Thursday 21 December 2017

வள்ளி கல்யாணம் நிறைவு



                                     வள்ளி கல்யாணம்  நிறைவு   

நிறைவு என்று பகர்வதில் மனம் ஒப்பவில்லை.அன்பர்கள் மனத்தில் "நிறைவு " என்ற பொருளில் தான்   நம் நினைவுகளை வெளிப்படுத்துகிறோம்.

வழிபாடுகளில் அன்பர்கள் தங்கள் நிலை மறந்து பெருமான் சன்னதியில் பய பக்தியோடு தவயோக நிஷ்டையில் அமர்வது கண் கூடு.

ஆனால்பெருமான்வள்ளிகல்யாணவைபவத்தில்அன்பர்கள்பெருமானையும்,வள்ளி பிராட்டியையும் நம்மில் ஒருவராக க்  கண்டார்கள்.பயம் மற்ற சப்ரதாயங்கள் ஒன்றும் கிடையாது.நெறிமுறைகள் தளர்ந்த நிலையில் பெருமானையும்பிராட்டியையும்தங்கள்குழைந்தையாகவும்,சிறுவர்களாகவும்   மணமக்களாகவும் உரிமையோடு சகஜ நிலையில் கண்டார்கள்  கொஞ்சினார்கள்.பாடினார்கள்.கூத்தாடினார்கள் .கும்மியடித்தார்கள்.கோலாட்டம் ஆடினார்கள் போற்றினார்கள்.   வாழ்த்தினார்கள்.பரவசமுற்றார்கள்.ஜீவாத்மா,பரமாத்மா தத்துவத்தின் படிஇணைந்தார்கள்.சரணடைந்தார்கள்.ஆனந்தம்,பேரானந்தம்,பரமானந்தம்,நித்தியானந்தம்,சச்சிதானந்தம் நிலையை அடைந்து திளைத்தார்கள்.

கலந்து கொண்ட அன்பர்கள் பாக்கியசாலிகள்.கலந்துகொள்ள இயலாதவர்கள் அதைவிட பாக்கியசாலிகள் என்ற வகையில் அருள் பிசாதமாக விழா அமைப்பாளர்கள் வைபவத்தை நம் கண்கள் குளிர  UTUBE வடிவத்தில் பாகங்களாக  நம் இல்லங்களுக்கு பெருமான், பிராட்டியை எழுந்தருளச் செய் துள்ளார்கள்.

வள்ளிகல்யாணம் ஒருநாள் மட்டும்தானா? நம் இல்லங்களிலில் என்றென்றும் கல்யாணம்தான்.மீண்டும் மீண்டும் காண்போம். அனுபவிப்போம்..   
                                                                                                   
குறியீடு 
                                                                                                                               






அன்பர் ஐயப்பன் குதூகலத்துடன் நன்றி நவில்கிறார்.நமக்காக பிரார்த்தனை செயகிறார்.

"செந்திலாதிபதி ஸ்ரீ சுவாமிநாதனாய்  தமது திருக்கல்யாண வைபவத்தை வரலாறு காணாத வகையில்  சுவாமி மலையில் நடத்திக் காட்டி  அங்கு வந்திருந்த  ஒவ்வொரு அன்பர்கள் மனதிலும் நிரந்தர பேரானந்தத்தை அருளினான் . அதை எண்ணும்  போதெல்லாம் அடியேன் மனம் பேரானந்தம் அடைகிறது. 

இவ்வளவு பெரிய வைபவம் நடக்க எத்தனை பேர் உதவினார்கள்?  எவ்வளவு அழகாக புஷ்ப அலங்காரம் செய்திருந்தார் அந்தக் கண்ணன் ? . அன்பர்கள் குடும்ப சகிதமாக உள்ளூர் , வெளியூர் , கனடா , அமேரிக்கா , லண்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்து பேரானந்தம் அடைந்தார்களே  இவர்களுக்கெல்லாம் எவ்வாறு நன்றி சொல்வது?. இந்த திருக்கல்யாணம் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடை பெற பொருளுதவி செய்து அது  செலவை விட ரூ 28386/- மிஞ்சும்  அளவிற்கு கொண்டு வந்த ( விபரம் நமது கூகிள் ட்ரைவ் சீட்டில் உள்ளது ) அவ்வளவு பேருக்கும் எப்படி  நன்றி சொல்ல     இயலும் ? . 

இதற்கு ஒரே வழி இது தான் .  இப்படி பிரார்த்தனை செய்வோம்.   அனைவருக்காகவும் , நமது குருஜியின் உபதேசத்தின் படி , நிறைய நிறைய திருப்புகழ் பாடுவோம் ஏகசித்த மனத்தோடு. 

கலியாண  சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோதா  !!!!! கவினாரு  புயத்தில் உலாவி களிகூரும்  உன்னைத் துணை தேடும் எல்லா அன்பர்களுக்கும் சகல  செல்வ யோக மிக்க பெருவாழ்வு  அருளி  , அவர்கள் நினைத்த காரியங்களை அனுகூலமே ஆக்கி , அவர்களை சுகப்படவே வை ஐயா !! அது உனக்கு கனமாகும் ஐயனே முருகா !!!!!        அருளாசிகள்  நல்கி உதவி புரிய வேணும் ஐயனே !!!!!!

முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்"

குரு மணி சார் தம் உரையில் "அன்பர்கள் எல்லோரும் உணவு அருந்திய பின் தான் நாங்கள் உணவு அருந்துவோம்  என்று கூறிய போது நம் நெஞ்சம் நெகிழ்ந்தது.கண்களில் நீர் கசிந்தது.அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்யும்  போது மனம் உருகும் நாம் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியது நம் தலையாய கடமை என்று உணர்வோம்.மீண்டும்  மீண்டும் பிராத்தனை செய்வோம்.மணிசார் கூறியதுபோல குருஜியின் வழி நடந்தால் மட்டும் போதுமானது.மனோலயம் தானே வரும்.

அடுத்து திருப்பரங்குன்றம் வள்ளி கல்யாண வைபவத்துக்கு நம்மை தயார் படுத்துவோம்.

முருகா சரணம் 

No comments:

Post a Comment