Tuesday 5 September 2017

சுப்ரமண்ய புஜங்கம் 6


                                                                                 சுப்ரமண்ய  புஜங்கம்    6


கிரெள மந்நிவாஸே நரா யேsதிரூடா

ததா பர்வதே ராஜதே தேsதி ரூடா |

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து ||


‘யே நராஹா’ ......................எந்த மனிதர்கள்

 ‘மந்நிவாஸே .................... என்னுடைய வாசஸ்தானமாகிய இந்த கந்தமாதன மலையில்

 ‘அதிரூடாஹ......................’ ஏறுகிறார்களோ, கோவில்ல ஸ்வாமி கடலை பார்த்துண்டு இருப்பார். முன்னாடி போய்  தர்சனம் பண்ணணும். பக்கத்துல கொஞ்சம் தூரம் நடந்து போனா அங்க கந்தமாதான மலை, வள்ளி குஹை இருக்கும். அங்க கொஞ்சம் படி ஏறுகிற மாதிரி இருக்கும். அங்க போய் 

‘அதிரூடாஹ பவந்தி’,.......யார் அந்த மலையில ஏறுகிறாளோ, அங்க ஸ்வாமி தர்சனம் பன்றாளோ, 

‘தே’ ........................................அவர்கள் அப்போதே,

‘ராஜதே பர்வதே.................’ ராஜதம்னா வெள்ளினு அர்த்தம். கைலாச மலை, வெள்ளி மலை. கைலாச மலையில்

 ‘அதிரூடாஹ’  ..................ஏறி வாசம் பண்ணுகிறவர்கள் கைலாசமலையில் ஏறிய புண்ணியத்தை அடைகிறார்கள். இந்த திருச்செந்தூர்ல வந்து இந்த கந்தமாதான மலையில ஏறி ஸ்வாமியை தர்சனம் பண்ணினா, கைலாசத்துல ஸ்வாமி பக்கத்துல இருப்பா, அப்படீன்னு சொல்றார் ஆதி ஆச்சார்யாள்.

 ‘இதி ப்ருவன் இவ’ ...........சொல்லுகிறவர் போல், அந்த கடற்கரையில முருகப் பெருமான் இருக்கார். மலை பக்கத்துல இருக்கார்ன்னா என்ன அர்த்தம்? இந்த மலையில ஏறினா கைலாசத்துல ஏறி முருகப் பெருமான் பக்கத்துலேயே நித்யவாசம் பண்ணலாம்ன்னு அர்த்தம்-னு சொல்றார்.

கந்த சைலாதிரூடாஹா’ ..கந்த சைலத்திலிருக்கும் ‘ஷண்முக:’ ஆறுமுகத்தோடு கூடிய ‘தேவஹ’ இந்த தெய்வமான ஸுப்ரமண்ய ஸ்வாமியை தரிசித்தேன். அவர் எனக்கு

 ‘ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து’ ......‘முதமே அஸ்து’ ன்னா எனக்கு எப்போதும் அவர் சந்தோஷத்தை கொடுக்கட்டும்ன்னு அர்த்தம்.

ஷண்முகம் என்றவுடன் ஷடாட்சரமான 'சரவணபவா'  என்ற மந்திரமும், ஆறுமுகமும்  நினைவிற்கு வருகிறது..

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணையது என்றுநாளும்  அடியவர்க்கு அடியவனாக இருக்க வேண்டும் என விழைகிறார்.

நமது குருஜி சொல்லிக் கொடுத்திருக்கும் இசை வழிபாட்டின் மூலம் இசைபயில் ஷடாட்சரம் அதாலே இக பர சௌபாக்யம் அருள வேண்டுவோம்.

முருகா சரணம் 

No comments:

Post a Comment