திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பா
(476 முதல் 503 வரை)
பொது பாடல்
பொது பாடல்
பாடல்
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான
நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
சொல் விளக்கம்
கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை
க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு ...
கடலை, பயறுஇவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழைஇனிய அமுது போன்ற சுவையுடன்
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்
கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற ...
பழுத்துள்ள முதிர்ந்தபலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன்,கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்துவளப்பம் பெறுவதற்காக,
அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற ...
அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,
நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்
ஒரு முருகு சண்முக என ...
பெரிய குடம் போன்ற வயிற்றினில்அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்றமுருகனே, ஷண்முகனே என்று
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் ...
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமைசிறுமையின் அலைவுடன் ...
கொடியதும் பெரிதானதுமான மிக்கவினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால்மனம் அலைச்சல் அடைந்து,
அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகைஒழியாதோ ...
விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும்,பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?
நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவிமதி பயம் உற ...
பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக்கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும்,
நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர்கொடுமுடி சட சட சட என ...
பூமியும் நெறு நெறு என அதிரவும்போர்க்களத்துக்குவந்தகொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள்சட சட சட என்று அதிர்ந்து வீழவும்,
பகர கிரி முடி கிடு கிடு கிடு என ...
சொல்லப்படும் எட்டுமலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும்,
நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதானநடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது ...
உவமை இல்லாதவேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும்வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி
முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத ...
வேகமாகஉக்கிரத்துடன்புவியைவலம்வந்ததாமரைபோன்றதிருவடிகளை உடையவனே,
வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹரஹர ஹரஎன
ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க,முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற,
அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே ...
தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து
சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே. ...
சரவணப்பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல
பாடல்
பாடல் வரிசை எண் 20 புத்தக வரிசை எண் 353
ராகம் பெஹாக் அங்க தாளம் தகிட தக திமி தக திமி தக திமி
7 1 /2 1 1/2 2 4
குருஜியின் குரலில் ஒரு விருத்தம்
/
பாடல்
குருஜியின் குரலில் பரவசப்படுத்தும் பெஹாக் விருத்தம் ! அடுத்து வரும் அன்பர்களின் பாடல் ஆனந்தம் அளிக்கின்றது!
ReplyDelete