                                                                                                                          

                                                                                          U TUBE Link

                                                              https://youtu.be/_ezcM8RpPjU

                                                                  "பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திட "


                                                                                                                 


                                                                 "புற்புதமெனாம  அற்ப நிலையாத "

                                                                                                                 

இந்த சந்தர்ப்பத்தில் சென்னை அன்பர் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள்
 "செங்கோட்டுவேலவனின்"பெருமைகளையும்பாடல்களைபொருளுடன்
நிகழ்த்தியுள்ள   இசைப்பேருரையை  பணிவுடன் அளிக்கிறோம்.

குறியீடு 


அன்பர்கள் சித்ரா முர்த்திக்கும்,U tube ல் வடிவமைத்த 
மாலதி ஜெயராமனுக்கும் நன்றிகள் பல .

ஆறு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த அருணகிரி நாதரின் நினைவு விழா மங்கல ஆரத்தி மற்றும் அருள் வேண்டலுடன் இனிதே நிறைவுற்றது.                             
சில புகைப்பட தொகுப்புகள் 
                                 









                                                                                             






















திருவாளர்கள் கே .ஆர் .பாலசுப்ரமணியம் மற்றும் கார்த்திக் சுப்ரமண்யம்   அவர்களுக்கு நன்றிகள் பல  

அன்பர் அய்யப்பன் சென்னை வாசி என்றாலும்  அவர் இதயமும் ,மனமும் மும்பை அன்பர்களை எப்போதும் சுற்றி சுற்றி வரும்.உணர்ச்சி பூர்வமாக அவர்  நம் வைபவத்தை பற்றி  கூறுவதை கேட்போம்.

"முருகா சரணம்
அன்பர்களே,
மும்பையில் அருணகிரிநாதரின் நினைவு திருப்புகழ் இசை வழிபாடு  சுதந்திர தினத்தன்று சிறப்பாக நடை பெற்றுள்ளது. . அவ்வமயம் அன்பர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களின் திருச்செங்கோட்டு வேலவனின் அலங்காரம், அர்த்த நாரீஸ்வர அலங்காரம்,  நம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்திருகிறது என்பதை இந்த வீடியோவில் காண முடிகிறது. அனைத்திற்கும் சிகரம் வைத்தால் போல் நமது பாலு சார் மாமி அம்மாவினுடைய சந்திர கெளஸ் ராக விருத்தமும்" கொடிய மறலியும்" எனும் திருச்செங்கோட்டு திருப்புகழ் அந்த நாளுக்கும் அலங்காரத்திற்கும் ஏற்பு உடையதாக அமைந்துள்ளது. வாருங்கள் வீடியோவைப் பார்ப்போம் திருப்புகழைக் கேட்போம் முத்தி பேறு பெறுவோம். அத்துடன் கேரள மக்களுக்காக பிரார்த்தனையும் செய்வோம்.
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

                       
                                                                         
மற்றும் சென்னையில் நடை பெற்ற விழாவைப் பற்றி அவர் விளக்குவதையும் கேட்போம்.


முருகா சரணம்
அன்பர்களே,
நமது குருஜி அவர்கள் முக்கியமான விழாக்களை சுதந்திர தினம், குடியரசு தினம் காந்தி ஜெயந்தி போன்ற விடுமுறை நாட்களில் வைத்தார்கள். அதன் நோக்கமே எல்லாரும் இவ்வைபவங்களில் தவறாது பாங்கு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அதன் படி இன்று சென்னையில் மும்பையில் அருணகிரி நாதர் நினைவு விழா. இன்றைய விழாவின் இசைவழிபாடு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12-30 மணி வரை திருப்தியாக நடந்தது. இவ்விழாவின் தலையாய அம்சம் மழகையர்களில் பாடல்கள் தான் எனில் அது சரியே. அது போல ஒர் கண்பார்வை இல்லாத  அன்பர் காம்போதி இராகத்தில் விருத்தம் பாடி உடுக்கத்துகில் வேணும் திருப்புகழை பாடி அசத்தியதே. அதிக அளவில் குழந்தைகள் திருப்புகழ் கற்று பாட வேண்டும் என்பது  நமது குருஜியின் ஆத்ம அபிலாஷை. இந்த நிலை  கண்டு அவர் ஆத்மா பெரு மகிழ்ச்சி கொள்ளும். 
இந்தக் காணொளியில் குரு வந்தனம், குழந்தைகள் பாடிய உரிய தவ நெறி திருப்புகழ்,  அனுபூதி , மற்றும் பூஜை காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.. பூராவையும் உங்களுக்கு கொடுக்க முடியவில்லையே எனும் மனக்கவலை அடியேனுக்கு.



முருகா சரணம் 

                       
மற்றும் நம் குருஜியின் ஜெயந்தி விழா வரும் செப்டெம்பர் முதல் நாள் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில்  நவி மும்பை ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில்  நடை பெறஉள்ளதையும் அன்பர்கள்  நினைவு கொள்ள வேண்டுகிறோம்  

Address 

Plot No 13..Phase  1...Sec 29 opp  Best Bus Stop  Nerul East  Navi  Mumbai  400706



                             


No comments:

Post a Comment