Saturday, 29 August 2015

திருப்புகழ் தொண்டர்கள்


                                                                      திருப்புகழ் தொண்டர்கள் 


                                               மருதமலை முருகன் திருக்கோயில் ராஜ கோபுரம் 


                                               

                                                             


திருப்புகழ் அன்பர்கள் அமைப்பில் பலதுறை வல்லுனர்கள் உள்ளனர் ஆனால் அவைகளை கருத்தில் கொள்ளாமல் திருப்புகழ் மற்றும் அருணகிரியாரின்படைப்புகளைமற்றவர்களுக்குகொண்டுசெல்லஇசைவழிபாடுகள்,வகுப்புகளசொற்பொழிவுகள்இசைசொற்பொழிவுகள் ,பொருள் விளக்கம்,நூல்கள் படைப்பது  மூலம் அரும் பாடு பட்டு வருகிறார்கள்.குடத்தில் இட்ட விளக்கு போல் திகழும் அவர்களை தனிப்பட்ட முறையில் பாராட்டுவது நம் மரபு இல்லை என்றாலும் அவர்கள்மேற்கொணடுள்ளதிருப்பகழ் தொண்டை மற்றவர்களுக்கு தெரியபபடத்தTV,வலைத்தளங்கள்புத்தக பதிப்புகள்செவ்வனேபணியாற்றுகின்றன.அது காலத்தின் கட்டாயம்.

நம் குருஜி திருப்புகழை  இசைப்பது மட்டும் போதாது அதன் உட்பொருளை  உணர்ந்து   பாடவேண்டும்என்றுஅடிக்கடிகூறுவார்.வழிபாடுகளிலும்,வகுப்புகளிலும் அதற்கு நேரம் கிடைப்பது அரிது.அக்குறையை போக்க பல அருளாளர்கள் தனி வகுப்பு நடத்துகிறார்கள் .பல சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார்கள்..நூல்களையும் படைத்துள்ளார்கள்.அவர்களில் ஒருவர்தான்"Thiruppugazh  Glory to Lord Muruga என்ற அருமையான நூலை ஆங்கிலத்தில்  படைத்துள்ள கோயம்புத்தூர் அருளாளர் V.S.கிருஷ்ணன். 

சிறு பிண்ணணி.

1960 ல்  பழனியில் ,கல்கத்தா திருப்புகழ் மணி ஐயர் என்ற  அன்பரின் பஜனையை கேட்ட அவரின் தந்தை  திருப்புகழுக்கு அக்கணமே அடிமையானார்.தமிழில் அதிக பரிச்சியம் இல்லாத அவர், மணி ஐயரை கேரளாவுக்கு தன் இல்லத்துக்கு  அழைத்து,திருப்புகழை மேலும் கற்றுத்தர வேண்டினார்.

அவரதுவருகைவரப்பிசாதமாகஅமைந்துகுடும்பவாழ்க்கைமுறையையேமாற்றியது..திருப்புகழுக்கு அடிமையான அனைவரும் விரைவில் பாடல்கள்,அநுபூதி,அலங்காரம் முதலியவற்றை புத்தகத்தை பார்க்காமலே பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார்கள்.41 நாள் அருகிலுள்ள கணபதி ஆலயத்தில் திருப்புகழ் நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்து திருப்புகழை பற்றி அதிகம் அறியாத கேரளா அன்பர்களுக்கு பரமானந்தத்தை அளித்து வரலாறு படைத்தார்.

மணி ஐயரின் "திருப்புகழ் பாடல் மட்டும் அல்ல.அது இறை வழிபாடு.கலாச்சாரம்.தத்துவம்.வாழ்கை நெறி.உன்னத நிலைக்கு .எடுத்துச்செல்லும் வழி "என்ற உபதேசத்தின் படி குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க்கைமுறையை மேற்கொண்டார்கள்.சென்ற இடமெல்லாம் திருப்புகழை எடுத்து சென்றார்கள்

அருளாரர் கிருஷ்ணன் பணி நிமித்தம் வட நாட்டின் பல பகுதிகளுக்கு  சென்றாலும் பணியில்அதிகம்நாட்டமில்லை.உள்ளம்   திருப்புகழையே   ஆட்கொண்டது.    செங்கல்வராய பிள்ளை,வாரியார் முதலியாரின் ஆராய்ச்சி நூல்களை இரவு பகல் பாராது படித்து தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் நம் குருஜி அவர் இதயத்தில் புகுந்தார்.பரவசமான அவர் குருஜிக்கு அடிமையானார் என்று கூற தேவையில்லை.தம் ஆராய்ச்சியின் பயனாக  திருப்புகழ்  ராமாயணம்,மகாபாரதம் பாகவதம் போன்ற புராண காவியங்களை உட்கொண்டதோடு அது.வேதம்,உபநிஷ கருத்துக்களையும் கொண்டது என்று உணர்ந்த அவர் அவைகளை மற்ற அன்பர்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கத்தோடு 2005ம் ஆண்டு "Thiruppugazh Glory to Lord Muruga"என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்தார்.வெகு விரைவில் எல்லா பிரதிகளும் தீர்ந்தன.பல அன்பர்கள் மறு பதிப்பு வெளியிட வேண்டினர். முதுமை நிலையில் எப்படி தனியாக செய்வது என்று தளர்ச்சியுற்ற அந்நிலையில்அவர் புத்தக வெளியீட்டார் உலகில் 25ஆண்டுகள் வெற்றிகரமாக இலக்கிய,ஆன்மீக சேவை புரிந்து இந்தியஅரசு மற்றும் மாநில அரசின்பல விருதுகள் பெற்ற  சென்னை உமா பதிப்பகம் உரிமையாளர் திரு ராம லக்ஷ்மணனை அணுகினார்.அவர் பல இலக்கிய நூல்களோடு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையின் "திருப்புகழ் மூலமும் உரையும் "என்ற ஆராய்ச்சிநூலையும்ஐந்துபாகங்களகவெளியிட்டுள்ளார்.அருளாரர்
கிருஷ்ணனின் திருப்புகழ் தொண்டையும்,தீராத ஆர்வத்தையும் நன்கு உணர்ந்த அவர் ,அரும்பாடுபட்டு உருவாக்கிய நூலை மறுபதிப்பாக வெளியிடுவதற்கு உடன் விருப்பம் தெரிவித்தார்

முருகப்பெருமானின்அருளால்திருப்புகழைப்பற்றிசிறப்பாகவும்,முழுமையாகவும் ஆங்கிலத்தில் 406 பக்கங்களுடன் "Thairuppugazh Glori to Lord Muruga" என்ற திருநாமம் கொண்ட  நூல்  அண்மையில் மறு பதிப்பாக  வெளி வந்துள்ளது .
                                                                                     


அதில் "பெருமானின் அவதார மகிமையும்,அவரது எல்லையற்ற கருணையும், மற்ற குணாதிசயங்களும்,அசுரர்களிடமிருந்து பக்தர்களைகாக்கஎழுந்தருளும்வகை,வள்ளிகல்யாணம்,பழனியில் மேற்கொண்ட துறவு கோலம்,மற்றும் வள்ளிமலை ஸ்வாமிகள் பாம்பன்ஸ்வாமிகள்போன்றமகானகளின்சரித்திரம்,திருப்புகழுக்காக தங்களை அர்ப்பணித்த அன்பர்களின் செய்திகள்,அநுபூதி மற்றும் அலங்காரம் முதலியவற்றின் மொழி பெயர்ப்பும் விளக்கமும்விரிவாகஇடம்பெற்றுள்ளன.மற்றகிரந்தங்களைப்போல் இந்த அறிய நூலும் ஒவ்வொரு முருக பக்தரின் இல்லத்திலும் இடம் பெற வேண்டும் "என்று பதிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பிடத்தக்க அம்சம் .2005ல் வெளியான முதல் பதிப்பிற்கு நம் குருஜி வெகு சிறப்பாக மதிப்புரை வழங்கியுள்ளதுதான். அதை அடுத்த பதிவில் வெளியிடுகிறோம்.

திரு கிருஷ்ணனின் வலைத்தளம்.
www.thiruppugazh.org

நூல் கிடைக்கும் இடம் 

The book can be obtained by sending the cost of the book Rs.200/- and Rs 20 (within Tamilnadu) and Rs.30/-(outside Tamilnadu) as courier charges to Uma Pathippagam, 18/171, Coral Merchant Street, Mannady, Chennai 600001.  Phone No.044-25215363, 25250092.  E.mail  umapathippagam@rediffmail.com

அன்பர்கள் வாசித்து பயனடைய வேண்டுகிறோம்.


முருகா  சரணம் 

1 comment:

  1. The back ground about Sri V.S. Krishnan and his book "Thiruppugazh Glori to Lord Muruga" is quite informative!

    ReplyDelete