Thursday 5 October 2017

புதிய வரிசை எண் 492 வழிபாடு புத்தக எண் வரிசை 21


                         குரு மஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் 

                                                                              (476--503)


                                   புதிய வரிசை எண்  492 வழிபாடு புத்தக எண்  வரிசை  216

          "நித்த பிணி கொடு மேவிய காயம்
 " என்று தொடங்கும் பாடல் 


                                                                                  கீரவாணி ராகம்                                                 
                                                                   பாடலும் பொருளும் காண குறியீடு


                                        http://thiruppugazhamirutham.blogspot.in/2013/05/216.html

                                                                  கருவூர்  தலம் -   சில தகவல்கள் 


                                                             கல்யாணபசுபதீசுவரர் கோயில்

கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளது.


தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும்.

மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது.

மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் கருவூரார் சன்னதியும், ராகு கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளது.புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் அமைந்துள்ளன.
இக்கோவிலின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன.

இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.

தல வரலாறு 
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்தது இவ்வூரில்தான். இது திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும்அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றுள்ளது.


                                                                  குருஜியின் விருத்தம் 

                                                                                        

                                                            Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                       https://youtu.be/qOLH0lzozEo

                                                                              பாடல் இசையுடன் 

                                                                  17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                      

                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                      https://youtu.be/G_Qcan2Ud0U



                                                                                                         

                                                          Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                       https://youtu.be/vn5f9GUsCVo

இந்த பாடல் மற்றும், கருப்புவிலில் (67)  சீரான கோலாகல (199)கருகி  அறிவகல  (203)ஜெனித்திடும் (221) ரத்தமும் சீயும் (253) கடலை பெயரோடு (353) மக்கள் தாயாருக்கு (407) முதலியன வழிபாடுகளில் இடம் பெறுவதில்லை என்ற குறையை நிறைவு செய்ய , வரும் கந்த சஷ்டி வழிபாடுகளில் அப்பாடல்கள்  இடம் பெறும் என எதிர் பார்ப்போம்.

                                                                               முருகா சரணம் 

No comments:

Post a Comment