Sunday 10 June 2012

வைகாசி விசாக வைபவம்

 வழக்கம் போல் வைகாசி விசாகம் செம்பூர் சிருங்கேரி மட வளாகத்தில் 030.6.12  அன்று அதி விமரிசையாக நடை பெற்றது.மும்பையின் பல பகுதியிலிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

விநாயகர் பூஜை, ஷண்முக சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து அன்பர்களின் இசை வழிபாடு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது, அதில் பல அன்பர்கள் மெய்யுருகி பரமானந்த நிலையில் மூழ்கியதை கண் கூடாக பார்க்கமுடிந்தது.

முடிவில் நேருல் அன்பர் திரு .ராமகிருஷ்ணன் கந்தர் அந்தாதியின் பொருள் விளக்கங்கள் அடங்கிய தம் படைப்பை நூல் வடிவத்தில் முருகப்பெருமானின் பாதக்கமலத்தில் சமர்ப்பித்து பெருமானின் அருளையும் அன்பர்களின் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றார் .நூலின் முதல் பிரதியை ராஜி மாமி பெற்றுக்கொண்டார். அன்பர் ராம கிருஷ்ணன் தம் படைப்புக்களை இதுபோல் வழிபாடுகளின்போது வெளியிடுவதை மரபாக கொண்டுள்ளார். அவரது அடுத்த படைப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.அது போல் அவர் நம்முடைய இந்த மின் தல அமைப்புக்கும் தம் அறிய கட்டுரைகளையும் அளிக்க வேண்டுகிறோம், எதிர்பார்க்கிறோம்.

அன்பர்களின் அடுத்த வழிபாடு ஆனி மூலம் அன்று (3rd July 2012)  (அருணகியாரின் அவதார தினம்) முலுண்ட் வாணி வித்யாலயவில் நடைபெற உள்ளது.     

No comments:

Post a Comment