Thursday 3 September 2015

குருமஹிமை ......2

                                   
                                                   குருஜியின் ஜெயந்தி விழா 2015

                        
                             
                                                                                             
                                                                               
                                           
                                                                                   
                                
                                                                                                              
                                                   



                                                                   
அன்பர்கள் அமைப்பு அரசாங்க  விதிகளுக்காக BYELAW வுடன் பதிவு 


செய்யப்பட்டஇருந்தாலும்எழுதப்படாதசட்டங்களும்உண்டு.அவை,அன்பு,

அவிரோதம்நெறிகளைகடைபிடிப்பது,கடமைகண்ணியம்,கட்டுப்பாடு.கு

றித்தநேரத்துக்குமுன்பாகவே வகுப்புகளுக்கும் வழிபாடுகளுக்கும்

வருவது பிற நகரங்களுக்கு செல்லும்போது  திருப்புகழ் நூலை 

தன்னுடன்எடுத்துச்செல்வதுஅங்குநடைபெரும் வகுப்புகளுக்கும்,வழிபா

ட்டுகளுக்கும்தேடிசெல்வது,பணி நிமித்தம் இடம் பெயரும்போது சென்ற 

இடத்தில்வகுப்புகள்தொடர்வது,விழாக்களில்தவறாமல்கலந்து கொள்வ

து,தன்னடக்கம்அன்றையவழிபாட்டில்தலைமைஏற்று நடத்தும்அன்பரை

யே குருவாகஏற்றுக்கொள்வது,எந்த வயதினர் பாடினாலும் மற்றவர்கள் 

வாங்கிப் பாடுவது,பேச்சை தவிர்ப்பது,பூரண அமைதி காப்பது,உலக 

நன்மைக்காக அருள் வேண்டல் தம்மால் இயன்ற பணிகளை செய்வது 

என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  அன்பர்கள் முழு மூச்சாக 

கடைபிடிப்பதைக்கண்டு,மற்றபொது மக்களும் சகோதர 

ஸ்தாபனத்தாரும் எப்படி இவை சாத்திய மாகிறது என்று வியக்கிரார்கள்.

அமைப்பில் அங்கத்தினராக சேர வேண்டும் என்ற விதி கிடையாது.

மற்றஅமைப்புகளில்கணவர்இருப்பார்.துணைவிஇருக்கமாட்டார்.குழந்

தைகள்இருப்பதுசந்தேகமே.ஆனால்இங்குகணவர்,துணைவி,குழந்தைக

ள்,சம்பந்திகள்,சம்பந்திக்குசம்பந்திகள்உறவினர்கள்நண்பர்கள்,எல்லோ

ரும் உண்டு.நான்கு தலை முறைகளாக  தங்களை அர்ப்பணித்துள்ள சில 

குடும்பங்களும் உள்ளன.மொத்தத்தில் திருப்புகழ் குடும்பம் .

.எல்லாவற்றிற்கும் காரணம் குருவருளும்,திருவருளும் தான்.


சென்னையில் நடந்த ஆன்மீக விழாவில் கலந்து கொண்ட வெளி 

பேச்சாளர்கள்  "நாங்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் அதிக பட்சம் 

100பேரைத்தான் காணமுடியும் ஆனால் இங்கு ஆயிரக்கணக்கில் 

கலந்துகொண்டு ஆர்வமுடன் முருகன் புகழை சலிக்காமல் கேட்பது 

எங்களுக்கு ஆச்சர்யமாகவும், மனநிறைவாகவும் உள்ளது "என்று மனம் 

திறந்த பாராட்டுகளை தெரிவித்தார்கள் 




அமைப்பில்  பல வரலாறு படைத்த நிகழ்சிகள் 




                



                                                               

                                      





தொடர்ந்து பெங்களூரில் 2008 ல் வெகு சிறப்பாகநடைபெற்றபொன் விழா 

அடுத்து அதே ஆண்டில் ஆகஸ்ட்  மாதம் குருஜியின் சதாபிஷேக வைபவம் 


2013 ஜூலை மாதம் சென்னையில் நடந்தேறிய  ஆன்மீக விழா.

அடுத்து வகுப்புகள். வகுப்புகளுக்கு  எந்த கட்டணமும் கிடையாது.எந்த 


பாட திட்டமும் கிடையாது.முடிவும் கிடையாது. சங்கீதம்,ராகம்,தாளம் 

தெரிய வேண்டிய அவசியமில்லை.தெரிந்தால்  உத்தமம்.எந்த பாடல் 

எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கப்படுகிறது.வயது,மொழி வரம்பு 

கிடையாது.யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் 

சேரலாம்.தமிழ் அறியாத மலையாளம்,தெலுங்கு ,கன்னடம்,மராத்தியை

தாய்மொழியாக கொண்டவர்கள் எப்படி கற்றுக்கொண்டு ஒருமுகமாகப் 

பாடுகிறார்கள் என்பது புரியாத புதிர்.இது அதிசயம்.விசித்திரம் அவர்கள் 

பாக்யசாலிகள்.பெருமானின் அருள் பெற்றவர்கள் என்பதே தக்க பதில்.




வழிபாடுகள்.திருப்புகழ் பாடல்களை வகுப்பில் ,தங்கள் இல்லத்தில் பாடி 

கிடைக்கும் அனுபவத்தை விட வழிபாடுகளில் கலந்து கொண்டு 

கூட்டாக பாடுவதையேமிக்கபாக்கியம்என்றுகருதி ஆனந்தம்,பரமானந்த

ம் அடைகிறார்கள்.சிலவழிபாடுகளில்108 பாடல்களை6மணிநேரமவரை

அர்ப்பணித்துசிறிதும்சோர்வடையாமல் மனம்நெகிழ்ந்து இறை

வன்சந்நிதானத்தில் ஒன்றி உறைகிறார்கள் என்பது கண்கூடு 



மற்றும் 



"பூஜை செய்வோரது ஆடம்பரத்தோற்றத்தைக் கண்டும்,இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ளஆசையினாலும்,தெய்வம் எழுந்தருளவேண்டிச் செய்யும் சிறந்த தகடு யந்திரங்களைக் கண்டும்,பதினாறுகால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும்,வேதம், ஆகமம் இவை முழங்கும்இடத்தைக் கண்டும்,யாகங்களுக்குவேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்துஅவற்றில் மயங்காமல்,அடியார்களின் கண்ணீர் பெரிதாகப்பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே,


எனது என்ற மமகாரமும், நான் என்றஅகங்காரமும் நீங்கி, பிற பொருள்கள் யாவும் நானேஆகக்கூடிய மனோ பாவத்திற்கு எட்டாதபெரு நிலையைத் தந்து அருள்வாயாக.

அறிவு,அறியாமைஆகிய இரண்டுக்கும்அப்பால்உள்ளஅறிவொளிஎதுவோஅதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து,உன்சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ?"

என்று பலவாறு உணர்ந்து பல உன்னத நிலையை அடைகிறார்கள் 

இசைகச்சேரிகளில் சிலர் பாடுவார்கள்.மற்றவர்கள் ரசிப்பார்கள்.அந்த 
ரசனை வேறு.பஜனைகளிலும் பாகவதர்கள் பாடுவார்கள்.அவர்கள் 
பாடுவதை மற்றவர்கள் வாங்கி பாடுவார்கள் ஆனால் நம் வழிபாடுகளில் கலந்து கொள்ளும் அன்பர்கள் யாவரும் சேர்ந்து ஒரே குரலில் பாடுவது கண்டு மற்றவர்கள்அதிசயப்படுகிறார்கள்.

அன்பர்களிடையே பரவலாக திருப்புகழ் அன்பர்கள் முதிய வயதினர்கள் .இளைய தலை முறை கள் அவ்வளவாக ஈடுபடுவதில்லை என்ற ஆதங்கமும் களையும் நிலவுகிறது.அன்றைய இளைய தலை முறையினர்தான் இன்றை முதியவர்கள்.பெருமானின் அருளால் தலை முறைகள் தொடரும் .ஆன்மீக விழாவில் இளைய தலை முறையினர் தனியாக நடத்திய இசை வழிபாடு அதற்கு சான்று.

அருளாளாளர் சித்ரா மூர்த்தியின் முகவுறை அவர்களுக்கு அணிவித்த கிரீடம் என்றே சொல்லலாம் 

 https://www.youtube.com/watch?v=b6p5AOb7jIk&hd=1                                             

முருகா சரணம்

தொடரும் 


                               

1 comment:

  1. இளைய தலை முறையினர் தனியாக நடத்திய இசை வழிபாடு எதிர் காலத்திற்கு நம்பிக்கையூட்டும் பேரொளி!அருளாளர் சித்ரா மூர்த்தியின் முகவுரை மிகவும் அருமை!

    ReplyDelete