Friday 29 July 2016

ஆடி கிருத்திகை வைபவம் நிறைவு



                                               ஆடி கிருத்திகை  வைபவம்   நிறைவு 



ஆடி கிருத்திகை வழிபாடு  சிறப்புடன் நடந்தேறியது.மும்பையின் பல  பாகங்களிலிருந்து  அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து பெருமான் அருளை பெற்றனர்.நேருல் முருகன் ஆலய நிர்வாகிகள் பெரும் பேரு பெற்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.


சில புகைப்பட காட்சிகள் 

                                                                                                                                                                                                    
                                                                      
















இந்த சந்தர்ப்பத்தில் அருளாளர் அய்யப்பன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தை முருகனின் அழகை விவரிக்கும் பாடலையும் அதன் பொருளையும் குருஜி விருத்தத்தமாக பாடி மற்றும் அதன் பொருளையும் விளக்கும் ஒரு வீடியோ தயாரித்து அனுப்பியுள்ளார்.கேட்டு அனுபவிப்போம்.
     
அவர் அனுப்பியுள்ள செய்தி 


"இந்த வீடியோவின் பின்னணியில் நமது குருஜி அவர்கள் ஏதோ ஒரு அருணகிரி உற்சவத்தில் பாடிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. கார்த்திகை பெண்களால் வளர்கப்பட்ட முருகனின் அழகு விவரிக்க இயலாத் தன்மையது. நமது குருஜி இதை விருத்தமாகப்பாடி அவரே அதற்கான பொருளையும் கூறும் அழகு கேட்போரின்  ஊனையும் உயிரையும் உருக்கி விடுகிறது. இதோ அப்பாடல்

கமல மட மங்கை வதனத்து அழகு காண்பள் , கரிய முகில் வண்ணனும் செங்கண் அழகு காண்பன், 
        கலைவாணியும் சொல் அழகு காண்பள், முக்கண் தாதையும் 
விமல மிகு சொற்பொருளின் அழகு காண்பன், விதி வியன் கரத்தழகு காண்பன், 
        வீறு தோள் அழகு இந்திராணி காண்பள், உம்பர் வேந்து வேல் அழகு காண்பன், 
நிமல மல அடியர் அடி அழகு காண்பர், கவுரி நின்று பின்னழகு காண்பள், நின்னொத்த 
        ஆதித்தன் வடிவழகு காண்பன், ஒரு நீயும் அவருடன் குழுமியே 
அமல மின் நகை அழகு காணலாம் சமயம் ஈது அம்புலி ஆட வாவே
        கம்பை வளர் கந்தனுடன் அம்பிலீ ஆட வாவே


குறியீடு 



முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

1 comment:

  1. சம்சார சாகரத்தில் உழன்று சுழன்று வாடி வதங்கும் அன்பர்களை உய்விக்கும் ஆடி கிருத்திகை வைபவம் வழிபாடு!

    ReplyDelete