Thursday 24 September 2015

குருமஹிமை இசை


                                                         
                                                            குருமஹிமை இசை 


இசைக்கு தேவையான ராகம் ,பல்லவி,நிரவல்,விருத்தம், ராகமாலிகை எல்லாம் நம் வழிபாடுகளில் உண்டு.கச்சேரி முறையில் முன்னோடியாக ராகம் சமீபத்தில் தான் இடம் பெற்றது.அதற்கு முன்னால் விருத்தம் தான் ராகத்தின் இடத்தை பிடித்திருந்தது.பண்ணிசை,பஜனை முறைகளிலும் இன்றும் பின்பற்றப்படுகிறது.நம் வழிபாட்டில்,விருத்தம்,பாடல்,நிரவல்,நாமாவளி,அர்ச்சனை,தூபம்,தீபம்,நைவேத்யம்,ஆர்த்தி .அருள் வேண்டல் எல்லாவற்றிலும்  ராக மயம் தான்.

குருஜி ,அலங்காரம்,அனுபூதியைத்தவிர திருப்புகழ் பாடல்களையே விருத்தமாக பாடி அன்பர்களின் மனத்தை உருக்கி,இறைவன் சந்நிதானத்துக்கு கொண்டு சென்றார்.மனம் கலங்காதவர்கள்,கண்ணீர் சிந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அடுத்து பாடல்கள்.111ராகங்களுக்கு மேல் அமைந்துள்ளது.ஒரே ராகத்தில் பல பாடல்கள்.ஆனால்,ஒவ்வொன்றும் தனித்தனி மெட்டு.மற்றும்,ஆரம்பம்,முடிவு,ராகபாவம்,சாகித்ய பாவம்,சஞ்சாரங்கள் முற்றிலும் மாறுபட்டவை.ஒரு பாட்டு போல் மற்றது கிடையாது.அதற்கு மாறாக ஒரே பாடல் இரண்டு மூன்று ராகங்களில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு அம்சம்.யாவும் சந்தங்களுக்கும்,தாளத்துக்கும்,கால பிரமானத்துக்கும் கட்டுப்பட்டவை.

மும்மூர்த்திகளுக்கு முன்னால் தமிழ் இசை தான் இருந்தது.பலவிதமான அரசியல் சூழ் நிலை காரணமாக அது பின் தள்ளப்பட்டது.ஊத்துக்காடு வேங்கட கவி,மாரிமுத்தாபிள்ளை,அருணாச்சல கவி ,கோபால கிருஷ்ண பாரதியார் போன்றவர்களின் பாடல்கள் மிக எளிமையானவை.மக்கள் வழக்கு மொழியில் அமைந்தது.அப்பாடல்களுக்கு இசை அமைத்து மக்களை கவர்ந்தது மிக சுலபமாக இருந்தது.

ஆனால் திருப்புகழ் பண்டித மொழியில் அமைந்தவை.வேதங்கள் ,உபநிஷத்,யோகா சாதனை,தத்துவங்கள் போன்ற ஒப்பற்ற கருத்துக்களை உள்ளடிக்கிய கடினமான மொழியில் அமைந்தவை. பாடல்கள் நீளமானவை.அத்தகைய பாடல்களுக்கு சர்வ இலகுவாக இசை அமைத்து,சந்தம்,தாளம்,ராக பாவம்,பொருள் சிதைவு இல்லாமல் அன்பர்களை பாட வைத்தது எப்படி சாத்தியம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சங்கீத பயிற்சியில் தேர்வு பெற குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.ராகம் பிடிபடாத ஒன்று.ஆனால் நம் அன்பர்கள் இவற்றை எல்லாம் குறுகிய கால அளவில் அடைந்ததற்கு ஒரே காரணம் இறைவனிடம் ,குருவிடமும் சரணடைந்ததுதான்.

மற்றும் சங்கீத உலகில்பலபாடாந்திரங்கள்.அதுதவிரஅரியக்குடி,செம்மங்குடி,மகாராஜபுரம் போன்ற பல பாணிகள் வேறு.தேர்ந்த பயிற்சிக்குப்பின் பாடுபவர்கள் சிலரே.மற்றவர்கள் ரசிகர்கள் .பல திருப்புகழ் அமைப்புகளிலும் இவைகள் எல்லாம் உண்டு.

ஆனால் இங்கு ஒரே பாணிதான்.குருஜியின் பாணி.அன்பர்கள் எல்லோரும் பாடகர்கள்.மற்றும் அன்பர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வழிபாடுகளில் த்யாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப்போல் ஒரே குரலில் பாடுவது இறைவன் அளித்த வரம்.வழிபாட்டில் சங்கீதத்தில் கரை கண்டவர்கள் பாடும் போது மற்றவர்களுடன் சேர்ந்து ,ஏன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் ,அவர்களுடன் சாதாரண மாக பாடுவதும் விவரிக்க முடியாத அதிசயம்.

மேடைக்கச்சேரி நடந்து கொண்டிருக்கும் .பாடகர் பாடும் ராகம் பிடிபடவில்லை.நண்பர்கள் இருவரில் ஒருவர் பந்துவராளி என்று கூறுவார் .மற்றவர் இல்லை இல்லை பூர்விகல்யாணி என்பார்.சர்ச்சை வளர்ந்து போட்டி யை எட்டும்.ஆலாபனை முடிந்து கீர்த்தனை ஆரம்பித்தவுடன் ராகம் பந்துவராளி என்று வெளிப்படும்.சரியாக கணித்த நண்பர் "நான் அப்பவே சொன்னேன் இல்லையா"என்று காலரை தூக்கி விட்டுக்கொள்வார்.மற்றவர்எதோ அவமானப்பட்டவர் போல் ,அவரிடம் பேச மாட்டார்.மறுநாள் நண்பர் பக்கத்தில் அமர மாட்டார்.

இந்த வம்பெல்லாம் இங்கு கிடையாது.பந்துவராளி பந்துவரளிதான் .பூர்வி கல்யாணி பூர்வி கல்யாணிதான்.அதுபோல் ஆபோகி ஆபோகி தான்.ஸ்ரீரஞ்சனி ஸ்ரீரஞ்சனி தான் .எந்த சந்தேகமும் கிடையாது.நல்ல சங்கீத ஞானம் உள்ளவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.

இப்படியே பேசிக்கொண்டும்,எழுதிக் கொண்டும் இருந்தால் இசையை எப்படி அனுபவிப்பது?வழிபாடுகளில் அதிகம் இடம் பெறும் பாடல்கள் அன்பர்கள் மனதில் என்றும் குடிகொண்டவை.அதிகம் இடம் பெறாத பாடல்கள் பல .அவற்றை  பகிர்ந்து கொள்ளும்நோக்கோடு  ஒரே ராகத்தில் அமைந்த சில பாடல்களை வெளியிட விரும்புகிறோம்.

முதலில் பந்துவராளி ராகம்.



                                                              படர் புவியின்.


                                                                   குழவியும்


                                                                                   

                                                                             

                                                                        பூமாதுர

                                                                               

                                                                   திமிரமாமண

                                                                                   
                                                                                         
                                                                                 
தொடரும் 

முருகா சரணம் 
                                                                               

                                                                             


                                                                            

1 comment:

  1. பக்திமணம் பரப்பும் பாந்தமான பந்துவராளி பாடல்கள்!

    ReplyDelete