Monday 23 November 2015

குரு மகிமை இசை அமிர்த வர்ஷணி ராகம்


                                          குரு மகிமை இசை  அமிர்த வர்ஷணி ராகம் 

                                     "மகரகேதனத்தின்" என்று தொடங்கும் பாடல் 


                                                                                                       


                                           "குடிவாழ்க்கை " என்று தொடங்கும் பாடல் 


                                                                           

                                                          "எருவாய்  கருவாய் "

                                       என்றுதொடங்கும் திருவீழிமிழலை பாடல் 

 திருவீழிமிழலை மூலவர் வீழிநாதேஸ்வரர் பிறபெயர்.கல்யாண சுந்தரேஸ்வரர் 

அம்மன் சுந்தரகுசாம்பிகை பிறபெயர்.அழகியமாமுலையம்மை 
 தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்.மாவட்டம் திருவாரூர்

                                                             தல வரலாறு

 மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான்.அவர் பரமசிவனிடம் சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும் அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி.அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார்.ஒருநாள் சிவனின் திருவிளையாடலால் சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார்.

இந்த சம்பவத்தை அருணகிரி நாதர்  "படர்புவியின் " என்று தொடங்கும் திருசெந்தூர் பாடலில்  (33  /40) வெளிப்படுத்தியுள்ளார்.

அடல் பொருது பூசலே விளைந்திட ... (ஜலந்தராசுரனுடன்)
வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக ... அவனுடன் எதிர் நின்று போர் செய்ய
முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று
சேவித்து ... சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து
அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி ... மண்ணுலகில்
வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்த்ரன்
நொந்து வீழ ... கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான
ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்
ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என ... அவனுடைய உடலைப்
பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ... தாமரை
மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்
பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு ...
ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)
கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால ... அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*
மகா தேவருடைய குழந்தையே,


(இதனால் தான் கோயில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது.)

இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன் சலந்தரனை வதம் செய்து.சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்.

பார்வதி திருமணம் காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார்.இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.பெண்ணிற்கு திருமண வயது வந்ததும் இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.அப்போது முனிவர் என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்.அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால்.மாப்பள்ளை சுவாமி எனப்படுகிறார்.மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம் செண்பகம் பலா விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன.இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி அஷ்டமாசித்திகளை வழங்கினார்.வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது.இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

படிக்காசு சம்பந்தரும் நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர்.அப்போது பஞ்சம் ஏற்பட்டது.இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர்.இருவரது கனவிலும் தோன்றிய ஈசன் தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும் அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார்.அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும் மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து.அவர்கள் பசி போக்கினர்.இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார்

இங்கு பாதாள நந்தி உள்ளது.முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட வவ்வால் நந்தி மண்டபம் உள்ளது.சஷ்டியப்த பூர்த்தி திருமணங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.

                                                                     பாடல் 



                                                                             


                                              "சந்தம் புனைந்து "என்று தொடங்கும் பாடல் 



                                       

"                                                    "தரணிமிசை" என்று தொடங்கும் பாடல் 




                                                                     அருள் வேண்டல் 



                                                                  முருகா சரணம் 

1 comment:

  1. அமிர்த வர்ஷணி ராகப் பாடல்கள் அனைத்தும் அருமை. திருவீழிமிழலை தல வரலாறு திகட்டாத தித்திப்பு.; தெவிட்டாத செந்தேன்.

    ReplyDelete