ஆடி வெள்ளி விழா நிறைவு
அருளாளர் கோபால கிருஷ்ணனின் கை வண்ணத்தில்
எழுந்தருளிய அன்னை அபிராமி
விழாவுக்கு அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு அன்னையின் அருள் பெற்றனர் .பெரும்பாலான பெண்மணிகள் பாரம்பரிய உடையணிந்து வந்தது பெருமகிழ்ச்சி அளித்தது.மஞ்சள் குங்குமம் வளையல்கள் சகிதம் வரவேற்கப்பட்டது நிகழ்ச்சிக்கு சாந்தித்யத்தை அளித்தது
லலிதா சஹஸ்ரநாமம்.த்ரிசதி ,அஷ்டோத்ரம் பூஜா விதிகளுடன் தொடங்கிய தெய்வீக நிகழ்ச்சி துர்கா சந்திர கலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம் ,அன்னையைப்போற்றும் ஒரு திருப்புகழ் முதலியவற்றுடன் நிறைவேறிய இசைவழிபாடுஅன்பர்களை பரவசப்படுத்தி அன்னையின் சந்நிதானத்துக்கு
அழைத்து சென்றது என்று கூறினால் அது மிகையாகாது.
சில புகைப்பட காட்சிகள்.
உதவி ..அருளாளர் கே ஆர் .பாலசுப்ரமணியம்
அன்னை அபிராமியே சரணம்
ஆடிவெள்ளி விழா நிறைவு வைபவத்தில் அருளாளர் கோபாலகிருஷ்ணனின் கை வண்ணத்தில் எழுந்தருளிய அன்னை அபிராமி,அருளாளர் கே ஆர் .பாலசுப்ரமணியம் கை வண்ணத்தில் மிளிரும் புகைப்படங்கள் ஆன்மிக ஆனந்தம் அளிக்கின்றன!
ReplyDelete