Saturday 14 June 2014

காற்றினிலே வரும் திருப்புகழ் கீதம்

மெய்ஞ்ஞானமும்  விஞ்ஞானமும் என்றதலைப்பில் நாம் பல கருத்தரங்குகள் ,பட்டிமன்றம் கேட்டிருக்கிறோம்.மெய்ஞானத்துக்கு விஞ்ஞானம் பல விதங்களில் துணை போவதாக முடிப்பார்கள். உண்மைதான் இன்று நாம் வீட்டிலிருந்தபடியே பல கோயில்கள் தரிசனம் செய்கிறோம்.பல ஆன்மீக நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கிறோம். அதற்கு CD DVD ,VEDIO ,U TUBE போன்ற சாதனங்கள் பெருமளவில் கைகொடுக்கின்றன.

இதற்கு நம் அமைப்பு விதி விலக்கல்ல.குருஜியின் பாடல்கள் ஒலி  நாடா  வடிவில் வந்தன.பின் வழிபாடுகள் CD ,u tube வடிவில் வலம்  வருகின்றன.குருஜியின் பாடல்கள் கௌமாரம்  வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.இவற்றுக்கெல்லாம் காரணம் முற்போக்கு சிந்தனையுள்ள பல அன்பர்கள் நம்மிடையே உள்ளதுதான்.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ,அண்மையில்  SKIPE  தொழில் நுட்ப சாதனை மூலமாக திருப்புககழ் வகுப்புக்கள்  நடை பெற்று  வருவதாக  அறிகிறோம்.புனே நகர் ஆசிரியர் இடம் பெயர்ந்த போது  ,தொடர்ந்து வகுப்புக்கள் இதன் மூலம் நடை பெற்றன.அது போல் திருவனந்தபுரம்  ஆசிரிய தம்பதிகள் மும்பைக்கு இட மாற்றம் செய்தபோது.,வகுப்புக்கள் தொடர்ந்து இதன் மூலம் இன்றும் நடைபெற்று வருகின்றன அந்த தம்பதிகள்  S.R.சுப்ரமணியம், சுப்பலக்ஷ்மி மாமி தான்.அவர்களை பற்றி அன்பர்கள் நன்கு அறிவார்கள்.இதன் வெற்றிக்கு காரணம் ஆசியர்கள்/மாணவர்களி ன் பரஸ்பர அன்பும் மரியாதையும் தான் என்று கூறத்தேவையில்லை.

இந்த காற்றினிலே உலா வரும் திருப்புகழ் வகுப்பை பற்றி HINDU ( திருவனந்தபுரம் பதிப்பு )பத்திரிகை அருமையாக பாராட்டி எழுதியுள்ளது.அதன் link கீழே: 



விஞ்ஞான சாதனைகளை தம் குறிக்கோளுக்கு முடிந்த அளவு பயன்படுத்தி வெற்றி பெறுவதை  பாராட்டி உற்சாக படுத்த வேண்டியது நம் கடமை. மற்ற ஆசிரியர்களும் இதை பின்பற்றி செயல் படுத்தினால்  புற நகர் /கிராம த்தில் வசிக்கும் அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்

No comments:

Post a Comment