Saturday, 8 August 2015

"ஞான விபூஷணி" பாடல்


       திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                           (476 முதல் 503 வரை)

                                                                    பொது பாடல்




                                                                             


                                                                        பாடல் 

ஞானாவி பூஷணி காரணி காரணி
     காமாவி மோகினி வாகினி யாமளை
          மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன்

நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
     வேதாக மேயருள் தேவர்கள் தேவந
          லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே

தேனார்மொ ழீவளி நாயகி நாயக
     வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
          சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா

சீர்பாத சேகர னாகவு நாயினன்
     மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
          சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே

பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
     சூராடி யேகழு மீதினி லேறிட
          கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே

பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
     கூறாக வாளிதொ டூரகு நாயகன்
          பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே

வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
     சேணாடு ளோரவர் வீடதி டேறிட
          கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா

வாசாம கோசர மாகிய வாசக
     தேசாதி யோரவர் பாதம தேதொழ
          பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே

                                                         சொல் விளக்கம் 

ஞானா விபூஷணி கார் அணி காரணி ... 

ஞானத்தை விசேஷமானஅணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும்காரணமாக இருப்பவள்,

காமா விமோகினி வாகினி* யாமளை ... 

காமத்தை உயிர்களுக்குஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்தஉமை, மரகதப் பச்சை நிறத்தி,

மா மாயி பார்வதி தேவி குணாதரி ... 

மாயையில் வல்லவள், பார்வதிதேவி, நற் குணங்களை உடையவள்,

உமையாள் தன் நாதா க்ருபாகர தேசிகர் தேசிக ...

உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன
சிவபெருமானுக்கும் குருவே,

வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் ஈசா ... 

(சிவனுக்கு)வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே,

சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே ... 

சடையை உடையபரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடையகுழந்தையே,

தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக ... 

தேன் போலும் இனியமொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே,

வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன ... 

விண்ணுலகத்தில்உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே,

சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா ...

விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின்
இனிமையான கணவனே,

சீர்பாத சேகரன் ஆகவு நாயினன் மோகா விகார விடாய்கெடஓடவெ ...

உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும்
இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க,

சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே ...

 நன்றாககலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக.

பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே
கழு மீதினில் ஏறிட ... 

(உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றைஅணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு(வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து,

கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் வருவோனே ...

கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி)
ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே,

பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி
தொடு ரகுநாயகன் ... 

மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள்அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன்,

பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே ...

தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன்
ஆகிய இராகவனுடைய மருகனே,

வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ ... 

வாழ் நாள் அழியும்படிவந்த சூரர்கள் இறக்க,

சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட ... 

விண்ணுலகத்தில்வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ,

கோன் ஆக வரு நாத குரூ பர குமரேசா ... 

சேனைக்குத்தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே,

வாசா மகோசரமாகிய வாசக ... 

வாக்குக்கு எட்டாத திருவாக்கைஉடையவனே,

தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ ...

 நாடுகள்பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க,

பாசா விநாசகனாகவும் மேவிய பெருமாளே. ... 

பாசங்களைநீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.

* திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப்பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்.

                                                                சிறு விளக்கம் 





                                           
உலகத்துஉயிர்கள்உய்யும்பொருட்டுஇறைவன்திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல

                                                            பாடல் 


பாடல் வரிசை எண்   22                                                புத்தக வரிசை எண் 372

ராகம்  கானடா      அங்க தாளம்         தக தகிட    தகதிமி   தகதிமி  தகதிமி 

                                                 8 1/2               2 1/2             2              2              2

                                                                              பாடல் 


                                               


                                                       இதே ராகத்தில் மற்றொரு பாடல் 
  
                                                                                                                                                               

    முருகாசரணம்                                                                                                                                                                   

1 comment:

  1. கல்நெஞ்சங்களையும் கரைக்கும் காதிற்கினிய கானடா ராகப் பாடல்கள் !

    ReplyDelete