Saturday 29 September 2012

அன்பர் முரளிக்கு கண்ணீர் அஞ்சலி...



அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகளை அளித்து வந்த நாங்கள் மிகவும் துக்ககரமான ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

Thana  அன்பர்    முரளி கோபாலகிருஷ்ணன்  சில நாட்கள் நோய்வாய்பட்டபின்  26-09-12 அன்று  முருகப்பெருமானின் திருவடியை  சென்று அடைந்தார்.அவருக்கு வயது 41. அன்பர் முரளி மும்பை  திருப்புகழ் அன்பர்களுக்கு நன்கு பிரபலமானவர்.புனே வில் உள்ள Dehu Road  முருகன்  ஆலயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் 25 தேதி நடைபெறும்  வழிபாடு நிகழ்ச்சிக்கு மூல காரணமானவர்.அன்பர்களை புனேக்கு அழைத்துசென்று,வசதியுடன் தங்க வைத்து  வழிபாட்டை சிறப்பாக நடத்துவதையே தம் தொண்டாக கருதினார்.அவர் குடும்பத்தினரும் சிரத்தையுடன் ஈடு பட்டுள்ளனர்.

முரளியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்று அன்பர்கள் தடுமாறுகிறார்கள்.ஆழ்ந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை  BLOG சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் இழப்பைத் தாங்கும் சக்தியையும் அளிக்க முருகப்பெருமானைப்  பிரார்த்திக்கிறோம்.

6 comments:

  1. We pray for the noble soul to rest in peace..

    ReplyDelete
  2. அன்பர் முரளி எங்கள் வீட்டில் நடக்கும் மணி சார் கற்பிக்கும் வகுப்பின் மாணவர் .என்னதான் சாருடன் நெருக்கமாக இருந்தாலும் வகுப்பில் மாணவர்தான்.கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார்.கூடுமானவரை சாரை தன் காரில் அழைத்துவந்து வகுப்பு முடிந்தவுடன் அழைத்து செல்வார்.வழியில் அன்பர்களைப்பார்த்தால் அவர்களையும் அழைத்து அவர்கள் இல்லத்துக்கு சென்று விட்டு விட்டுத்தான் தம் வேலையை கவனிப்பார்.பண்பாளர்.சமபுத்தியும் ,சமநோக்கும் உள்ளவர்.ஒரே அளவு கோள்.திருப்புகழ் அன்பர்கள் என்பதுதான்.சொல்லிக்கொண்டேபோகலாம்.

    செய்தி கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன் .நம்பமுடியவில்லை.என்ன செய்வது என்று தடுமாற்றம்.முடிந்த அளவு அன்பர்களுக்கு தெரிவித்தவுடன் சிலஅன்பர்களுடன் விரைந்தேன்.அவர் இல்லத்தை அடைந்தவுடன்.நாங்கள் அடைந்த மன நிலை அளவிடமுடியாதது.யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்ற நிலை,பாலு சார் /மாமி/மணி சார் கூட அன்பர்கள் அநுபூதி பாடினார்கள்..இடையில் பலர் மனம் உடைந்தனர்.இன்னும் மனது நிலை இல்லாமல் தவிக்கிறது.என் பெயர் கொண்ட மற்ற அன்பரும் இதே நிலையில் உள்ளார்.

    பாலு சார்/மணி சார் வகுப்புக்கள் வழிபாடாக அனுசரிக்கப்பட்டன. .முரளிக்கு பிடித்தமான சுவாமிமலை,கதிர்காமம் ,திருஅண்ணாமலை பைரவியில் அமைந்த பாடல்கள்.பாடினோம்.மணி சார் .முரளியுடன் கூடிய நட்பையும் சில நிகழ்சிகளையும் நினைவு கூர்ந்தார்.பல முருக பக்தர்கள் ,அறுபடை வீடுகள் மற்ற தலங்களுக்கு செல்ல விரும்பும் பொது ,நம் முரளி இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வழிபட விரும்பியதையும் தன்னையும் அழைத்துசென்று வழிபட்டதையும் நினைவு கூர்ந்தார்.நாங்கள் முரளி அமர்ந்திருக்கும் இடத்தை அடிக்கடி பார்த்து ,முரளி கூட இருப்பதாகவே உணர்ந்தோம்.ஒவ்வொரு வகுப்பிலும் உணர்வோம்.என்னால் தொடரமுடியவில்லை.

    முருகன் சந்நிதானத்தில் உள் ள முரளி தனக்கு இணையான பல முரளிகளை உருவாக்கி நம்மிடம் அனுப்புவார் என்ற நம்பிக்கையுடன் ......

    சு.வெங்கடராமன் .செம்பூர்.மும்பை.

    ReplyDelete
  3. நான் dec 2011 முதல் வாரத்தில் இரண்டு முறை மருத்துவ மனையில் இருந்து வெளி வந்து சில நாட்களே ஆகி இருந்தன.புனே வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் நடை பெற்ற சமயம்.வழக்கம் போல் நான் முதலில் பெயர் கொடுத்தேன்.முரளி நீங்கள் வரக்கூடாது என்று மறுத்தார்.நான் முரண்டு பிடித்தேன்.நடக்கவில்லை.மணி சாரும் எனக்கு நல்ல விதமாக சொன்னவுடன் பின்வாங்கினேன்.முரளி அன்பர்கள் மேல் வைத்த அக்கறைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.இப்போது நினைத்தாலும் கண் கள் குளமாகின்றன.

    சு.வெங்கடராமன் .செம்பூர்.மும்பை.

    ReplyDelete
  4. It is indeed very pathetic that a person so young should pass away. Lord Murga whose feet Murali has attained will definitely help the family with all the strength to tide over this great tragedy. We all can only pray for him and the family.

    -Brindha Karthikeyan

    ReplyDelete
  5. we really feel sorry to hear the bad news about MURALI. His involvement for dec 25 is unforgettable.We dont know how we are going to fill the gap of murali. Myself and few anbargals from Pune had come to Thane to console their parents.

    On behalf of Pune Anbargals i convey my condolence to all the anbargals of Bombay region because we are all one family.[the family of Love and bakthi] I request you to convey this through your website.He was a good mediator, coordinator and organizer between the anbargal of pune and Bombay.i really pray god that he should reach the lotus feet of the chembur murugan and also his family should get the strength from all angals.

    -Dharini

    ReplyDelete
  6. Muruga saranam,
    Yesterday evening I was talking to Balu sir Mami
    At that time she mentioned about Shri. Murali.
    I was terrible shocked and moved on HIS demise.
    My mind goes to HIS wife and children
    I am praying for HIM.
    THE LORD OF THIRUPPUGAZH WILL CERTAINLY TAKE CARE OF MURALI"S FAMILY
    Kindly convey my deepest condolences to the bereaved family.

    -P Ayappan

    ReplyDelete