Friday, 9 October 2015















naattaikurunji
darbari kanada

                                                                         

sinthubairavi
                                                                 
unai

                                                                         

                                                                                                               

Thursday, 24 September 2015




                                                                             


பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்  ஜீவன் முக்தி அடைந்துள்ள தருணத்தில் நினைவுகள் பின் நோக்கி செல்கின்றன.ஆன்மிகம்,சமூக சேவை ,கல்விப்பணி முதலியவற்றில் சிகரமாக விளங்கிய அந்த மகான் ,திருப்புகழிலும் ஈடுபாடு உள்ளவர் என்றும்,நம் குருஜியின் பால் எவ்வளவு அன்பும் பெரு மதிப்பும் வைத்திருந்தார் என்பது 2013 ல்சென்னையில் நம் அமைப்பின் ஆன்மீக விழாவை தொடங்கி வைத்து அருளுரை ஆற்றிய பொது வெளிப்பட்டது.

அனுக்ரஹ பாஷனையில் சுவாமி தயானந்த சரஸ்வதி ",நம்  குருஜியை 
முதற்கண் நினைவு கூர்வது நம் தலையாய கடமை" என்றும் "அவரது 
சேவை ஈடு இணையற்றது "என்றும்",சங்கீத மும்மூர்த்திகளுக்கு 
ஒப்பானவர்" என்றும் புகழாரம் சூட்டினார்.பின்னர்  ஆறுமுகம் ஆறுமுகம்
 என்று தொடங்கும் பாடலை சுட்டி காட்டி,அதில் 96 தத்துவங்கள் 
அடங்கியுள்ளது என்றார் எதிர்பாராதநிலையில் அந்த பாடலை பாட 
அழைத்தார். அருளாளர்கள்  சித்ரா முர்த்தியும்,,உமாபாலசுப்ரமணியமும்
 பாடிமகிழ்வித்தார்கள்

.சுவாமிகளின் உரையை விரிவாக கேட்போம்.



முருகா சரணம் 

குருமஹிமை இசை


                                                         
                                                            குருமஹிமை இசை 


இசைக்கு தேவையான ராகம் ,பல்லவி,நிரவல்,விருத்தம், ராகமாலிகை எல்லாம் நம் வழிபாடுகளில் உண்டு.கச்சேரி முறையில் முன்னோடியாக ராகம் சமீபத்தில் தான் இடம் பெற்றது.அதற்கு முன்னால் விருத்தம் தான் ராகத்தின் இடத்தை பிடித்திருந்தது.பண்ணிசை,பஜனை முறைகளிலும் இன்றும் பின்பற்றப்படுகிறது.நம் வழிபாட்டில்,விருத்தம்,பாடல்,நிரவல்,நாமாவளி,அர்ச்சனை,தூபம்,தீபம்,நைவேத்யம்,ஆர்த்தி .அருள் வேண்டல் எல்லாவற்றிலும்  ராக மயம் தான்.

குருஜி ,அலங்காரம்,அனுபூதியைத்தவிர திருப்புகழ் பாடல்களையே விருத்தமாக பாடி அன்பர்களின் மனத்தை உருக்கி,இறைவன் சந்நிதானத்துக்கு கொண்டு சென்றார்.மனம் கலங்காதவர்கள்,கண்ணீர் சிந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அடுத்து பாடல்கள்.111ராகங்களுக்கு மேல் அமைந்துள்ளது.ஒரே ராகத்தில் பல பாடல்கள்.ஆனால்,ஒவ்வொன்றும் தனித்தனி மெட்டு.மற்றும்,ஆரம்பம்,முடிவு,ராகபாவம்,சாகித்ய பாவம்,சஞ்சாரங்கள் முற்றிலும் மாறுபட்டவை.ஒரு பாட்டு போல் மற்றது கிடையாது.அதற்கு மாறாக ஒரே பாடல் இரண்டு மூன்று ராகங்களில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு அம்சம்.யாவும் சந்தங்களுக்கும்,தாளத்துக்கும்,கால பிரமானத்துக்கும் கட்டுப்பட்டவை.

மும்மூர்த்திகளுக்கு முன்னால் தமிழ் இசை தான் இருந்தது.பலவிதமான அரசியல் சூழ் நிலை காரணமாக அது பின் தள்ளப்பட்டது.ஊத்துக்காடு வேங்கட கவி,மாரிமுத்தாபிள்ளை,அருணாச்சல கவி ,கோபால கிருஷ்ண பாரதியார் போன்றவர்களின் பாடல்கள் மிக எளிமையானவை.மக்கள் வழக்கு மொழியில் அமைந்தது.அப்பாடல்களுக்கு இசை அமைத்து மக்களை கவர்ந்தது மிக சுலபமாக இருந்தது.

ஆனால் திருப்புகழ் பண்டித மொழியில் அமைந்தவை.வேதங்கள் ,உபநிஷத்,யோகா சாதனை,தத்துவங்கள் போன்ற ஒப்பற்ற கருத்துக்களை உள்ளடிக்கிய கடினமான மொழியில் அமைந்தவை. பாடல்கள் நீளமானவை.அத்தகைய பாடல்களுக்கு சர்வ இலகுவாக இசை அமைத்து,சந்தம்,தாளம்,ராக பாவம்,பொருள் சிதைவு இல்லாமல் அன்பர்களை பாட வைத்தது எப்படி சாத்தியம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சங்கீத பயிற்சியில் தேர்வு பெற குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.ராகம் பிடிபடாத ஒன்று.ஆனால் நம் அன்பர்கள் இவற்றை எல்லாம் குறுகிய கால அளவில் அடைந்ததற்கு ஒரே காரணம் இறைவனிடம் ,குருவிடமும் சரணடைந்ததுதான்.

மற்றும் சங்கீத உலகில்பலபாடாந்திரங்கள்.அதுதவிரஅரியக்குடி,செம்மங்குடி,மகாராஜபுரம் போன்ற பல பாணிகள் வேறு.தேர்ந்த பயிற்சிக்குப்பின் பாடுபவர்கள் சிலரே.மற்றவர்கள் ரசிகர்கள் .பல திருப்புகழ் அமைப்புகளிலும் இவைகள் எல்லாம் உண்டு.

ஆனால் இங்கு ஒரே பாணிதான்.குருஜியின் பாணி.அன்பர்கள் எல்லோரும் பாடகர்கள்.மற்றும் அன்பர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வழிபாடுகளில் த்யாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப்போல் ஒரே குரலில் பாடுவது இறைவன் அளித்த வரம்.வழிபாட்டில் சங்கீதத்தில் கரை கண்டவர்கள் பாடும் போது மற்றவர்களுடன் சேர்ந்து ,ஏன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் ,அவர்களுடன் சாதாரண மாக பாடுவதும் விவரிக்க முடியாத அதிசயம்.

மேடைக்கச்சேரி நடந்து கொண்டிருக்கும் .பாடகர் பாடும் ராகம் பிடிபடவில்லை.நண்பர்கள் இருவரில் ஒருவர் பந்துவராளி என்று கூறுவார் .மற்றவர் இல்லை இல்லை பூர்விகல்யாணி என்பார்.சர்ச்சை வளர்ந்து போட்டி யை எட்டும்.ஆலாபனை முடிந்து கீர்த்தனை ஆரம்பித்தவுடன் ராகம் பந்துவராளி என்று வெளிப்படும்.சரியாக கணித்த நண்பர் "நான் அப்பவே சொன்னேன் இல்லையா"என்று காலரை தூக்கி விட்டுக்கொள்வார்.மற்றவர்எதோ அவமானப்பட்டவர் போல் ,அவரிடம் பேச மாட்டார்.மறுநாள் நண்பர் பக்கத்தில் அமர மாட்டார்.

இந்த வம்பெல்லாம் இங்கு கிடையாது.பந்துவராளி பந்துவரளிதான் .பூர்வி கல்யாணி பூர்வி கல்யாணிதான்.அதுபோல் ஆபோகி ஆபோகி தான்.ஸ்ரீரஞ்சனி ஸ்ரீரஞ்சனி தான் .எந்த சந்தேகமும் கிடையாது.நல்ல சங்கீத ஞானம் உள்ளவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.

இப்படியே பேசிக்கொண்டும்,எழுதிக் கொண்டும் இருந்தால் இசையை எப்படி அனுபவிப்பது?வழிபாடுகளில் அதிகம் இடம் பெறும் பாடல்கள் அன்பர்கள் மனதில் என்றும் குடிகொண்டவை.அதிகம் இடம் பெறாத பாடல்கள் பல .அவற்றை  பகிர்ந்து கொள்ளும்நோக்கோடு  ஒரே ராகத்தில் அமைந்த சில பாடல்களை வெளியிட விரும்புகிறோம்.

முதலில் பந்துவராளி ராகம்.



                                                              படர் புவியின்.


                                                                   குழவியும்


                                                                                   

                                                                             

                                                                        பூமாதுர

                                                                               

                                                                   திமிரமாமண

                                                                                   
                                                                                         
                                                                                 
தொடரும் 

முருகா சரணம் 
                                                                               

                                                                             


                                                                            

Tuesday, 22 September 2015

குருமஹிமை இசை



                                                                  குருமஹிமை   இசை 
                                                                                         
                                 
                                                 

                                                          

இசை என்றால் தமிழில் புகழ் என்று ஒரு பொருளும் உண்டு .திருப்புகழ் இசை என்றால் திருப்புகழை புகழ்ந்து பாடுவது என்ற பொருள் தானாகவே வெளிப்படுவதும் ஓர் அதிசயமே.

குருஜியின்இசையைஎப்படிஆரம்பிப்பதுஎப்படிதொடர்வதுஎன்றபயத்துடனும்,குழப்பத்துடனும் தவித்தபோது,வழக்கம்போல்அருளாளர் ஐயப்பன் தோன்றுகிறார்.மனம் திறந்த நிலையில் அவரது கூற்றைப் பார்ப்போம்.

"நாயேனுக்கு திருப்புகழின் மேல் நாட்டம் வருவதற்கு மூலகாரணம் நமது குருஜி அதற்கு அமைத்துப் பாடிய ராகங்களே. கேட்கக் கேட்கக் தெவிட்டாதவைகள் அவைகள். அரி அயன் அறியாதவர் எனும் வடுகூர் திருப்புகழ் ரேவதி ராகத்தில் நமது குருஜி சொல்லிக்கொடுத்த உடன் நாயேனுக்கு திருப்புகழின் மேல் நாட்டம் வருவதற்கு மூலகாரணம் நமது குருஜி அதற்கு அமைத்துப் பாடிய ராகங்களே. கேட்கக் கேட்கக் தெவிட்டாதவைகள் அவைகள். அரி அயன் அறியாதவர் எனும் வடுகூர் திருப்புகழ் ரேவதி ராகத்தில் நமது குருஜி சொல்லிக்கொடுத்துள்ளபடி நாம் பாடி வருகிறோம் நாம் . அந்தப்பாட்டு நாயேனை என்னவோ செய்து விட்டது."

மற்றொரு அன்பரும்  அதே நிலையில் தான் வந்து சேர்ந்தார் அவர் கர்நாடக இசையை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பைத்தியம் போல் நாயாய்,பேயாய் அலைந்து திரிந்து தன்இசை ஞானத்தை வளர்த்ததாக எண்ணத்துடன் தான்  இருந்தார்.சென்னையில் நடைபெறும் இசைவிழாவுக்கு ஆண்டுதோறும் 20நாட்களுக்கு மேல் ,சோறு தண்ணி இல்லாமல் நாள் பூராவும் அலைந்து பல சபாக்களின் நிகழ்சியில் கலந்துகொள்வார்.அவருடைய அலுவலக  leave,பணம் இதிலேயே செலவாயிற்று.இருப்பினும் தாகம் அடங்க வில்லை.அந்நிலையில் அந்த நாளும் வந்தது.ஆம் திருப்புகழ் இசை வழிபாடு தான்.அக்கணமே  தான் இதுவரை அன்பவித்திராத தெய்வீக இசையைக் கண்டார்.புதிய உலகத்தை தரிசித்தார்.மேடைக் கச்சேரி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.அலுவலக ஓய்வுக்குப்பின் முழுவீச்சில் ஈடுபட்டார்..இதைப்போல் இன்று பழுத்த பழமாய் விளங்கும் பெரும்பாலான அன்பர்கள் இணைந்ததற்கும் இசையே காரணம் என்று அடித்துச்சொல்ல முடியும்.

"திருப்புகழ் அன்பர்கள்  பாடி வரும் ராகங்கள் எல்லாம் ஆண்டவனால் உணர்த்தப்பட்டவை அல்லாது தனிப்பட்ட ஒருவரால் அமைக்கப்பட்டவை அல்ல"
இந்த வாக்கியம் வழிபாடு புத்தகத்தில் முன்னுரையில் இடம் பெற்றுள்ளது.ஆம்.குருஜியே செந்திலாண்டவன் தான் பாடல்களுக்கு இசை அமைத்ததாக கூறுகிறார்.அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.111 ராகங்களில்,ராகமாலிகையில்,503 திருப்புகழ்,திருவகுப்பு 12,வேல மயில்,சேவல் விருத்தம் 34,கந்தர் அநுபூதி .அபிராமி அந்தாதி,பதிகம் முதலியவற்றை அமைத்தது ஓர் அசாதாரண செயல் என்று எல்லோரும் உணருகிறோம்.பல கன ராகங்கள்,குமுதக்க்ரியா,துர்கா தேனுக,நவரசகானடா,மணிரங்கு,லலிதா,விஜயநாகிரி,ஹம்சநாதம்,ஹம்ச வினோதினி போன்றஅபூர்வராகங்கள்,சந்திரகௌனஸ்,தேஷ்,த்விஜாவந்தி,பெஹாக்,ஹமீர் கல்யாணி,ஹிந்தோளம் போன்ற ஹிந்துஸ்தானி ராகங்கள் இடம் பெற்றுள்ளது ஓர் அதிசயம்.அற்புதம்.மேடை கச்சேரியில் துக்கடா நிலையில் இடம் பெற்றுள்ள சிந்துபைரவியில் சித்து விளையாட்டு.சிந்து பைரவியில் இது மாதிரி வேலைப்பாடுகள் எங்கும் கிடையாது என்பதுதான் உண்மை.அதேபோல் பெஹாக் ராகம்.

மற்றும் ஒரே பாடல் இரண்டு ராகங்களில்.ராகமாலிகை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அளவே இல்லை.

இத்தகைய தெய்வீக சக்தியால் ,இசை நோக்கோடு அன்பர்கள் திருக்கூட்டத்தில் ஆட்கொள்ளப்பட்ட அன்பர்கள் வந்த பின் என்ன ஆயிற்று?

அன்பர்கள் துவக்கத்தில்நம்  திருப்புகழ் இசையின் ஓசை நயத்தாலும் ,சொல் வளத்தினாலும் மட்டுமே கவரப்பட்டு வந்தனர்.ஆனால் திருப்புகழில் ஆழமாக செல்ல செல்ல வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,காவியங்கள் போன்றவை அனைத்தின் சாரத்தையுமே அவை தம்முள் அடக்கி வைத்திருந்தன என்று கண்டு கொண்டனர்.குழந்தை ஒன்று அரிச்சுவடியில் ஆரம்பித்து படிப்படியாக மேலேறி உலகம் போற்றும் விஞ்ஞானியாக பரினமிப்பதைப்போன்று அன்பர்கள் அருணகிரியாரின் அறிய தத்துவங்களை ஜீவாதாரமாகக் கொண்டு தம் வாழ்க்கையின் பல படிகளைக் கடந்து இன்று மிக மிக உன்னதமான நிலையை அடைந்துள்ளனர் என்பாதை கண்கூடாக காண்கிறோம்.இவையெல்லாம் பெருமானின் கருனையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

பிரபல வித்வான்கள் தேவகோட்டை சுந்தரராஜ ஐயங்கார்,நட்டுவனார் சிக்கல் ராமஸ்வாமி பிள்ளை அவர்களும் குருஜியுடன் இணைந்து சந்தங்களை ஆய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.மிருதங்க வித்வான் ராமநாதபுரம் ஈஸ்வர ஐயர் ,ஹார்மோனியம் நிபுணர் கே.பி.நாராயணன் அவர்களும் தம் இறுதி காலம் வரை யில் குருஜியின் தொண்டுக்கு பக்க பலமாக இருந்தனர். அன்று சங்கீத உலகத்தை தம் பொறி பறக்கும் விமர்சனங்களினால் கலக்கிய சுப்புடு நம் வழிபாடுகளில் பெட்டிப்பாம்பு.குருஜிக்கு அனுசரணையாக ஹார்மோனியம் வாசித்தார்.

குருஜியின் அந்த கால வழிபாடுகளில் இந்த கூட்டணியின் தெய்வகானத்தை அனுபவித்தவர்கள் பாக்யசாலிகள்.அதிர்ஷ்ட வசமாக அவை திருப்புகழ் நவமணி குறுந்தகடுகளில் இடம் பெற்றுள்ளது நம் பாக்கியம்.

தொடர்வதற்கு முன்  சந்திர கௌன்ஸ் ராகத்தில் அமைந்துள்ள மூன்று பாடல்களை கேட்போம். பஜனைகளில் எப்போதாவது இடம் பெறும்அல்லது கச்சேரிகளில் ராகமாலிகையில் மெல்லிசை பாணியில் இடம் பெறும் இந்த ராக ம் எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதை அனுபவித்தால் தான் உணர முடியும்.



                                                                        தாரணி 


அழுதும் 



                                                       கொடிய மறலியும் 
                                                                                             https://www.youtube.com/watchv=VRjhfgjnbi0&hd=1

தொடரும் 

முருகா சரணம் 


                                                                                

Wednesday, 16 September 2015

குரு மகிமை பழனி வள்ளி கல்யாணம்



                                                                       குரு மகிமை

                                                      பழனி வள்ளி கல்யாணம்  



                                                                                  
                     
                                                                                   

                                                                                     
                                           
        


வள்ளி கல்யாணம் இப்போது பஜனை சம்ப்ரதாயத்துடன் கூட நடைபெற்று வருகிறது.அதில் பாகவதர்கள் தங்கள் வசதிப்படி சீதா கல்யாணம் போல் முத்து குத்துதல் போன்ற நிகழ்சிகளுடன் நடத்துகிறார்கள் .அது பாட்டுக்கு நடக்கட்டும்.

நம் குருஜி அமைத்துள்ள வள்ளி கல்யாண முறையில் எந்த விதமான ஆடம்பரமும் கிடையாது.அருணகிரியாரின் நவமணிகளாகத்திகழும் ஒன்பது நூல்களிலிருந்து தொடுக்கப்பட்ட பாமாலைகளால் மட்டும்  நிகழ்த்தப்படும் வைபவம் .கல்யாணத்தில் கீழ்க்கண்ட எல்லா நிகழ்ச்சிகளும் இடம் பெறும்

முருகனை அழைத்தல்
அறிமுகம்
மாலை மாற்றல்
ஊஞ்சல்
கன்னிகாதானம்
கூறை அளித்தல்
மாங்கல்ய தாரணம்
சப்தபதி
ஆசிர்வாதம்
வள்ளி தேவ சமேதராக முருகன் கொலு வீற்றிருத்தல்
பூஜா விதிகள்
கீதம்
வாத்யம் நிருத்தியம்
ஆரத்தி
கூட்டு பிரார்த்தனை
சாந்தி கீதம்

எல்லாம் அருணகிரியாரின் படைப்பிலிருந்துதான்.

இதை கடைப்பிடித்து அன்பர்கள் இன்றும் வள்ளிகல்யாணத்தை நடத்தி வருகிறார்கள்.

குருஜியின் தலைமையில் பழனியில் 19.7.2004அன்று நடந்த வள்ளி கல்யாண ம் ஒரு பொன்னான வைபவம் ,நாட்டின் பல பாகங்களிலிருந்த 2500அன்பர்கள் கலந்து கொண்டது ஒரு சரித்திரம்.திருமண மண்டபத்தை கட்டியவர் முதன் முதலாக வள்ளி கல்யாண வைபவம் தன் மண்டபத்தில் தான் நடைபெற வேண்டும் என்ற பேராவலுடன் சமர்ப்பித்து முருகன் அருள் பெற்றார்.அறுபடை வீடுகளிலிருந்து வந்த பிரசாதங்கள் அந்தந்த படை வீடுகளின் பாடல்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன.வைபவம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது.கலந்துகொண்ட அன்பர்கள் மகா பாக்யசாலிகள்.பல காரணங்களால் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு கை கொடுக்கிறார் அருளாளர் ஐயப்பன்.

கீழ்க்கண்ட UTUBE குறியீடுகள்  மூலம் 

பழனி வள்ளி கல்யாணம்    பகுதி  1



பழனி வள்ளி கல்யாணம்    பகுதி   2 


பழனி வள்ளி கல்யாணம்    பகுதி   3



பழனி வள்ளி கல்யாணம்    பகுதி  4

https://youtu.be/NGBANidcu_8


முருகா சரணம் 

குரு மகிமை தொடரும் 









Monday, 14 September 2015

குரு மஹிமை இளமைக்காலம் ,பட்டம்

                                                     

                                                                                                              
                                                              குருமஹிமை.

குருஜியின் இளமைக்காலம் பற்றி குடும்பத்தினருக்கும்,நெருங்கியு நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.நமக்கு கை கொடுக்கும் அருளாளர் ஐயப்பன்  இருக்கும் பொது ஏன்ஆதங்கம்  கீழ்க்கண்ட குறியீட்டில் பார்ப்போம்.

குருஜியின் திருமண வைபவம் 

https://www.youtube.com/watch?v=78rPj6Hn9Ss&hd=1


மற்றொரு தொகுப்பு.


                                                                                           

அன்பர்களில் பலருக்கு மற்றுமொரு ஆதங்கம்.நம் குருஜிக்கு மத்ய அரசின் பத்ம விருது,மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகள் வந்து அடைய வில்லையே என்று.நெருங்கிய அன்பர்கள் ஒருவருக்கொருவர் அதை வெளிப்படுத்தியும் உள்ளனர்.அந்த மாயா உலகத்தைப்பற்றி உணர்ந்த அன்பர்கள் அத்தகைய அரசியல் விருதுகள்  நம் குருஜியை வந்து அடையாததே குருஜியின் மகத்துவம் என்று மனத்தெளிவுடன்  உள்ளனர்.

சிருங்கேரி பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் அருளுடன் வழங்கிய
"திருப்புகழ் தொண்டன் "என்ற பட்டமே உயர்ந்தது என்று கருதியவர் குருஜி அதுபோல் சிவானந்தா ஆஷ்ரமம் சிதாநன்தஜி மகாராஜ் அளித்துள்ள " பக்த ரத்னா "என்ற பட்டத்தையும் பக்தியுடன் ஏற்றுக்கொண்டார்.இவ்விரண்டும் மகான்களால் பிரசாதமாக வழங்கப்பட்ட துதான் காரணம்.

அன்பர்களால் சமர்பிக்கப்பட்ட ஒரு பட்டமும் உண்டு.அதுதான் "குகஸ்ரீ "பழனியில் 18.7.2004 அன்று நடைபெற்ற  "வள்ளி க்கல்யாணம்" வைபவம் முதல் நாள்  மாணிக்கவாசகர் பரம்பரையில் வந்த கூனம் பட்டி பீடாதிபதி தவத்திரு நடராஜ சிவாச்சாரிய ஸ்வாமிகள் திருக்கரங்களினால் வழங்கப்பட்டது.ஆயிரக்கணக்கான அன்பர்கள் அக மகிழ்ந்தார்கள்.அது "திருப்புகழ் அன்பர்கள்" வரலாற்றில் ஒரு பொன்எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டிய தினம் .அதன் வீடியோ காட்சிகளை பார்க்கலாம்.


                                                             பீடாதிபதியின் வருகை.

                                                                                       

                                                                 பட்டம் பெற்ற  வைபவம்.

                                                                             
 பட்டத்தை ஏற்றுக்கொண்டபின் நம் குருஜி வழங்கிய ஏற்புரை                                                                                
https://www.youtube.com/watch?v=35CsV5NfGds&hd=1


முருகா சரணம் 

தொடரும்