Sunday 2 February 2014

திருப்புகழில் இளைய தலைமுறை

பொதுவாக நம் அன்பர்களிடையே இளைய தலைமுறை நம் அமைப்பில் ஈடுபடுவதில்லை. திருப்புகழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை  என்ற பெரும் கவலை நிலவி வருகிறது.எதிர் காலம் என்ன ஆகுமோ என்ற பயம் கூட உண்டு.ஆனால் காலம் தம் கடமையை மெளனமாக செய்துகொண்டுதான் வருகிறது. 

சங்கீத உலகில் இளைய தலை முறையினர் அதி அற்புதமாக இசை விருந்து அளித்து வருவதை நாம் கண் கூடாக பார்த்துவருகிறோம்.நம் அன்பர்கள் அமைப்பிலும் இளைய தலைமுறையினர் வியத்தகு முறையில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள்.பெங்களூரில் நடைபெற்ற பொன்விழாவில் அவர்கள் தனியாகவே வழிபாடு நடத்தி அன்பர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்.அண்மையில் சென்னையில் நடந்த  ஆன்மீக விழாவில் விருத்தங்கள் கூட பாடி ஒன்றரை மணி நேரம் வழிபாடு நடத்தினார்கள்.

சமீபத்தில் secundrabad-ல் நடந்த படி விழா  புகைப்படங்களில் பல இளம் தளிர்களை காண முடிகிறது.மும்பை படிவிழாவிலும் பல இளைய தலைமுறையினர் திருப்புகழ் பாடல்களை மனனமாக ,உணர்ச்சி பூர்வமாக பாடியது மனதுக்கு இதமளித்தது.கோயம்புத்தூர் நிகழ்ச்சிகளிலும் பலரை காண மகிழ்ச்சி  அடைகிறோம்.அண்மையில்  கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்காக திருப்புகழ் வகுப்புக்கள் அருளாளர்கள்  முர்த்தி தம்பதியினர் தொடங்கியுள்ளனர். வகுப்புக்கள் பல தலங்களில் விரிவடைந்து பல அன்பர்கள் தெய்வீக பணியில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.ஏனெனில் அவர்கள் ஆண்டவன் கட்டளைப்படி செயல்படுபவர்கள் . சில YouTube  தொகுப்புகளை கீழே  அளித்துள்ளோம்.


ஆன்மீக விழா .சென்னை 13.7.13.அருளாளர் சித்ரா மூர்த்தியின் உணர்ச்சி பூர்வமான அறிமுக உரையையும் கேளுங்கள்.


கோயம்புத்தூர் மாணவிகள் விஜயலக்ஷ்மி ,மீனாக்ஷி ,அனகா 




மும்பை ஆசிரியர்  வித்யா ஸ்ரீராம் அவர்களின் மாணவர்கள்  கல்பாத்தி பஜனை உற்சவத்தில் அளித்த  நிகழ்ச்சி


நம் கருத்து, கவலைப்படுவதில் ஒரு பயனும் இல்லை. நம் அன்பர்கள் வரலாறில் பூரா குடும்பமும் , மற்ற உறவினர்களும் ஈடுபட்டதை நாம் அறிவோம். காரணம் குடும்ப தலைவர்கள் தங்கள் தலைமுறையினரை மனம் உவந்து ஈடு படுத்தியதுதான்.அந்த மனம் இப்பொழுது மறைந்து வருவதுதான் அப்பட்டமான உண்மை.அதை களைந்து மூத்தவர்கள் செயல்பட்டால் நிலைமை மாறும். அவர்கள் குறைந்தபட்சம் தம் வாரிசுகளை திருப்புகழ் நிகழ்சிகளுக்கும் ,வகுப்புக்களுக்கும் அழைத்துவந்து ஆர்வத்தை புகுத்த வேண்டுகிறோம்.மற்றவை பெருமான் செயல்.

No comments:

Post a Comment