Tuesday, 27 September 2016

குரு மஹிமை .....இசை ..... குந்தலவராளி ..ராகம் ..1


                                                குரு மஹிமை .....இசை ..... குந்தலவராளி ..ராகம் ..1

                             


                                                      "திருமகளுலாவும் "  என்று தொடங்கும் பாடல்

                                                                                    கதிர்காமம் திருத்தலம்

கதிர்காமம் கோயில்  இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனானதுட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.
முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது
ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. கதிர்காம கந்தனின் பெயர் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

                                                                              பாடலின் பொருள் 

                                                                http://thiruppugazhamirutham.blogspot.in/2012/11/155.html


video
                                                                                                           

                                                "குடர் நிணம் என்பு "   என்று தொடங்கும் பாடல்

                                                                           திருச்செந்தூர் திருத்தலம்

                                                                                பாடலின் பொருளுக்கு 

                                             http://thiruppugazhamirutham.blogspot.in/2012/09/26_1.html

video
                                                                                                                                                                                                                     
                                              "கலகலென ச்சில "  என்று தொடங்கும் பாடல்

                                                                        திருவக்கரை  திருத்தலம்

                                                       http://temple.dinamalar.com/New.php?id=239

                                                                           பாடலின் பொருளுக்கு 

                                     http://thiruppugazhamirutham.blogspot.in/2014/06/262.html




video
                                                                                                         
                                                   "வாதினை  யடர்ந்த"  என்று தொடங்கும் பாடல்

                                                                          பழமுதிர்ச்சோலை திருத்தலம்

                                                                                    பாடலின் பொருள் 

                                                       http://www.kaumaram.com/thiru/nnt1318_u.html


video
                                                                                                           
"பாலோ தேனோ "  என்று தொடங்கும் பாடல் 

திருவாரூர் திருத்தலம் 

பாடலின் பொருள் 


                             http://thiruppugazhamirutham.blogspot.in/2014/06/267_24.h


                                           video
                                                                           

                                                                                   முருகா சரணம்                                

1 comment:

  1. சிந்தையை சிலிர்க்க வைக்கும் குந்தலவராளி ராகப் பாடல்கள்

    ReplyDelete