Sunday 19 August 2012

Editorial on Arunagiryar Ninaivu Vizha dated 15.08.2012

வணக்கம் அன்பர்களே!

அருணகிரியார் நினைவு விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் இன்னும் அதன் நினைவாகவே பரவசத்தில் திளைத்துகொண்டு  இருப்பார்கள் என்பது திண்ணம். பல ஆண்டுகளாக சுதந்திரதினத்தன்று விழா ஏற்பாடு செய்வதன் நோக்கம் அன்று எல்லோர்க்கும் விடுமுறை தினம் என்பதுதான். அதனால் அன்பர்கள் யாவரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு முருகன் பெறவேண்டும் என்பதுதான். கலந்துகொண்ட அன்பர்கள் பாக்கியசாலிகள். 

திருசெம்பூர் முருகன் ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய விழா, 108 திருப்புகழ் பாடல்களுடன் மதியம் 1.30 மணி அளவில் முடிவடைந்தது. 

மும்பையின் பல பகுதிகளில் இருந்து அன்பர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். முக்கியமாக குறிப்பிட விரும்புவது புனாவில் இருந்து 20 அன்பர்கள் கலந்துகொண்டார்கள்.

பூஜை விதிகளுடனும், குருவின் ஆசியுடனும் விழா இனிதே முடிந்தது.

சென்னையில் நம் குருஜியின் தலைமையில் இசை வழிபடு இனிதே நடைபெற்றது.

பெங்களூரில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் திருப்புகழ் பாக்களை சமர்ப்பித்தனர். அதில் மும்பையில் இருந்து திருமதி வித்யா ஸ்ரீராம் தனது இளம் வயது மாணவர்களுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முதன் முறையாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


மும்பை நிகழ்ச்சியின் புகைப்படங்களை அன்பர்களின் கண்களுக்கு விருந்தாக இணைத்துள்ளோம் .



























































































No comments:

Post a Comment